என் மலர்
நீங்கள் தேடியது "Sovereign"
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவில் திருவிழா நடைபெறும் நேரத்தில் அந்த பகுதியில் விடிய விடிய மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டு இருந்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே உள்ள பெருங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 30). இவர்களுக்கு 1 குழந்தை உள்ளது. வினோத் மதுரையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் கிருஷ்ண வேணியின் உறவினர் வீடு வள்ளியூர் அருகே உள்ள ஊத்தடி கிராமத்தில் உள்ளது. அங்கு அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் கிருஷ்ணவேணி அதனை பார்ப்பதற்காக பெருங்குடியில் இருந்து நேற்று தனது குழந்தையுடன் உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார்.
தொடர்ந்து இரவில் கோவிலுக்கு சென்று கொடை பார்த்துவிட்டு வீட்டின் முதல் மாடியில் குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்தார்.
இன்று அதிகாலையில் வீட்டுக்குள் ஏறி குதித்த மர்ம நபர் ஒருவர் கிருஷ்ண வேணியின் கழுத்தில் கிடந்த சுமார் 3 பவுன் தங்க நகையை பறிக்க முயன்றுள்ளார்.
தூங்கி கொண்டிருந்த கிருஷ்ணவேணி அதிர்ச்சியடைந்து தனது சங்கிலியை பிடித்துக்கொள்ள அதில் பாதி செயின் மர்ம நபரின் கையில் சிக்கியது.
உடனே மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். கிருஷ்ணவேணி கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். தொடர்ந்து வீட்டின் முதல் தளத்தில் இருந்த பீரோவில் கிருஷ்ண வேனி சுமார் 12 பவுன் நகை வைத்திருந்துள்ளார். அதையும் மர்ம நபர் திருடிக்கொண்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து கிருஷ்ணவேணி வள்ளியூர் போலீசில் தனது 15 பவுன் தங்க நகையை மர்ம நபர் திருடிச்சென்றது குறித்து புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் திருவிழா நடைபெறும் நேரத்தில் அந்த பகுதியில் விடிய விடிய மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டு இருந்தது. இதன் காரணமாகவும், காற்றுக்காகவும் கிருஷ்ணவேணி வீட்டின் கதவை திறந்து வைத்துக்கொண்டு தூங்கி உள்ளார். இதனை மர்ம நபர் அறிந்து நகையை பறித்துச்சென்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே அந்த பகுதியில் உள்ளி சி.சி.டி.வி. காமிராக்களை இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையிலான போலீசார் ஆய்வு செய்து துணிகர திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- பல்வேறு இடங்களில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
- 25 சவரன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாக னத்தை பறிமுதல் செய்யப்பட்டது.
தருமபுரி:
தருமபுரி-திருப்பத்தூர் சாலையில் மதிக்கோன்பாளையம் போலீசார் வழக்கம் போல் இருசக்கர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு இருசக்கர வாகனத்தை போலீசார் வாகன தணிக்கையில் நிறுத்திய போது, அவர்கள் நிறுத்தாமல் அதிவேகமாக சென்றுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பின் தொடர்ந்து தருமபுரி அருகே சுற்றி வளைத்து பிடித்தனர்.
இதனை தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய போது, 2 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 2 பேரையும் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் இருவரும் தருமபுரி பகுதியைச் சார்ந்த ராஜா, வேடியப்பன் என்பது தெரியவந்தது. இருவரும் ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் வைத்திருந்ததும் அதில் லட்சக் கணக்கில் பணத்தை இழந்ததாகவும், அதற்காக வீட்டில் இருந்த நகைகளையும் அடகு வைத்துள்ளதும் தெரியவந்தது. இதனை அடுத்து பண தேவைகள் மற்றும் ஆன்லைன் விளையாடுவதற்காக பல்வேறு இடங்களில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
மேலும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு, இருசக்கர வாகனம், சாலையில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனத்தில் வரும், பெண்கள், முதியோர் என பலரிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கல்மேடு பகுதியில் பெண் ஒருவரிடம் 6 அரை சவரன் தங்க சங்கிலி பறித்து சென்றதும், விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் வேடியப்பன் மற்றும் ராஜா 2 பேரையும் மதிக்கோன்பாளையம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 25 சவரன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்யப்பட்டது.






