என் மலர்

  நீங்கள் தேடியது "பண மோசடி"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சித்தோடு நால்ரோட்டில் செல்போன் கடையில் நூதன முறையில் பணம் மோசடி செய்த வாலிபர்.
  • இதனைத் தொடர்ந்து சண்முகத்தை சித்தோடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  சித்தோடு:

  பவானி அருகே உள்ள சித்தோடு நால் ரோட்டில் அரவிந்தன் என்பவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரின் கடைக்கு அடிக்கடி ஒரு வாலிபர் வந்து செல்வார்.

  இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அரவிந்தன் கடைக்கு அந்த வாலிபர் தனது வங்கி கணக்குக்கு ரூ.25 ஆயிரம் மணி டிரான்ஸ்பர் செய்ய சொன்னார்.

  இதனைத் தொடர்ந்து அரவிந்தன் ரூ.25 ஆயிரம் வாலிபரின்வங்கி கணக்கில் மணி டிரான்ஸ்பர் செய்தார். பின்னர் அரவிந்தன் போன் மூலம் அவரை தொடர்பு கொண்டு பணம் கேட்க முயன்றார்.

  ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

  இது குறித்து அரவிந்தன் சித்தோடு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

  போலீசார் விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் எடப்பாடி, புதுப்பாளையம் மணியன்காரன் வலசு பகுதியைச் சேர்ந்த சண்முகம் (27) என்பதும் இவர் மணி டிரான்ஸ்பர் மூலம் பண மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  இதனைத் தொடர்ந்து சண்முகத்தை சித்தோடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சண்முகம் இது போல் யாராரிமாவது பணம் மோசடியில் ஈடுபட்டாரா? என போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • லண்டன் வாலிபர் அனுப்பிய பார்சலில் ரூ.2 கோடி நகை, வெளிநாட்டு கரன்சி இருக்கும் என நம்பிய கீதா, உடனடியாக அந்த பெண் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.8 லட்சம் பணத்தை அனுப்பினார்.
  • அடுத்த விநாடியில் அனைத்து செல்போன் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விட்டன. ஆனால் செல்போனில் பேசிய அந்த பெண் கூறியபடி எந்தவித நகையும் வரவில்லை. மேலும் வெளிநாட்டு கரன்சியும் கிடைக்கவில்லை.

  திருச்சி:

  திருச்சி மாவட்டம் துவாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் கீதா (வயது 25). பெயர் மாற்றப்பட்டுள்ளது. சாப்ட்வேர் என்ஜினீரான இவர் திருச்சி தில்லைநகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

  இந்தநிலையில் திருமண வயதை எட்டிய அவர் தனது விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் ஆன்லைன் திருமண தகவல் மையத்தில் மாப்பிள்ளை தேடும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது புரொபைலில் பெங்களூர் முகவரியில் ஒரு இளைஞரை பார்த்தார். பின்னர் அந்த இளைஞரும் கீதாவும் ஒருவரையொருவர் சுய அறிமுகம் செய்துகொண்டனர்.

  திருமணம் செய்து கொள்ளும் ஆசையுடன் இருந்தபோதிலும், அவரை பற்றி அறிந்து கொள்ள நட்புடன் தொடங்கிய கீதாவின் இந்த பழக்கம் நாளடையில் சாட்டிங் செய்யும் அளவுக்கு மாறியது. அப்போது அந்த வாலிபர் தனது சொந்த ஊர் பெங்களூர் என்றும், தற்போது லண்டனில் வசித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

  அப்போது அந்த வாலிபர் தான் சம்பாதித்து வைத்திருக்கும் நகை மற்றும் வெளிநாட்டு கரன்சி ஆகியவை இந்திய மதிப்பில் ரூ.2 கோடி அளவுக்கு இருக்கிறது. அதனை பார்சலில் உனது பெயருக்கு அனுப்பி வைக்கிறேன். அதனை வாங்கி வைத்துக் கொள். இரண்டு மாதங்களில் தான் இந்தியா திரும்பி விடுவேன். பின்னர் நாம் இருவரும் திருமணம் செய்து தமிழ்நாட்டில் செட்டில் ஆகலாம் எனக் கூறியுள்ளார்.

