என் மலர்
புதுச்சேரி

புதுச்சேரி தொழிலதிபரிடம் நூதன முறையில் ரூ.21½ லட்சம் பறிப்பு
- வரி பரீசிலனை கட்டணம் பணம் செலுத்த வேண்டும் தெரிவித்துள்ளார்.
- புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி முதலியார் பேட்டை பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது.
அதில் பேசியவர் தன்னை கேரளா மாநில லாட்டரி சீட்டு ஏஜெண்டு என அறிமுகம் செய்து கொண்டு பேசினார். அப்போது அவர் எங்களது லாட்டரி சீட்டில் உங்களுக்கு ரூ.12 கோடி பரிசு விழுந்துள்ளது. அதற்காக வரி பரீசிலனை கட்டணம் பணம் செலுத்த வேண்டும் தெரிவித்துள்ளார்.
பரிசு விழுந்த ஆசையில் அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு தொழிலதிபர் ரூ.21 லட்சத்து 61 ஆயிரத்து 916 அனுப்பினார். பின்னர் எந்த தகவலும் வராததால் அதிர்ச்சியடைந்த தொழிலதிபர் நூதன முறையில் பணம் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார்.
பின்னர் இதுபற்றி புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






