search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் பிரம்மோற்சவ கருட சேவை முன்னோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
    X

    திருப்பதியில் பிரம்மோற்சவ கருட சேவை முன்னோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

    திருப்பதியில் பிரம்மோற்சவ கருட சேவை முன்னோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தில் இரவு 7 மணிக்கு கருடவாகனத்தில் ஏழுமலையான் மாடவீதிகளில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்படி பவுர்ணமியான நேற்று இரவு தங்க கருட வாகனத்தில் தங்கவைர நகைகள் அலங்காரத்துடன் விலை உயர்ந்த பட்டுவஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு ஏழுமலையான் மாடவீதிகளில் பவனி வந்தார். 4 மாடவீதிகளில் 7 மணிக்கு தொடங்கிய பவனி இரவு 9 மணி வரை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

    இந்த கருட வாகன ஊர்வலத்தை தேவஸ்தானம் பிரதோ‌ஷத்தையொட்டி நடைபெறும் கருட வாகன ஊர்வலத்துக்கு முன்னேற்பாடு ஒத்திகையாக நடத்தியது.

    திருப்பதி கோவிலில் உள்ள பிரதான உண்டியலில் ஏராளமான பக்தர்கள் பணம் போடுவதால் உண்டியல் அடிக்கடி நிரம்பி வழிகிறது. இதனால் அதன் அருகில் கூடுதலாக மற்றொரு உண்டியல் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×