  இதனை கீதா முழுமையாக நம்பினார். அடுத்த ஒரு சில தினங்களில் டெல்லி விமான நிலையத்தில் இருந்து பேசுவதாக ஒரு பெண் கீதாவின் செல்போனுக்கு அழைப்பு விடுத்தார். லண்டனிலிருந்து தங்களது பெயருக்கு ஒரு பார்சல் வந்துள்ளது.

  இதனை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி, சுங்கத்துறை அனுமதி ஆகியவை பெற வேண்டும். மேலும் அந்த பொருட்களுக்காக குறிப்பிட்ட வரியையும் செலுத்த வேண்டும். வெளிநாட்டு கரன்சியை மாற்ற வேண்டும் என ஒவ்வொன்றாக சொல்லி ரூ.8 லட்சம் பணம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

  லண்டன் வாலிபர் அனுப்பிய பார்சலில் ரூ.2 கோடி நகை, வெளிநாட்டு கரன்சி இருக்கும் என நம்பிய கீதா, உடனடியாக அந்த பெண் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.8 லட்சம் பணத்தை அனுப்பினார். அடுத்த விநாடியில் அனைத்து செல்போன் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விட்டன. ஆனால் செல்போனில் பேசிய அந்த பெண் கூறியபடி எந்தவித நகையும் வரவில்லை. மேலும் வெளிநாட்டு கரன்சியும் கிடைக்கவில்லை.

  இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட கீதா, உடனடியாக இதுகுறித்து திருச்சி புறநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் உடனடியாக விரைந்து விசாரணை மேற்கொண்டார். இதில் கீதா அனுப்பிய ரூ.8 லட்சம் பணம் கொல்கத்தாவில் உள்ள இந்தியன் வங்கி கணக்கிற்கு சென்றது தெரியவந்தது.

  உடனே அங்குள்ள வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு கணக்கை முடக்கினர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் சாப்ட்வேர் என்ஜினீயரிடம் மோசடி செய்த நபர் நைஜீரியாவை சேர்ந்த வாலிபர் என்பதும் தெரிய வந்தது. மேற்கு வங்காளத்தில் தங்கியிருந்து அந்த வாலிபர் திருச்சி பெண்ணை ஏமாற்றியுள்ளார்.

  இது பற்றி சைபர் கிரைம் போலீசார் கூறும்போது, ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவரது ஆசையை தூண்ட வேண்டும் என்பார்கள். அந்த அடிப்படையில் இந்த இளம்பெண் ஏமாந்துள்ளார். பணத்தை யாரும் பார்சலில் அனுப்புவதில்லை. எந்தப் பொருள் அனுப்பினாலும் அனுப்புபவர் வரி செலுத்த வேண்டும். ஆகவே போலி மோசடி பேர் வழிகளிடம் நம்பி பணத்தை யாரும் இழக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சென்னை விமான நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி புதுவை பெண்ணிடம் ரூ.14½ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
  • இது குறித்து புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  புதுச்சேரி:

  புதுவை நெல்லித்தோப்பு பெரியார் நகர் 9-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் லெனின். இவரது மனைவி ஜனனி.

  கடந்த ஆண்டு இவர் சமூக வலைதளத்தில் சென்னை விமான நிலைய நிறுவனத்துக்கு கஸ்டமர்ஸ் சர்வீஸ் பணிக்கு ஆட்கள் தேவை என்று தகவல் வந்ததையடுத்து அந்த நிறுவனத்துக்கு இ.மெயில் மூலம் விண்ணப்பித்தார்.

  அப்போது அந்த நிறுவன பெண் அனுசிங் மற்றும் பங்கஜ் ஆனந்த், ஹேமாகோபால்ரத்தினம் ஆகிய 3 பேர் ஜனனியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு தாங்கள் விண்ணப்பித்த பணியை வாங்கி தருகிறோம். அதற்கு நீங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்துக்கு ரூ.1,800 செலுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். அதன்படி ஜனனி வங்கி மூலம் ரூ.1,800 செலுத்தினார்.

