என் மலர்tooltip icon

    பாராளுமன்ற தேர்தல் 2024

    • தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது.
    • தேர்தல் களம் பரபரப்பாக மாறி இருக்கிறது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது. தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி களம் காணும் நிலையில் அதனை எதிர்த்து அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், பாரதிய ஜனதா கட்சி தலைமையில் இன்னொரு அணியும் போட்டியிடுகின்றன.

    இப்படி 3 அணிகள் களம் காணும் நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் 38 தொகுதிகளை தி.மு.க. கூட்டணியே கைப்பற்றியுள்ளது.

    அதே பலத்துடன் இந்த முறையும் தி.மு.க. கூட்டணி களம் இறங்குவதால் அது போன்ற ஒரு வெற்றியை மீண்டும் பெற வாய்ப்பு இருப்பதாகவே கணிக்கப்பட்டு உள்ளது.


    இந்த அணிக்கு எதிராக பாரதிய ஜனதா பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி அமைத்துள்ளது. இந்த அணியும் கடும் போட்டியை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக தேர்தல் களத்தில் திராவிட கட்சிகளுக்கு போட்டியாக பாரதிய ஜனதா கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் கடும் போட்டியை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது.

    பாரதிய ஜனதா இல்லாத புதிய கூட்டணியை அமைத்துள்ள அ.தி.மு.க.வும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., பா.ஜனதாவுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டு வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளது.

    இப்படி தேர்தல் களத்தில் 3 அணிகளும் கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்தே களம் காண்கிறது. 3 அணிகளுக்கும் நாங்கள் போட்டியை ஏற்படுத்தும் வகையில் களம் காண்போம் என்று நாம் தமிழர் கட்சியினரும் கூறி வருகிறார்கள். இதனால் தேர்தல் களம் பரபரப்பாக மாறி இருக்கிறது.

    • ரெயில்வே துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
    • குடியுரிமை திருத்த சட்டம் ரத்து செய்யப்படும்.

    ரெயில்வே துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க. தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதன்பின் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    * கனிமொழி தலைமையிலான குழு மாநிலம் முழுவதும் பல தரப்பினரை சந்தித்து அறிக்கை தயாரித்துள்ளனர்.

    * திமுக தேர்தல் அறிக்கை மட்டுமில்லை... தமிழக மக்களின் தேர்தலை அறிக்கை.

    * பத்து வருட பாஜக ஆட்சி இந்தியாவை பாழ்ப்படுத்தியுள்ளது.

    * கொடுத்த வாக்குறுதிகள் எதையும் பாஜக அரசு நிறைவேற்றவில்லை.

    * மத்தியில் அமைய போகும், ஆட்சி மாநிலங்களை அரவணைக்கும் ஆட்சியாக அமையவேண்டும் என்றார்.

    இதன்பின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:-

    * ஆளுநருக்கு அதிக அதிகாரம் வழங்கும் 361 பிரிவு நீக்கப்படும்.

    * மாநிலங்கள் சுயாட்சி பெறும் வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும்.

    * நாடு முழுவதும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும்.

    * குடியுரிமை திருத்த சட்டம் ரத்து செய்யப்படும்.

    * காலை உணவு திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்

    * புதிய கல்வி கொள்கை ரத்து செய்யப்படும்.

    * திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.

    * சிலிண்டர் விலை 500 ரூபாய், பெட்ரோல் விலை 75 ரூபாய், டீசல் விலை 65 ரூபாயா நிர்ணயிக்கப்படும்.

    * ரெயில்வே துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

    * தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.
    • திமுகவின் தேர்தல் அறிக்கை மிக முக்கியமான அங்கம் என கனிமொழி கூறினார்.

    சென்னை :

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இதில் தமிழகத்தில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் முதலில் பேசிய கனிமொழி எம்.பி., திமுகவின் தேர்தல் அறிக்கை மிக முக்கியமான அங்கம் என கூறினார்.

    அதன்பின், தேர்தல் அறிக்கையை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.




    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
    • புதிய தமிழகம் கட்சிக்கு 1 தொகுதி, எஸ்டிபிஐ 1 தொகுதி என ஒதுக்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தலில் போட்டியிடுவோர் இன்று காலை 11 மணி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம். இந்நிலையில், தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

    அதன்பின் பேசிய எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.கவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறியுள்ளார். புதிய தமிழகம் கட்சிக்கு 1 தொகுதி, எஸ்டிபிஐ-க்கு 1 தொகுதி என ஒதுக்கப்படுகிறது.

    புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தொகுதி உடன்பாட்டிற்கு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அதன்பின் இருவரும் தொகுதி உடன்பாட்டிற்கு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதில் கிருஷ்ணசாமிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தென் சென்னை தொகுதியில் ஜெயவர்த்தன் போட்டி.
    • ஆரணி தொகுதியில் கஜேந்திரன் போட்டி.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

    தென்சென்னை- ஜெயவர்த்தன்

    வடசென்னை- ராயபுரம் மனோ

    காஞ்சிபுரம்- ராஜசேகர்

    ஆரணி-கஜேந்திரன்

    விழுப்புரம் பாக்கியராஜ்

    மதுரை- சரவணன்

    சேலம் -விக்னேஷ்

    ஈரோடு-ஆற்றல் அசோக்குமார்

    அரக்கோணம்- ஏ.எல்.விஜயன்

    கிருஷ்ணகிரி-ஜெயபிரகாஷ்

    நாமக்கல்- நாங்கள் தமிழ்மணி

    கரூர் - தங்கவேல்

    நாகை -கர்ஜித் சங்கர்

    தேனி- நாராயணசாமி

    ராமநாதபுரம்- ஜெயபெருமாள்

    சிதம்பரம்- சந்திரகாசன்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வரும் 27-ந் தேதி கடைசி நாளாகும்.
    • வேட்பு மனுக்களை திரும்பப்பெற 30-ந் தேதி கடைசி நாளாகும்.

    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடக்கிறது. பாராளுமன்ற தேர்தல் முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அரசாணையை திரவுபதி முர்மு வெளியிட்டுள்ளார்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

    வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வரும் 27-ந் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 28-ந் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப்பெற 30-ந் தேதி கடைசி நாளாகும்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்.19-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஏராளமான திட்டங்கள் கொடுத்து உள்ளார்.
    • மக்களுக்கு சேவை செய்யும் பிரதமராக மோடி உள்ளார்.

    சேலம்:

    சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடந்த பா.ஜனதா கூட்டத்தில் கட்சியின் தேசியக்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், 'இங்கு கூடியுள்ள கூட்டம் காசு கொடுத்து வந்த கூட்டம் அல்ல. நரேந்திர மோடி மீது உள்ள பாசத்தால் வந்த கூட்டம். நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்.

    தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஏராளமான திட்டங்கள் கொடுத்து உள்ளார். மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது எத்தனை திட்டம் கொண்டு வந்தீர்கள் என்று தி.மு.க.வினரால் பட்டியல் கொடுக்க முடியுமா? மீண்டும் தாமரை மலரும். தமிழ்நாட்டில் இருந்து அதிகப்படியான எம்.பி.க்களை டெல்லிக்கு அனுப்ப வேண்டும்' என்றார்.

    முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். தமிழகத்தில் இதுவரைக்கும் ஆளும் கட்சியில் இருந்து எங்களை தாண்டி வேறு யாரும் வரமுடியாது என்று உட்கார்ந்து இருக்கின்றனர். நிச்சயம் பெரிய மாற்றம் ஏற்படப்போகிறது என்பதை அனைவரும் பார்க்க போகிறார்கள்' என்றார்.

    மேலும் அவர் கூறுகையில், 'பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். மோடி போன்று பிரசாரத்திற்கு வேறு எந்த பிரதமரும் தமிழகத்திற்கு வந்தது இல்லை. பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவதை பிரமிப்பாக பார்க்கிறார்கள். மக்களுக்கு சேவை செய்யும் பிரதமராக மோடி உள்ளார். தேர்தலில் போட்டியிட இதுவரை நான் (குஷ்பு) சீட் கேட்கவில்லை' என்றார்.

    • சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
    • சமூக ஊடகங்கள் வாயிலாக 4 ஆயிரத்துக்கும் மேலான பரிந்துரைகள்.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது.

    இதில் தி.மு.க. செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட 11 பேர் இடம் பெற்றிருந்தனர்.

    இந்த குழுவினர் பிப்ரவரி 5-ந்தேதி முதல் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

    இதில் எழுத்துப்பூர்வமாக மனுக்கள் வாங்கியதுடன் தொலைபேசி வாயிலாகவும், சமூக ஊடகங்கள் வழியாகவும் ஆன்லைன் மூலமாகவும் கோரிக்கைகள் பெறப்பட்டிருந்தது.

    அதில் தொலைபேசி வாயிலாக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள், 2,500-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள், சமூக ஊடகங்கள் வாயிலாக 4 ஆயிரத்துக்கும் மேலான பரிந்துரைகள் பெறப்பட்டிருந்தது.

    அண்ணா அறிவாலயத்திற்கு 600-க்கும் மேற்பட்ட கடிதங்களும் பரிந்துரையாக வந்திருந்தது. 40 தொகுதிகளுக்கும் சென்று மக்களின் எதிர்பார்ப்புகளை கேட்டறிந்து வந்துள்ளனர்.

    இதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கனிமொழி தலைமையிலான குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

    இந்நிலையில், தி.மு.க. தேர்தல் அறிக்கை இப்போது இறுதி செய்யப்பட்டுள்ளததை தொடர்ந்து, தேர்தல் அறிக்கை நாளை வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.
    • 40 தொகுதிகளின் வேட்பாளர்களை சீமான் அறிமுகம்.

    மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளது.

    இந்நிலையில், 40 தொகுதிகளின் வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

    அதன்படி, வரும் 23ம் தேதி மாலை சென்னையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.

