என் மலர்tooltip icon

    இந்தியா

    மும்பையில் பாப் பாடகர் இசை நிகழ்ச்சியில் ரூ.24 லட்சம் மதிப்புள்ள 80 மொபைல் போன்கள் திருட்டு
    X

    மும்பையில் பாப் பாடகர் இசை நிகழ்ச்சியில் ரூ.24 லட்சம் மதிப்புள்ள 80 மொபைல் போன்கள் திருட்டு

    • பாப் பாடகர் என்ரிக் இக்லெசியாஸின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இந்த இசை நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள MMRDA மைதானத்தில் பாப் பாடகர் என்ரிக் இக்லெசியாஸின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    இந்த இசை நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்களான வித்யா பாலன், மலைக்கா அரோரா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் ரூ.24 லட்சம் மதிப்புள்ள 80 மொபைல் போன்கள் திருடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் ஏழு முதல் தகவல் அறிக்கைகளை (FIR) பதிவு செய்துள்ளனர்.

    சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×