  பிறகு சான்றிதழ்களை சரிபார்க்க ரூ.6,500, வேலை செய்வதற்கான இடம், சம்பளம் குறித்த விபரங்களுக்கு ரூ.19,500 செலுத்த வேண்டும் என்று கூறினர். அதனையும் ஜனனி வங்கி மூலம் செலுத்தினார். இதுபோன்று சிறுக சிறுக ஜனனியிடம் பல காரணங்களை கூறி அவர்கள் ரூ.16 லட்சத்து 48 ஆயிரத்து 680-ஐ பெற்றனர்.

  ஆனால் அவர்கள் விமான நிறுவனத்தில் வேலை வாங்கி தரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஜனனி ஒருமுறை நேரடியாக அந்த நிறுவனத்துக்கு சென்றார். அப்போது அங்கிருந்த ஒரு பெண் முக்கிய கூட்டம் ஒன்று நடப்பதாகவும், பிறகு வந்து பார்க்கும்படி ஜனனியை திருப்பி அனுப்பி விட்டார்.

  அதன் பின்னர் ஜனனி அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது நேர்காணலுக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். அதன்படி கடந்த ஜனவரி 26-ந் தேதி ஜனனி அந்த நிறுவனத்துக்கு சென்ற போது இன்று குடியரசு தினம் என்பதால் நேர்காணல் செய்யமுடியாது என்று திருப்பி அனுப்பி விட்டனர்.

  இதன் பின்பு ஜனனி விசாரித்த போது சென்னை விமான நிறுவனத்துக்கு இதுபோன்று யாரையும் வேலைக்கு எடுக்கவில்லை என்று தெரியவந்தது. மேலும் ஜனனியிடம் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்ற 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ஜனனி இதுகுறித்து புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கார் விற்பனையாளர் ரூ. 9 லட்சம் பண மோசடியில் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
  • போலீசார் அவர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  தாடிக்கொம்பு:

  கரூர் மாவட்டம் புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் தனது 2 கார்களை விற்பனை செய்வதற்காக திண்டுக்கலைச் சேர்ந்த கார் விற்பனையாளர் வேளாங்கன்னி என்ற பிரபுவை அணுகினார்.

  கடந்த 9 மாதங்களுக்கு முன்பு 2 கார்களையும் விற்று விட்டு ரூ.9 லட்சத்து 30 ஆயிரம் பணத்தை பிரபு பெற்றுக் கொண்டார்.

  ஆனால் அந்த பணத்தை கருப்பசாமியிடம் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். பல முறை பணத்தை கேட்டும் அவர் தராததால் இது குறித்து தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் கருப்பசாமி புகார் அளித்தார்.

  சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் பணம் மோசடி செய்த பிரபு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருட்டு நடந்த ஏ.டி.எம். மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது இளம்பெண் ஒருவர் மேற்கண்ட 5 திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
  • திருடிய பணத்தின் மூலம் மணிமேகலை ரூ. 50 ஆயிரம் மதிப்பில் தங்க செயின் மற்றும் வீட்டுக்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கியுள்ளார்.

  மதுரை:

  மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்தவர் கோபால் (வயது 70). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணத்தை டெபாசிட் செய்ய சென்றார். அப்போது அங்கிருந்த 24 வயதுடைய பெண் கோபாலுக்கு உதவி செய்வதாக கூறியுள்ளார்.

