என் மலர்
நீங்கள் தேடியது "திருட்டு"
- வீரம் கொண்ட அம்மன் கோவிலின் நிர்வாகியாக பாலசுப்பிரமணியன் என்பவர் இருந்து வருகிறார்.
- திருட்டு குறித்து பாலசுப்பிரமணியன் ஊத்துமலை போலீசில் புகார் அளித்தார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள சண்முகாபுரம் கிராமத்தில் வீரம் கொண்ட அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் நிர்வாகியாக அதே ஊரில் கீழத்தெருவில் வசிக்கும் பாலசுப்பிர மணியன்(வயது 53) என்பவர் இருந்து வருகிறார்.
சம்பவத்தன்று அவர் கோவிலுக்கு சென்று பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த 4 கிராம் எடை கொண்ட தங்கப்பொட்டு திருட்டு போயிருந்தது.
இதுதொடர்பாக பாலசுப்பிரமணியன் ஊத்துமலை போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபரை தேடி வருகின்றனர்.
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி கொள்ளையன் மணிகண்டன் பரிதாபமாக இறந்தான். இதுபற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திருட சென்ற இடத்தில் 3-வது மாடியில் இருந்து விழுந்து கொள்ளையன் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:
சைதாப்பேட்டை, சேஷாசலம் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
நேற்று இரவு அவர் காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கினார். இந்த நிலையில் நள்ளிரவு மர்ம வாலிபர் ஒருவர் திடீரென மோகன்ராஜின் வீட்டுக்குள் புகுந்தான். அவன் அங்கிருந்த விலை உயர்ந்த செல்போனை திருடிவிட்டு வீட்டுக்குள் வேறு ஏதாவது பொருட்கள் உள்ளதா என்று நோட்டமிட்டான்.
அந்த நேரத்தில் சத்தம் கேட்டு மோகன் ராஜ் எழுந்தார்.வீட்டுக்குள் திருடன் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டபடி படி திருடனை பிடிக்க முயன்றார்.
இதையடுத்து உஷாரான கொள்னையன் திருடிய செல்போனை வீசி எறிந்து விட்டு அவரிடம் சிக்காமல் இருப்பதற்காக 3-வது மாடியில் இருந்து குதித்தான். அருகில் மரம் இருப்பது தெரியாமல் அவன் குதித்தால் அதில் சிக்கிக் கொண்டான். மேலும் 3-வது மாடியில் இருந்து விழுந்ததால் கொள்ளையன் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினான்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சைதாப்பேட்டை போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் மரக்கிளையில் சிக்கி படுகாயம் அடைந்த திருடனை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. விசாரணையில் அவன் சைதாப்பேட்டை, கோட்டமேடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது31) என்பது தெரிந்தது. அவன் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் மற்றும் கஞ்சாவிற்பனை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி கொள்ளையன் மணிகண்டன் பரிதாபமாக இறந்தான். இதுபற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருட சென்ற இடத்தில் 3-வது மாடியில் இருந்து விழுந்து கொள்ளையன் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழ்செல்வி அரவிந்தன் கைப்பையில் இருந்த வைர மோதிரத்தை திருடியுள்ளார்.
- அரவிந்தன் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார்.
கோவை,
கோவை ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரை சேர்ந்தவர் அரவிந்தன் . டாக்டர். இவரது வீட்டில் கோவையை சேர்ந்த தமிழ்செல்வி ( வயது45) என்பவர் தங்கி இருந்து வீட்டு வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், அரவிந்தன் தனது கைப்பையில் வைத்திருந்த வைர மோதிரம் காணாமல் போனது.
இதுகுறித்து அவர் சந்தேகத்தின் பேரில், தமிழ் செல்வியிடம் கேட்டபோது முன்னுக்குபின் முரணாக பதில் அளித்து அதனை எடுக்க வில்லை என கூறி மறுத்தார். இதில் ஏற்பட்ட பிரச்சினையில் அவர் தமிழ் செல்வியை வேலையை விட்டு நீக்கி விட்டார். பின்னர் அவரது வீட்டில் சரோஜா என்ற பெண்ணை வேலைக்கு அமர்த்தினார்.
சரோஜா, தமிழ்செல்வியிடம் சென்று காணாமல் போன வைர மோதிரம் குறித்து கேட்ட போது, அவர் தான் வைர மோதிரத்தை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து தமிழ்செல்வி அந்த மோதிரத்தை திருப்பி கொடுத்து விட்டார். தொடர்ந்து அரவிந்தன் தனது வீட்டு பீரோவில் வைத்திருந்த 11 பவுன் தங்க நகை, 2 வைர மூக்குத்தி, 4 வாட்சுகள் மற்றும் ரூ.2 லட்சம் பணம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தார்.
இவற்றின் மொத்த மதிப்பு ரூ.11 லட்சம் ஆகும். இதுகுறித்து அரவிந்தன் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். அதில் வேலைக்கார பெண் தமிழ்செல்வி மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- வீடு புகுந்து பெண்ணிடம் நகை திருடப்பட்டது.
- இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள வலங்காங்குளம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்(40). அரசு பஸ் மெக்கானிக். இவரது மனைவி வனிதா(35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று இரவு வீட்டை பூட்டாமல் வனிதா கீழ் பகுதியிலும், கனகராஜ் மாடியிலும் தூங்கியுள்ளனர். அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் வனிதா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை பறித்துள்ளனர்.
அப்போது வனிதா கூச்சலிட்டதை கேட்டு கனகராஜூம், அக்கம் பக்கத்தினரும் வந்தனர். ஆனால் அதற்குள் மர்மநபர்கள் தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் சிந்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒரு மர்மநபர் காலை 4.45 மணியளவில் கோவில் உட்பிரகாரத்தை சுற்றி வரும் காட்சி கேமிராவில் பதிவாகி இருந்தது.
- அக்கம் பக்கத்தில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த அந்த ஆசாமி கோவில் கதவை திறந்து உள்ளே புகுந்தார்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மீனாட்சிபுரத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரி வழக்கம்போல் காலையில் நடைதிறந்து பூஜைகள் செய்ய வந்தார். அப்போது கருவறையில் அம்மனின் கழுத்தில் இருந்த தங்க நகை மற்றும் பூஜை தட்டில் இருந்த பணம் ஆகியவை திருடு போயிருந்தது. இதைப்பார்த்த பூசாரி அதிர்ச்சியடைந்து கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தார்.
அதில் ஒரு மர்மநபர் காலை 4.45 மணியளவில் கோவில் உட்பிரகாரத்தை சுற்றி வரும் காட்சி பதிவாகி இருந்தது. பின்னர் அக்கம் பக்கத்தில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த அந்த ஆசாமி கோவில் கதவை திறந்து உள்ளே புகுந்தார். பயபக்தியுடன் சாமி கும்பிட்டு விட்டு அம்மனின் கழுத்தில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிக்கொண்டு தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டார்.
இந்த காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நிதி நிறுவனத்தில் ரூ.1¾ லட்சம்-பொருட்கள் திருட்டப்பட்டது.
- கம்ப்யூட்டர் மானிட்டர் உள்ளிட்ட பொருட்களும் மாயமாகி இருந்தன.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி பகுதியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது அலுவலகத்தில் 4 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு இரு சக்கர வாக னங்களுக்கு கடன் அளித்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் இரவு கடைக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த முன்பணம் ரூ.1 லட்சம் மற்றும் வசூல் செய்த சீட்டு பணம் ரூ.75 ஆயிரம் ஆகியவற்றை அலுவ லகத்துக்குள் வைத்து பூட்டி விட்டு பாக்கியராஜ் வீட்டுக்கு சென்றார்.
நேற்று காலை மீண்டும் அலுவலகத்தை திறப்ப தற்காக வந்தார். அப்போது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அலுவலகத்தில் வைத்து சென்ற ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் பணம் திருடுபோய் இருந்தது. மேலும் கம்ப்யூட்டர் மானிட்டர் உள்ளிட்ட பொருட்களும் மாயமாகி இருந்தன. மர்ம நபர்கள் நள்ளிரவில் பூட்டை உடைத்து அலுவலகத்தில் புகுந்து பணம் மற்றும் பொருட்களை எடுத்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து மல்லி போலீஸ் நிலையத்தில் பாக்கியராஜ் புகார் செய் தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரே நாளில் பல இடங்களில் நடந்த கொள்ளை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- நொய்யல் பகுதிகளில் தொடர் திருட்டு நடந்து வருகிறது
- போலீசார் வாகன சோதனை நடத்தி திருட்டு குற்றங்களை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்:
கரூர் மாவட்டம் நொய்யல், குறுக்குச்சாலை, புன்னம் சத்திரம், குட்டக்கடை, காகிதபுரம், வேலாயுதம்பாளையம், புகழூர், தவுட்டுப்பாளையம், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, மண்மங்கலம், மேட்டுப்பாளையம் இந்தநிலையில் இப்பகுதியில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வாலிபர்கள், வெளி மாவட்டங்களில் இரு சக்கர வாகனங்களை திருடிக் கொண்டு வாகனங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.அப்போது பூட்டி இருக்கும் வீடுகள், தனியாக பெண்கள் இருக்கும் வீடுகள், தனியாக வாகனம் நிறுத்தப்படும் இடங்கள், வீடுகளில் தனி நபர்கள் இருப்பது, வெளியூர்களுக்கு சென்றவர் களின் வீடுகள் போன்றவற்றை கண்காணித்து அப்பகுதியில் யாரும் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்து திருடி செல்கின்றனர்.
