search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chandipur Integrated Test Range"

    200 கிலோ வெடிப் பொருளுடன் பாய்ந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்ட ‘பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணை இன்று வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்தது. #Supersonic #BrahMosmissile
    புவனேஸ்வர்:

    இந்தியா - ரஷியா கூட்டு தயாரிப்பான  ‘பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணை சுமார் 2 ஆயிரம் கிலோ எடை கொண்டதாகும். 200 கிலோ வெடிப் பொருளுடன் 290 கிலோ மீட்டர் தூரம் வரை தரைக்கு மேல் பறந்து சென்று தாக்கும்.

    ஏவப்பட்டதும் முதல்கட்டமாக ஒலியைவிட இரண்டு மடங்கு வேகமாக 14 கிலோமீட்டர் உயரம் வரை சீறிப்பாயும் ஆற்றல் கொண்ட இந்த ஏவுகணை, நிர்ணயிக்கப்பட்ட பாதையில் செல்லும்போது, தேவைப்பட்டால் இலக்கிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் இலக்கின் போக்குக்கு ஏற்ப திசைமாறிச் சென்று தாக்கும்.

    கடந்த 2001-ம் ஆண்டு முதன்முதலாக பரிசோதிக்கப்பட்ட இந்த ஏவுகணை தொடர்ந்து 2003-ம் ஆண்டு கடலில் இருந்தபடி விண்ணில் ஏவி பரிசோதிக்கப்பட்டது. இந்நிலையில், வங்காள விரிகுடா கடல் பகுதியில் இருந்து ‘பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணை இன்று மீண்டும் பரிசோதிக்கப்பட்டது.



    ஒடிசா மாநிலத்தின் பலசோரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சாந்திப்பூர் கடல் பகுதியில் இன்று காலை 10.15 மணியளவில் நடைபெற்ற இந்த பரிசோதனை வெற்றிகரமாக அமைந்ததாக இந்திய பாதுகாப்பு துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். #Supersonic #BrahMosmissile #BrahMostestfired #Chandipur
    ×