search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CITU Emphasis"

    • புதுவை மாவட்ட நீதிமன்றத்தில் தொழிலாளர் நீதிமன்றம் மற்றும் தொழிலாளர் தீர்ப்பாயத்தில் பெண் நீதிபதி பணியாற்றி வருகிறார்.
    • தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகளை சட்டம், இயற்கை நியதி, சமூக நீதி அடிப்படையில் நீதி பரிபாலனம் செய்வதில் பலவீனத்தை ஏற்படுத்து வதாக மாநில குழு கவலை தெரிவிக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில சி.ஐ.டி.யூ. மாநில செயலளார் சீனு வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாவட்ட நீதிமன்றத்தில் தொழிலாளர் நீதிமன்றம் மற்றும் தொழிலாளர் தீர்ப்பாயத்தில் பெண் நீதிபதி பணியாற்றி வருகிறார். இவர் செஞ்சியை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் புதுவைக்கு குடி பெயர்ந்து இங்கேயே சட்டம் பயின்று இங்கேயே மாஜிஸ்தி ரேட்டாக தேர்வாகி தற்போது மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வருகிறார்கள்.இவர் 5 ஆண்டுகள் புதுவை நீதித்துறையிலேயே தொடர்வது நியாயம் இல்லை.

    தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகளை சட்டம், இயற்கை நியதி, சமூக நீதி அடிப்படையில் நீதி பரிபாலனம் செய்வதில் பலவீனத்தை ஏற்படுத்து வதாக மாநில குழு கவலை தெரிவிக்கிறது.

    தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் இதுவரை வழங்கப்பட்டுள்ள இவரது தீர்ப்புகளை ஆய்வு செய்தால் இதன் உண்மை தன்மை வெளிப்படும். உழைப்பை மட்டுமே நம்பி வாழும் சாதாரண தொழிலாளர்கள்

    தங்களுக்கான நியாயத்தை நீதிமன்றத்தால் மட்டுமே வழங்க முடியும் என நம்புகிறார்கள்.

    எனவே, புதுவை அரசும், சென்னை உயர்நீதிமன்றமும் தலையிட்டு, புதுவை தொழி லாளர் நீதிமன்றம் மற்றும் தொழில் தீர்ப்பாயத்திற்கு பொருத்தமான நீதிபதியை நியமித்து, தொழிலா ளர்களின் நம்பிக்கையை பாதுகாத்து, எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும்.

    நீதித்துறையில் காலியாக உள்ள மாஜிஸ்திரேட், மாவட்ட நீதிபதி காலி பணியிடங்களை புதுவை மாநில வக்கீல்களுக்கு முன்னுரிமை அளித்து பணியமர்த்த வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×