என் மலர்

  நீங்கள் தேடியது "DMK manifesto"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆட்சிக்கு வந்தால் அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. #DMKmanifesto #CropLoan
  சென்னை:

  பாராளுமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசினார். அப்போது, வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை, சிறு குறு விவசாயிகளின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு, கல்விக்கடன் தள்ளுபடி நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

  5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்கள் சிறு குறு விவசாயிகள் என வரையறுக்கப்பட்டிருக்கிறது. எனவே, திமுகவின் தேர்தல் அறிக்கை அனைத்து விவசாயிகளையும் திருப்தி செய்யும் வகையில் இருக்காது என்பதால், தேர்தல் அறிக்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “திமுக தேர்தல் அறிக்கையில் சிறு குறு விவசாயிகளின் அனைத்து வகையான பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று வெளியிடப்பட்டு இருந்தது.

  தற்போது விவசாயிகளின் கோரிக்கை மற்றும் கூட்டணி கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று, அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது” என கூறியுள்ளார். #DMKmanifesto #CropLoan
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளில் பல்வேறு அம்சங்கள் பொதுவாக உள்ளன. #LSPolls #ElectionManifesto
  சென்னை:

  தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி உள்ள நிலையில், ஆளுங்கட்சியான அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுகவின் தேர்தல் அறிக்கைகள் இன்று வெளியிடப்பட்டன. இரண்டு கட்சிகளும், மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக கொடுத்துள்ளன. அதேசமயம், சில முக்கிய அம்சங்கள் இரண்டு தேர்தல் அறிக்கையிலும் பொதுவாக உள்ளன. அவற்றைப் பார்ப்போம்...

  மத்தியில் தமிழை ஆட்சி மொழியாக்கவும், மத்திய அரசு அலுவலகங்களில் அலுவல் மொழி ஆக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கேபிள் டிவி சேவைக்கான கட்டணம் குறைக்கப்படும்.

  காவிரி டெல்டா பகுதி வேளாண் சிறப்பு மண்டலமாக அறிவிக்கப்படும். மாணவர்கள் வாங்கிய கல்விக்கடனை முழுவதும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.  தனியார் துறை வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டு முறையை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

  இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த சில வாக்குறுதிகளை இரண்டு கட்சிகளும் கொடுத்திருப்பதால், இந்த வாக்குதிகள் எந்த அளவுக்கு வாக்காளர்களை ஈர்க்கும்? என்பதை இப்போது கணிக்க இயலாது. தேசிய கட்சிகளின் தேர்தல் அறிக்கையும் வெளியாகி, பிரச்சாரம் தீவிரமடையும்போது வாக்காளர்களின் மனநிலை தெரியவரும். #LSPolls #ElectionManifesto
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நீட் தேர்வு ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், மாணவர்களுக்கு இலவச ரெயில் பாஸ், கேபிள் டிவி கட்டணம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை திமுக தனது தேர்தல் அறிக்கையில் வழங்கி உள்ளது. #LSPolls #DMKManifesto
  சென்னை:

  தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

  வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். மத்திய அரசின் வரி வருவாயில் 60 சதவீதம் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கவேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும்.  மாணவர்களுக்கு நடத்தப்படும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். மாணவர்களின் கல்விக்கடன் அனைத்தையும் முழுவதுமாக தள்ளுபடி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சேலம், மதுரை, திருச்சி, கோவையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்க 10ம் வகுப்பு வரை படித்துள்ள ஒரு கோடி பேர் சாலை பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள். தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

  கிராமப்புறங்களுக்கு 10ம் வகுப்பு வரை படித்தவர்கள் மக்கள் நலப் பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள். கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழே வசிக்கும் பெண்கள் சிறு தொழில் தொடங்க 50 ஆயிரம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
  அகதிகள் முகாம்களில் உள்ள அனைவருக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்படும்.

  பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச ரெயில் பயண சலுகை வழங்கப்படும். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய திட்டங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

  பாலியல் குற்றங்களைத் தடுக்க உரிய சட்டம் நிறைவேற்றப்படும். காவிரி டெல்டா பகுதியானது பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும். கேபிள் டிவி கட்டணம் முந்தைய அளவுக்கு குறைக்கப்படும். கீழடியில் தொல்லியல் ஆய்வு தொடரும்.

  இவ்வாறு திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #LSPolls #DMKManifesto
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். #ParliamentElections #TamilnaduByElection #DMKManifesto
  சென்னை:

  தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அந்த தேர்தலோடு சேர்த்து தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.

  இந்த தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஓர் அணியாகவும், தி.மு.க. கூட்டணி கட்சிகள் மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. அ.ம.மு.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தொடங்கி உள்ளன.  இந்த தேர்தல் பிரசாரத்தில் தேர்தல் அறிக்கை முக்கிய துருப்புச் சீட்டாக இருக்கும். எனவே, வாக்காளர்களை கவரும் வகையில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளன. அவ்வகையில் திமுக தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில் மக்களின் அடிப்படைத் தேவைகள், பொருளாதார திட்டங்கள், வேலைவாய்ப்பு திட்டங்கள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. #ParliamentElections #TamilnaduByElection #DMKManifesto
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் படி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். #DMK #MKStalin #DMKmanifesto2019
  சென்னை:

  தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

  ‘தமிழக முன்னேற்றத்தில் பங்கேற்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு!’ ‘உங்கள் எண்ணங்களும் அரசேற அரிய தருணம்.

  உங்கள் கனவுகளையும், புதுமையான எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாராளுமன்றத் தேர்தல் அறிக்கையில் பகிர்ந்து கொண்டு எங்களோடு கரம் கோர்க்க வாருங்கள்.  அடிமை அரசால் வளர்ச்சி என்கிற பாதையில் அதள பாதாளத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டை முன்னேற்றுவதில், உங்களுடைய கருத்துகளை அறிய ஆவலாக உள்ளேன்.

  உங்களுடைய கருத்துகளை எங்களுக்கு அனுப்ப dmkmanifesto2019@dmk.in இந்தப் பதிவின் கீழும் உங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம். அதே போல், #DMKmanifesto2019 என்கிற #டேக்கிலும் உங்கள் எண்ணங்களை பதிவு செய்யலாம். வருகிற 28-ந்தேதி வரை அனுப்பலாம்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMK #MKStalin #DMKmanifesto2019
  ×