என் மலர்

  நீங்கள் தேடியது "செந்தில் பாலாஜி"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் அமைதி ஊர்வலம் நடந்தது.
  • மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான தி.மு.க.வினர் பங்கேற்றனர்.

  கோவை

  தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-ம் ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான தி.மு.க.வினர் பங்கேற்றனர்.

  சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் ரோட்டில் தொடங்கிய அமைதி பேரணி சித்தாபுதூர், ஆவாரம்பாளையம் ரோடு, வி.கே.கே.மேனன் ரோடு வழியாக காந்திபுரம் நகர பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு ஊர்வலம் வந்தடைந்தது.

  பின்னர் அங்குள்ள அண்ணா சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.

  இந்த நிகழ்ச்சியில், மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக், மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா என்ற கிருஷ்ணன்,கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் எஸ்.சேனாதிபதி மற்றும் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், சுகாதாரகுழு தலைவர் மாரிச்செல்வன், இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மீனா லோகு மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டக்கழக பொறுப்புக்குழு உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகரக்கழக, பகுதிக்கழக, ஒன்றியக்கழக, பேரூர்க்கழகச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், மண்டலத் தலைவர்கள் , மண்டல நிலைக்குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகர வட்டக்கழகப் பொறுப்பாளர்கள் , மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் உள்பட ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

  மாவட்டம் முழுவதும் கருணாநிதியின் நினைவுநாளையொட்டி அஞ்சலி செலுத்தப்பட்டு, ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் தி.மு.கவினர் வழங்கினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோவையில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைப் பணிகள் நடந்துகொண்டிருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
  • செய்யவேண்டிய பணிகளை குறிப்பிட்டு சொன்னால் அதை செய்வதற்கு அரசு தயாராக இருக்கிறது

  கோவை:

  கோவையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவையில் சாலைப்பணிகள் செய்யப்படவில்லை, அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டி உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவையில் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைப் பணிகள் நடந்துகொண்டிருப்பதாக கூறினார்.

  மேலும், அவர் கூறியதாவது:-

  வரும் 24ம் தேதி கிணத்துக்கடவு பகுதியில் நடைபெறும் அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு 82000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். மேலும், விடுபட்ட பகுதிகளில் சாலை அமைப்பதற்காக சிறப்பு நிதி வழங்க தயாராக இருக்கிறார். இதற்காக மாநகராட்சி சார்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. மற்ற பணிகளும் ஒவ்வொன்றாக மேற்கொள்ளப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  பொதுப் பிரச்சினைகளுக்காக பாஜகவின் போராட்டம் குறித்து பேசிய செந்தில் பாலாஜி, பாஜகவுக்கு தைரியமும் திறமையும் இருந்தால் பெட்ரோல், டீசல், கேஸ் விலையுயர்வை எதிர்த்து முதலில் போராட்டம் நடத்திவிட்டு, அடுத்தகட்ட பிரச்சனைபற்றி பேசட்டும் என்றார்.

  '410 ரூபாய்க்கு விற்ற கேஸ் சிலிண்டர் 1120 ரூபாய்க்கு விற்கிறது. ஒரு லிட்டர் 54 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட டீசல் 94 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதற்கெல்லாம் பாஜக முதலில் போராட்டம் நடத்தட்டும். மாநில அரசைப் பொருத்தவரை அனைத்து பகுதிகளுக்கும் நிதி ஒதுக்கி, பணிகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, செய்யவேண்டிய பணிகளை குறிப்பிட்டு சொன்னால் அதை செய்வதற்கு அரசு தயாராக இருக்கிறது. மாவட்ட நிர்வாகமும் தயாராக இருக்கிறது' என்றார் செந்தில் பாலாஜி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நம்மை வெல்ல யாரும் இல்லை, வெல்ல இனி எவரும் பிறக்கப்போவதும் இல்லை என கரூரில் நடந்த விழாவில் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகிய கரூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த 14-ந்தேதி சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து திமுக-வில் தன்னை இணைத்து கொண்டார்.

  இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் திமுக-வில் இணையும் விழா இன்று மாலை 5 மணிக்கு கரூர் திருமாநிலையூரில் இருந்து ராயனூர் செல்லும் வழியில் உள்ள கலைவாணி நகரில் நடந்தது. இதில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பங்கேற்றார். முக ஸ்டாலின் தலைமையில் மாற்றுக் கட்சியை சேர்ந்த சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திமுக-வில் இணைந்தனர்.

  இந்த விழாவில் முக ஸ்டாலின் பேசுகையில் ‘‘மக்கள் கூட்டத்தை காணும்போது நம்மை வெல்ல யாரும் இல்லை, எவரும் பிறக்கப்போவதும் இல்லை என்ற உணர்வோடு பார்க்கிறேன். எந்த பொறுப்பில் இருந்தாலும் மக்களின் ஒருவனாக இருந்து கடமையாற்றுவேன்

  தாய் தந்தையை விட்டு பிள்ளைகள் பிரியலாம், அவர்கள் மீண்டும் வருவதை பெற்றோர் ஆவலோடு காத்திருப்பார்கள். புதிய இயக்கத்தில் இணைந்ததாக பார்க்கவில்லை, ஏற்கனவே இருந்த கட்சிக்கு வந்திருக்கிறீர்கள். நல்ல பிள்ளைகளாக உங்களை திமுக-வில் இணைத்துக் கொண்டிருக்கிறீர்கள். தாமதமாக வந்தாலும் சரியான இடத்திற்கு வந்துள்ளீர்கள்.

  ஜனநாயக போர்க்களத்தில்தான் நமக்கு நிறைய பணிகள் உள்ளன. மத்தியிலும், மாநிலத்திலும் எந்த நேரத்திலும் ஆட்சி மாற்றம் நடக்கத்தான் போகிறது’’  என்றார்.
  ×