  இதனை நம்பிய அவர் தான் கொண்டு வந்திருந்த ரூ. 15 ஆயிரத்தை அந்த பெண்ணிடம் கொடுத்து குறிப்பிட்ட வங்கி எண்ணிற்கு டெபாசிட் செய்யுமாறு கூறியுள்ளார். சிறிது நேரத்தில் அந்த பெண் கோபாலிடம் பணத்தை டெபாசிட் செய்துவிட்டதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

  இந்த நிலையில் வீட்டுக்கு சென்ற கோபாலுக்கு பணம் டெபாசிட் செய்தது தொடர்பான குறுஞ்செய்தி எதுவும் வரவில்லை. இதனால் கோபால் உடனே குறிப்பிட்ட வங்கிக்கு சென்று விசாரித்தபோது, பணம் டெபாசிட் செய்யவில்லை என தெரியவந்தது.

  இளம்பெண் முதியவரை ஏமாற்றி ரூ. 15 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளார். இது தொடர்பாக தல்லாகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், உதவி கமிஷனர்கள் சுரேஷ்குமார் (தல்லாகுளம்), சூரக்குமார் (அண்ணா நகர்) அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு கேமிராக்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது இளம்பெண் முதியவரின் பணத்தை திருடியது தெரியவந்தது.

  இதேபோல் தல்லாகுளம் கண்மாய் மேலத்தெருவைச் சேர்ந்த சுந்தர் (41) என்பவரும் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கச் சென்றபோது அவரிடம் இளம்பெண் ஒருவர் நைசாக பேசி ரூ. 19 ஆயிரத்து 500-ஐ திருடியுள்ளார்.

  கரும்பாலை சோனையர்கோவில் தெருவைச் சேர்ந்த நாகலட்சுமி என்பவரிடமும் மர்மநபர் ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ. 10 ஆயிரத்து 500-ஐ திருடியுள்ளார்.

  மதுரை கருப்பாயூரணி பாரதிபுரம் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி ஜெனட் மேரி (63). அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் 17-ந் தேதி குருவிக்காரன் சாலையில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த இளம்பெண் ஜெனட் மேரிக்கு உதவுவது போல் அவரது ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ. 69 ஆயிரத்தை திருடியுள்ளார்.

  சிவகங்கை மாவட்டம் கீழக்கோவிலைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி போஸ் என்பவரும் தனது ஏ.டி.எம். கார்டு மூலம் 16 ஆயிரத்து 300 ரூபாயை மர்ம நபரிடம் பறி கொடுத்தார். 5 பேரிடமும் ரூ. 1 லட்சத்து 30 ஆயிரத்தை இளம்பெண் திருடியுள்ளார்.

  மேற்கண்ட 5 ஏ.டி.எம். பணம் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். திருட்டு நடந்த ஏ.டி.எம். மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது இளம்பெண் ஒருவர் மேற்கண்ட 5 திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

  இதை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், தேனி மாவட்டம் கொண்டமாணிக்கம்பட்டி மன்னர் நாயக்கர் தெருவைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் மனைவி மணிமேகலை (24) என்பவர் முதியவர்களை குறிவைத்து ஏ.டி.எம். மையத்தில் பணம் திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். திருடிய பணத்தின் மூலம் மணிமேகலை ரூ. 50 ஆயிரம் மதிப்பில் தங்க செயின் மற்றும் வீட்டுக்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கியுள்ளார். அதனையும் போலீசார் பறிமுதல் செய்து கைதான பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேனி வாலிபரிடம் ரூ.36 லட்சம் மோசடி செய்த நபரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்
  • மோசடி நபருக்கு சைபர் கிரைம் போலீசார் வலை

  தேனி:

  தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் கேட்டரிங் முடித்துவிட்டு அமெரிக்காவில் வேலை பார்த்தார். பின்னர் அவர் சொந்தஊர் திரும்பி உள்ளார். இவரது உறவினர் அஜீகண்ணனின் முகநூல் கணக்கை பயன்படுத்தினார். அதில் அமெரிக்காவை சேர்ந்த எமிலிஜோன்சுடன் பழக்கம் ஏற்பட்டது.

  அப்போது அவர் தான் அமெரிக்கராணு வத்தில் நர்சாக பணி புரிந்து வருவதாகவும், சிரியாவில் ராணுவ மீட்பு நடவடிக்கையின்போது கலவரகாரர்களிடம் இருந்து மிகப்பெரிய அளவில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இதில் தனது பங்கு தொகையாக ரூ.20 லட்சம் அமெரிக்கடாலர் கிடைக்கும் என கூறியுள்ளார்.

  அதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.15 கோடியே 81 லட்சத்து 80 ஆயிரமாகும். அந்த பணத்தை பத்திரமாக வைத்திருக்க நம்பிக்கையான நபர்கள் அமெரிக்காவில் இல்லை. எனவே இந்தியா அனுப்புவதாக முருகானந்தத்திடம் தெரி வித்துள்ளார்.

  அதற்காக முருகானந்த த்திற்கு 30 சதவீதம் கமிசன் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும் டெல்லி விமான நிலையத்தில் இருந்து பேசுவதாக மற்றொரு நபர் முருகானந்தத்தை தொடர்பு கொண்டு பார்சல் வந்துள்ளது. அதற்கு கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் செய்ய ரூ.8 லட்சத்து 64 ஆயிரத்து 790 வங்கி கணக்கில் செலுத்துங்கள் என கூறியுள்ளார்.

  மேலும் தொடர்ந்து பல தவணையாக ரூ.36 லட்சத்து ரூ.31 ஆயிரம் பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. ஆனால் கூறியபடி பார்சல் பணம் அவருக்கு வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முருகானந்தம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அரங்க நாயகி, சப்-இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு குறுஞ்செய்தி சென்றுள்ளது.
  • சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  திருப்பூர்,

  திருப்பூர் மாவட்ட கலெக்டராக வினீத் இருந்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கலெக்டர் வினீத் பெயரில், அவரது புகைப்படத்துடன் வாட்ஸ்-அப் எண்ணில் இருந்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு குறுஞ்செய்தி சென்றுள்ளது. அதில் எவ்வாறு இருக்கிறீர்கள்? வேலை எவ்வாறு செல்கிறது? என குறிப்பிடப்பட்டு இருந்தது.

  போலி வாட்ஸ் அப் கணக்கு

  இதற்கு அரசு அதிகாரிகள் சிலர் பதில் அனுப்பியுள்ளனர். இதன் பின்னர் வங்கி விவரம் உள்ளிட்ட பணம் தொடர்பான விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் இது குறித்து கலெக்டர் வினீத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

  அப்போது அவரது பெயரில், அவரது புகைப்படத்தை பயன்படுத்தி வாட்ஸ்-அப் கணக்கு போலியாக தொடங்கி, மர்ம ஆசாமிகள் மோசடியில் ஈடுபட முயற்சி செய்தது தெரியவந்தது. இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  போலீசில் புகார்

  இதற்கு முன்பு திருப்பூர் மாவட்ட கலெக்டராக விஜயகார்த்திகேயன் இருந்த போது, அவரது பெயரில் போலியாக பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி சிலரிடம் மர்ம ஆசாமிகள் பணம் கேட்டனர். இது தொடர்பாகவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

  இந்த சம்பவம் குறித்து கலெக்டர் வினீத் கூறியதாவது:- போலி யாக வாட்ஸ்-அப் கணக்கு தொடங்கி, பலருக்கும் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். இது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் விசா ரணையில் முதற்கட்டமாக அந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்த போது, செல்போன் டவர் ராஜஸ்தானில் காண்பித்துள்ளது. இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனது பெயரில் இருந்தோ அல்லது புகைப்படத்தை பயன்படுத்தியோ ஏதாவது எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்தால் போலீசில் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு நாராயண பெருமாள் அவரது மகள் மற்றும் மனைவி கேட்டுள்ளனர். அப்போது ரூ.50 ஆயிரம் மட்டும் கொடுத்து உள்ளார். மீதமுள்ள ரூ.6 லட்சத்து 40 ஆயிரம் இதுவரை கொடுக்கவில்லை.
  • இது குறித்து நாராயண பெருமாள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார்.

  என்.ஜி.ஓ. காலனி:

  நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள முகிலன்விலையை சேர்ந்தவர் நாராயண பெருமாள் (வயது 62), ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்.

