search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DSP suspended"

    • பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை காதலிப்பதாக கூறி வலை வீசியுள்ளனர்.
    • பெண்ணிடம் மிரட்டி 600 கிராம் தங்க நகை, ரூ.35 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டனர்.

    கூடலூர்:

    இடுக்கி மாவட்டம் கட்டப்பணையைச் சேர்ந்தவர் மேத்யூ ஜோஸ் (வயது 36). ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் குமுளி செங்கரையைச் சேர்ந்த ஷகிர் (24) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் 2 பேரும் சேர்ந்து பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை காதலிப்பதாக கூறி வலை வீசியுள்ளனர்.

    இதில் திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்களும் இவர்கள் வலையில் விழுந்துள்ளனர். அவர்களை தங்கள் இடத்துக்கு வரவழைத்து ஆபாசமாக வீடியோ எடுத்து பின்னர் அதனையே அவர்களிடம் காட்டி பணம் பறிப்பதையே வாடிக்கையாக வைத்திருந்தனர்.

    கடந்த ஜூன் மாதம் அரியானாவைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் 2 பேரும் நட்பாக பழகி பின்னர் தங்கள் வலையில் விழ வைத்தனர். அந்த பெண்ணை குமுளிக்கு வரவழைத்து லாட்ஜில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

    மேலும் அதை வீடியோவாக எடுத்து அந்த பெண்ணிடம் மிரட்டி 600 கிராம் தங்க நகை, ரூ.35 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் குமுளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    விசாரணை அதிகாரிகளாக இருந்த குமுளி இன்ஸ்பெக்டர் அனுப்மோன், டி.எஸ்.பி. குரியாகோஸ் ஆகியோர் குற்றவாளிகளை கைது செய்யாமல் அவர்களுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். இதனால் அவர்கள் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.யிடம் புகார் அளித்தார். எஸ்.பி. உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இதை அறிந்ததும் அவர்கள் டெல்லிக்கு தப்பி ஓடினர். இருந்த போதும் அவர்கள் செல்போன் எண்களை ட்ரேஸ் செய்து 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க உடந்தையாக இருந்த இன்ஸ்பெக்டர் கடந்த மாதம் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது டி.எஸ்.பி. குரியாகோஸ் என்பவரையும் சஸ்பெண்டு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

    ×