அதேபோல் தனியாக நின்று கொண்டிருக்கும் பெண்களிடமும், நடந்து செல்லும் பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளையும் பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று விடுகின்றனர். இதனால் தொடர்ந்து நகை மற்றும் பணத்தை பறிகொடுத்தவர்கள் பரிதாபத்தில் இருக்கின்றனர். இதன் காரணமாக போலீசார் தனித்தனி குழுக்களாக பிரிந்து முக்கிய பகுதிகளில் நின்று அந்த வழியாக வெளி மாவட்ட பதிவு எண்கள் கொண்ட வாகனத்தில் வரும் நபர்களை தடுத்து நிறுத்தி தீவிர விசாரணை நடத்த வேண்டும்.
தொடர்ந்து இதுபோன்று வாகன சோதனை நடத்தினால் திருட்டு குற்றத்தை தடுக்க முடியும். எனவே போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து பல்வேறு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வாகன சோதனை நடத்த வேண்டும். இதனால் திருட்டு குற்றங்களை தடுக்க முடியும். எனவே போலீசார் வாகன சோதனை நடத்தி திருட்டு குற்றங்களை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பச்சாபாளையம் கோவில் திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.
- பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பல்லடம் :
பல்லடத்தில் உள்ள பச்சாபாளையம் கோவில் திருமண மண்டபத்தில் நேற்று திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. திருமணத்திற்காக வந்த கோவையைச் சேர்ந்த கார்த்திகா(வயது 28) என்பவர் மணமகனது அறையில் அவரது கைப்பை வைத்துவிட்டு சென்றுள்ளார்.
அதில் அவர் அணிந்திருந்த சுமார் 12 சவரன் தங்க நகை, ரொக்கம் ரூ. 24 ஆயிரம் ஆகியவற்றை கைப்பையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திருமண வேலைகளில் மும்முரமாக இருந்தவர் சிறிது நேரம் கழித்து சென்று பார்த்தபோது கை பையை காணவில்லை. இதுகுறித்து திருமண மண்டபத்தில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். யாரும் எடுக்கவில்லை எனக் கூறியதாக கூறப்படுகிறது .இதையடுத்து அவர் பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் போலீசார் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண மண்டபத்தில் நகை மற்றும் பணம் காணாமல் போனது திருமண வீட்டாருக்கு அதிர்ச்சி- சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.
- சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நீச்சல் குளம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- விசாரணையில் அவர்கள் நடுக்குப்பத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் அவனது கூட்டாளி சத்ய பிரதீப் என்று தெரியவந்தது.
சென்னை:
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நீச்சல் குளம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்தபடி 2 பேர் கஞ்சா புகைத்துக்கொண்டு இருந்தனர். அவர்கள் இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பேசினார்கள். இதையடுத்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
அங்குவைத்து அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் இருவரும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் நடுக்குப்பத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் அவனது கூட்டாளி சத்ய பிரதீப் என்று தெரியவந்தது.
இதில் சிறுவன் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும், சத்ய பிரதீப் அவனுக்கு உறுதுணையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
17 வயதான சிறுவன் பகல் நேரத்தில் ரெயிலில் சமோசா விற்று பிழைப்பு நடத்தி வந்தான். இரவு நேரத்தில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தான். திருட்டு சம்பவங்கள் மூலம் கிடைக்கும் பணத்தில் கஞ்சா புகைத்து ஆடம்பரமாக செலவழித்து வந்தான்.
அவர்கள் போலீசில் பிடிபடுவதற்கு முன்பு திருநின்றவூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடி விட்டு அதை விற்பனை செய்வதற்காக எழும்பூருக்கு கொண்டு வந்துள்ளனர். வரும் வழியில் பூந்தமல்லி, நசரத்பேட்டை பகுதிகளில் 3 இடங்களில் செல்போன் வழிப்பறி செய்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நகைகளை விற்று ரூ.1 லட்சத்து 97 தனது கைபையில் போட்டு எடுத்து வந்தார்.
- மர்ம நபர் தான் அந்த பணத்தை திருடி சென்றுள்ளார்
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி திரு.வி.க. நகரைச் சேர்ந்தவர் ஜெயந்தி (வயது70).
இவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்றவர்.
சம்பவத்தன்று வங்கியில் இருந்து 4½ பவுன் நகைகளை மீட்டு அதனை நகைகடையில் விற்று ரூ.1 லட்சத்து 97 தனது கைபையில் போட்டு எடுத்து வந்தார்.
அவர் கடையில் இருந்து பஸ்சில் வீட்டிற்கு சென்றார். அப்போது அவர் பஸ் நிறுத்தம் வந்ததும் இறங்கி பையை பார்த்தபோது அதில் இருந்த ரூ.1.97 லட்சத்தை காணவில்லை. இதனால் பதறிப்போன அவர் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் நகைகளை விற்று ரூ.1.97 லட்சம் பணத்தை கைபையில் போட்டு பஸ்சில் வந்தேன்.
அப்போது எனது அருகே பயணிபோல் உட்கார்ந்து கொண்டு வந்த மர்ம நபர் தான் அந்த பணத்தை திருடி சென்றுள்ளார் என்று புகார் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.