  இவருக்கும், பார்வதிபுரம் ஜெ.கே.நகர் பகுதியை சேர்ந்த ஒப்பந்தக்காரர் ஜெயக்குமார் (46) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவி சுனிதா (37) இருவரும் நாராயணபெருமாளிடம் அவரது மகளின் கணவருக்கு மின்சார வாரியத்தில் இளநிலை மின் பொறியாளர் வேலை வாங்கித்தருவதாக கூறி உள்ளனர்.

  இதையடுத்து ஜெயக்குமாரின் மனைவி சுனிதாவின் வங்கி கணக்கில் நாராயண பெருமாள் முதலில் ரூ.1 லட்சத்து 90 ஆயிரமும், அதன்பின்னர் ரொக்கமாக ரூ.5 லட்சமும் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய பின்னர் ஜெயக்குமாரும் அவரது மனைவியும் வேலை எதுவும் வாங்கி கொடுக்கவில்லை.

  இதனால் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு நாராயண பெருமாள் அவரது மகள் மற்றும் மனைவி கேட்டுள்ளனர். அப்போது ரூ.50 ஆயிரம் மட்டும் கொடுத்து உள்ளார். மீதமுள்ள ரூ.6 லட்சத்து 40 ஆயிரம் இதுவரை கொடுக்கவில்லை.

  இது குறித்து நாராயண பெருமாள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார். அவர் புகார் குறித்து விசாரிக்க கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாவுக்கு உத்தரவிட்டார். அவர் நடத்திய விசாரணைக்கு பின்னர் ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவி சுனிதா ஆகியோர் மீது சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

  சுசீந்திரம் போலீஸ் (பொறுப்பு )இன்ஸ்பெக்டர் காந்திமதி சப்-இன்ஸ்பெக்டர் கபிரியேல் ஆகியோர் ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவி சுனிதா மீது மோசடி உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

  இந்நிலையில் நேற்று ஆரல்வாய்மொழி பகுதியில் ஒப்பந்தக்காரர் ஜெயக்குமார் பதுங்கியிருப்பதாக சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சாய் லெட்சுமி மற்றும் போலீசார் ஆரல்வாய்மொழி பகுதிக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த ஜெயக்குமாரை கைது செய்து நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

  போலீசார் நடத்திய விசாரணையில் ஜெயக்குமார் மீது சென்னை ஆவடி காவல் நிலையம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் மோசடி, செக் மோசடி உள்பட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எஸ்.பி. சசாங்சாய் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் புகார் மனுவை பெற்றுக்கொண்டார்.
  திருப்பூர்:

  திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர்   காசிநாதன். இவரது மனைவி ராக்கம்மாள். இவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் லோகேஷ்குமார், சக்திவேல் ஆகியோர் பல்லடத்தில்ரியல்எஸ்டேட், தறி எந்திரம் வாங்குதல் மற்றும் விற்பனை செய்வது, ஏலச்சீட்டு நடத்துவது உள்ளிட்ட தொழில்கள் நடத்தி வந்துள்ளனர்.

  மேலும் அப்பகுதி பொதுமக்களிடம் பழகி வந்த அவர்கள் தொழிலை விரிவுப்படுத்துவதற்காக பலரிடம்   கடன் வாங்கியதாக தெரிகிறது. சுமார் ரூ.3கோடியே  63 லட்சம் வரை  வாங்கினராம். ஆனால் அதனை மீண்டும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளதாக கடன் கொடுத்த பொதுமக்கள்  புகார் தெரிவித்துள்ளனர்.

  இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தரக்கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு  வந்தனர். அப்போது அங்கு வந்த எஸ்.பி.சசாங்சாய்  பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் புகார் மனுவை பெற்றுக்கொண்டார்.

