search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Blocking traffic"

    • சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது
    • கலெக்டர் முருகேஷ் தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்காக பே கோபுர தெருவில் நாளை முதல் போக்குவரத்து தடை செய்யப்படுவதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-

    நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை உட்கடமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியில் சிமெண்ட் சாலை அமைக்கப்படும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    திருவூடல் தெரு- பே கோபுர தெரு சந்திப்பு (திரவுபதி அம்மன் கோவில்)முதல் வட ஒத்தவாடை தெரு வரை பணிகள் மேற்கொள்ளப்பட்டு ள்ளன.

    இப்பணி நிறைவு பெறும் வரை நாளை காலை 6 மணி முதல் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. இச்சாலையை மூடுவதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    தண்டராம்பட்டு மற்றும் மணலூர்பேட்டை சாலை வழியாக வரும் வாகனங்கள் மற்றும் பே கோபுரத் தெரு வழியாக நகரில் உள்ளே செல்லும் வாகனங்கள் அனைத்தும் காமராஜர் சிலையிலிருந்து கல் நகர், ஆடு தொட்டி தெரு, காந்தி நகர் புறவழிச்சாலை வழியாக மத்திய பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.தேரடி வீதியிலிருந்து நகருக்கு வெளியே செல்லும் வாகனங்கள் அனைத்தும் காந்தி சிலை, பூத நாராயணன் பெருமாள் கோவில், சின்ன கடை வழியாக செல்ல வேண்டும்.

    செங்கம் சாலையில் இருந்து திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்துக்கு வரும் வாகனங்கள் அனைத்தும், செங்கம் சாலை சந்திப்பில் இருந்து கிரிவலம் பாதை வழியாக மத்திய பேருந்து நிலையம் செல்ல வேண்டும் இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    ×