search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Attack on driver trying"

    • பிறந்தநாள் விழாவில் ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்ற டிரைவர் தாக்கப்பட்டார்.
    • பிறந்த நாள் விழாவுக்கு வந்திருந்த கரையாம்புத்தூரை சேர்ந்த பசுபதி மற்றும் சீனு ஆகியோருக்கும் ஆட்டோ கவியரசனுக்கு திடீரென வாய்தகராறு ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    பிறந்தநாள் விழாவில் ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்ற டிரைவர் தாக்கப்பட்டார்.

    கரையாம்புத்தூர் அருகே தமிழகப்பகுதியான களிஞ்சிக்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜி. (வயது 30). டிரைவர். சம்பவத்தன்று பட்டாம்பாக்கத்தில் நடந்த தனது நண்பரின் குழந்தை பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு விஜி தனது நண்பர் ஆட்டோ கவியரசன் என்பவருடன் சென்றார். அப்போது பிறந்த நாள் விழாவுக்கு வந்திருந்த கரையாம்புத்தூரை சேர்ந்த பசுபதி மற்றும் சீனு ஆகியோருக்கும் ஆட்டோ கவியரசனுக்கு திடீரென வாய்தகராறு ஏற்பட்டது.

    ஆட்டோ கவியரசனை இருவரும் சேர்ந்து தாக்கினர். இதனை விஜி தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தார். அப்போது ஆத்திரமடைந்த பசுபதி மற்றும் சீனு ஆகிய இருவரும் நீயார் இதனை தடுப்பதற்கு? உன்னை பார்க்க வேண்டிய இடத்தில் பார்த்துக்கொள்கிறோம் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர்.

    இந்த நிலையில் விஜி கரையாம்புத்தூர் குளத்து தெருவில் உள்ள மணிகண்டன் என்பவரை பார்க்க சென்றார். அப்போது அங்கிருந்த பசுபதியும் சீனுவும் விஜியை வழிமறித்து உன்னை அடித்தால் இங்கு யார் கேட்பார்கள் என கூறி கையாலும் தடியாலும் விஜியை சரமாரியாக தாக்கினார்கள்.

    மேலும் இது பற்றி போலீசில் புகார் தெரிவித்தால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி விட்டு சென்று விட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த விஜி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். பின்னர் இது குறித்து கரையாம்புத்தூர் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×