  அப்போது பொதுமக்கள் கண்ணீர் மல்க புகார் தெரிவித்தனர். பணத்தை பெற்றுதரும்படியும் கேட்டுக்கொண்டனர். அப்போது நடவடிக்கை எடுப்பதாக எஸ்.பி.,உறுதியளித்தார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மகனின் கல்விக்காக வங்கியிலிருந்து கடன் பெற்று பெண் வைத்திருந்த ரூ.9.97 லட்சம் ரூபாயை, வங்கி மானேஜர் பேசுவதாக போனில் கூறி ஏ.டி.எம் கார்டு விபரங்களை வாங்கி 28 முறை சிறிது சிறிதாக மர்ம நபர் சுருட்டியுள்ளான்.
  மும்பை:

  வங்கிக்கணக்கு, ஏடிஎம் கார்டு உள்ளிட்ட விபரங்களை யாருக்கும் தெரிவிக்க கூடாது என வங்கிகள் காட்டுகத்தலாக கூறி வருகிறது. போனில் மானேஜரோ அல்லது வங்கி அதிகாரிகளோ பேச மாட்டார்கள் எனவும் வங்கிகள் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றன. அதையும், மீறி பலர் மோசடி பேர்வழிகளிடம் பணத்தை இழந்துள்ளனர். 

  மும்பையில் உள்ள நேருல் செக்டார் பகுதியில் வசித்து வரும் தஸ்னிம் மோதக் என்பவர், தனது மகனின் படிப்புக்காக வங்கி ஒன்றில் ரூ.10 லட்சம் கடனாக பெற்றுள்ளார். அந்த ரூபாயை தனது வங்கிக்கணக்கில் அவர் சேமித்து வைத்துள்ளார். கடந்த மாதம் வங்கி மானேஜர் பேசுவதாக போனில் தொடர்பு கொண்ட ஆசாமி, உங்களது ஏடிஎம் கார்டு செயலிழந்து விட்டது. மீண்டும் அதனை சரிசெய்ய பாஸ்வேர்டு, கார்டு எண் ஆகியவற்றை கூறவும் என பேசி வாங்கியுள்ளார்.

  கார்டு விபரங்களை பெற்றாலும், அந்த ஆசாமியால் பணத்தை சுருட்ட முடியவில்லை. ஒன் டைம் பாஸ்வேர்டு தஸ்னிம் மோதக்கின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவலாக வரும் என்பதால், அந்த ஒன் டைம் பாஸ்வேர்ட் இல்லாமல் பணத்தை பரிமாற்றம் செய்ய முடியவில்லை.

  இதனை அடுத்து, மோதக்கை தொடர்பு கொண்ட அந்த ஆசாமி ஒன் டைம் பாஸ்வேர்டை பெற்றுள்ளார். ஒரு தடவை, இரண்டு தடவை அல்ல 28 தடவை இப்படி போனில் பேசி ஒன் டைம் பாஸ்வேர்டை மோதக்கிடம் இருந்து பெற்று கொஞ்சம் கொஞ்சமாக ரூ.9.97 லட்சம் பணத்தை அந்த ஆசாமி சுருட்டியுள்ளார்.

  ஒவ்வொரு முறையும் வங்கிக்கணக்கில் இருந்து பணம் பரிமாற்றம் செய்யும் போதும் மோதக்கின் செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. ஆனால், அவர் அதனை கண்டு கொள்ளவில்லை. வங்கிக்கு சென்று பாஸ்புக்கை பிரிண்ட் செய்யும் போது தான் கணக்கில் இருந்த ரூபாய் கரைந்து போனது அவருக்கு தெரிய வந்துள்ளது.

  இதனை அடுத்து, போலீசுக்கு சென்று மோதக் புகார் அளிக்க, போலீசார் அந்த ஆசாமியை தேடி வருகின்றனர். 28 முறை பணம் போயுள்ளதாக குறுந்தகவல் வந்தும் மோதக் ஏன் சந்தேகம் அடையாமல், ஒவ்வொரு முறையும் குற்றவாளிக்கு ஒன் டைம் பாஸ்வேர்டை கூறியுள்ளது ஏன்? என குழப்பமாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
  ×