search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cooperative under the Statutory Weights Act 2009 Act."

    • 14 வியாபாரிகள் மீது நடவடிக்கை
    • 5 ஆயிரம் அபராதம்

    வேலுார்

    சென்னை முதன்மை செயலரும், தொழிலாளர் கமிஷனருமான அதுல் ஆனந்த் உத்தரவின்பேரில், சென்னை தொழிலாளர் கூடுதல் கமிஷனர் உமாதேவி, சென்னை சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி சாந்தி ஆகியோர் அறிவுறுத்தலின் படியும், வேலூர் தொழிலாளர் இணை கமிஷனர் புனிதவதி வழிகாட்டுத லின்படியும், வேலுார் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) ஞானவேல் தலைமையில், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், முத்திரை ஆய்வாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர், வேலுார் நேதாஜி மார்க்கெட், மீன் மார்க்கெட், மெயின் பஜார், மாங்காய் மண்டி, கொணவட்டம், மேல்மொணவூர் மற்றும் ராணிப்பேட்டை பகுதிகளில் உள்ள காய்கறி, பூ, பழக்கடைகள் மற்றும் மீன் மற்றும் இறைச்சிக் கடைகளில் சட்டமுறை எடையளவு சட்டம் 2009 சட்டத்தின் கீழ் கூட்டாய்வு மேற்கொண்டனர்.

    இதில் மின்னணு தராசுகள் 22 மேஜை தராசுகள் 11 இடைகற்கள் 52 மேடை தராசு 2 விட்ட தராசுகள் 3 என மொத்தம் 120 தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன இது தொடர்பாக 14 வியாபாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இது போன்ற திகில் ஆய்வுகள் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் என மேற்குறிப்பிட்ட இடங்களில் வணிகர்கள் பயன்படுத்தும் தராசுகளை உரிய காலத்துக்குள் மறு முத்திரையிடவும் மறு முத்திரை சான்று தெரியும்படி கடைகளில் வைத்திருக்க வேண்டும் மேலும் மனிதர்கள் தராசுகளை மர்ம திரை செய்யாமல் இருந்தால் ஐந்து ஆயிரம் ரூபாய் அபராதமும், சான்று இல்லையெனில் ரூ.500 அபராதமும் விதிக்கப்படும் என தொழிலாளர் உதவி கமிஷனர் ஞானவேல் தெரிவித்தார்.

    ×