    அங்கு, நாம் தமிழர் கட்சியின் சார்பில் 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் ? என்ற பட்டியல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வேட்புமனு தாக்கல் செய்ய இந்த மாதம் 27-ந் தேதி கடைசி நாளாகும்.
    • வேட்பு மனு மீதான பரிசீலனை மார்ச் 28-ந் தேதி நடைபெறுகிறது.

    தமிழகம்-புதுச்சேரியில் பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடை பெறுகிறது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நாளை (புதன் கிழமை) தொடங்குகிறது.

    வேட்புமனு தாக்கல் செய்ய இந்த மாதம் 27-ந் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு மீதான பரிசீலனை மார்ச் 28-ந் தேதி நடைபெறுவதுடன், மனுக்களைத் திரும்பப் பெற மார்ச் 30-ந் தேதி கடைசி நாளாகும்.

    தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யும் போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவதாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.

    அதன்படி, வேட்பு மனுக்களானது காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பெறப்படும்.

    மனுத்தாக்கலின் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீ-க்குள் 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

    மனுத்தாக்கல் நடைபெறும் நாட்களில் மாலை 3 மணிக்கு மேல் தேர்தல் நடத்தும் அலுவலக வளாகத்தில் ஒருவருக்கும் அனுமதியில்லை.

    • தேர்தல் பிரசாரத்தில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது
    • இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவினர் மீதும், பிரதமர் மோடி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    கோவையில் நேற்று பிரதமர் மோடி பங்கேற்ற பிரமாண்ட வாகன பேரணி நடைபெற்றது. இதில் பா.ஜ.கவினர், பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

    இவர்களுடன் பள்ளி சீருடை அணிந்த சில மாணவ-மாணவிகளும் மோடியை காண வரிசையாக நின்றனர். அவர்களுடன் ஆசிரியர்களும் இருந்ததாக கூறப்படுகிறது.

    தேர்தல் பிரசாரத்தில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது. அதனையும் மீறி பிரதமர் மோடி நிகழ்ச்சியில் மாணவர்களை பங்கேற்கச் செய்துள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவினர் மீதும், பிரதமர் மோடி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணியத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    அந்த புகாரில், "நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்திற்காக கோவை வந்திருந்தார். அவர் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். இவர் வாரணாசி தொகுதி பாஜக வேட்பாளர். தேர்தல் பிரசாரத்தின் போது பொதுப்பணித் துறை வளாகத்தை அவர் பயன்படுத்தியிருப்பது தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாகும்.

    மேலும், இந்நிகழ்ச்சியில் கோவையில் உள்ள ஒரு அரசுப் பள்ளியின் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் சுமார் 50 மாணவர்கள், சில ஆசிரியர்களுடன் கலந்துகொண்டனர். தேர்தல் பிரசாரங்களில் மாணவர்களை ஈடுபடுத்த பள்ளிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமீறலாகும்.

    விதிமீறலில் ஈடுபட்டுள்ள வேட்பாளரை உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான கிராந்திகுமார் பாடி கூறும்போது, பிரதமர் நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்பட்டனரா என்பது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • கோவை வந்த பிரதமர் மோடி பேரணியை நடத்தினார்.
    • ரமேஷ் இரவும் பகலுமாக கட்சிக்காக உழைத்தவர்.

    மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், பிரமதர் மோடி முதல்முறையாக தமிழக வந்தார்.

    நேற்று மாலை கோவை வந்த பிரதமர் மோடி பேரணியை நடத்தினார். பிறகு, இன்று சேலம் வந்த பிரதமர் மோடி கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பாஜகவின் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசினார்.

    அப்போது, பிரதமர் மோடி மேடையில் மறைந்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் மற்றும் பாஜக மாநில பொதுச் செயலாளர் 'ஆடிட்டர்' வி.ரமேஷ் ஆகியோரை நினைவு கூர்ந்து பேசினார். அப்போது அவர், கண்கலங்கி உணர்ச்சிவசப்பட்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இன்னைக்கு நான் சேலத்தில் இருக்கிறேன். ஆடிட்டர் ரமேஷ் இன்று நம்முடன் இல்லை. ரமேஷ் இரவும் பகலுமாக கட்சிக்காக உழைத்தவர்.

    அவர் கட்சியின் அர்ப்பணிப்புள்ள தலைவராக இருந்தார். அவர் ஒரு சிறந்த பேச்சாளர் மற்றும் மிகவும் கடின உழைப்பாளி. அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

    அவசரநிலைக்கு எதிரான போராட்டத்தில்

    தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் ஆற்றிய பங்கு மறக்க முடியாதது. மாநிலத்தில் பல பள்ளிகளையும் அவர் தொடங்கினார்.

    தமிழகத்தின் வளர்ச்சியை உறுதி செய்ய தமது அரசு கடுமையாக உழைத்துள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த 2013-ம் ஆண்டு சேலம் மாநகரம் மரவனேரி பகுதியில் பாஜக மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் வி ரமேஷ் (54), வீட்டின் வளாகத்தில் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    ×