search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திமுக தேர்தல் அறிக்கை நாளை வெளியாகிறது
    X

    திமுக தேர்தல் அறிக்கை நாளை வெளியாகிறது

    • சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
    • சமூக ஊடகங்கள் வாயிலாக 4 ஆயிரத்துக்கும் மேலான பரிந்துரைகள்.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது.

    இதில் தி.மு.க. செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட 11 பேர் இடம் பெற்றிருந்தனர்.

    இந்த குழுவினர் பிப்ரவரி 5-ந்தேதி முதல் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

    இதில் எழுத்துப்பூர்வமாக மனுக்கள் வாங்கியதுடன் தொலைபேசி வாயிலாகவும், சமூக ஊடகங்கள் வழியாகவும் ஆன்லைன் மூலமாகவும் கோரிக்கைகள் பெறப்பட்டிருந்தது.

    அதில் தொலைபேசி வாயிலாக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள், 2,500-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள், சமூக ஊடகங்கள் வாயிலாக 4 ஆயிரத்துக்கும் மேலான பரிந்துரைகள் பெறப்பட்டிருந்தது.

    அண்ணா அறிவாலயத்திற்கு 600-க்கும் மேற்பட்ட கடிதங்களும் பரிந்துரையாக வந்திருந்தது. 40 தொகுதிகளுக்கும் சென்று மக்களின் எதிர்பார்ப்புகளை கேட்டறிந்து வந்துள்ளனர்.

    இதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கனிமொழி தலைமையிலான குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

    இந்நிலையில், தி.மு.க. தேர்தல் அறிக்கை இப்போது இறுதி செய்யப்பட்டுள்ளததை தொடர்ந்து, தேர்தல் அறிக்கை நாளை வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×