search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் ஆடி சுவாதி திருவிழா இன்று தொடங்கியது
    X

    திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் ஆடி சுவாதி திருவிழா இன்று தொடங்கியது

    திருச்சி மலைக்கோட்டை மட்டுவார் குழலம்மை - தாயுமான சுவாமி கோவிலில் ஆடி சுவாதி திருவிழா மற்றும் அதிருத்ர பெருவேள்வி இன்று தொடங்கியது.
    திருச்சி மலைக்கோட்டை மட்டுவார் குழலம்மை - தாயுமான சுவாமி கோவிலில் ஆடி சுவாதி திருவிழா மற்றும் அதிருத்ர பெருவேள்வி இன்று தொடங்கியது. வருகிற 10-ந்தேதி வரை நிகழ்ச்சி நடக்கிறது.

    இதையொட்டி இன்று காலை 7-15 மணிக்கு காவிரி ஆற்றில் இருந்து திருமஞ்சனம் கொண்டு வருதல், 8-45 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, தேவதா அனுக்ஞை, 121 சிவாச் சாரியார்களால் ஸமஷ்டி மஹன்யாஸ ஐபம், 10மணிக்கு ஸ்ரீமகா தேவாதிருத்ரர்கள் ஆவாஹனம், அதிருத்ர ஜபம், பகல் 12 மணிக்கு ஸ்ரீருத்ர ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது.

    மாலை 6 மணிக்கு சிவயாக வேதிகை பூஜை, ஹோமம், 6-30 மணிக்கு ஸ்ரீருத்ரத்ரிச தீ லட்சார்ச்சனை, இரவு 8-30 மணிக்கு பூர்ணாஹூதி தீபாராதனை நடக்கிறது.

    7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை ) காலை 7 மணிக்கு ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை, ஸ்ரீஅதிருத்ரகலச பூஜை, மஹன்யாச பூர்வக ஜபம், பகல் 12-30 மணிக்கு ஸ்ரீருத்ர ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை, மாலை 6 மணிக்கு சிவயாக வேதிகை பூஜை, அஸ்திர ஜபம், மாலை 6-30 மணிக்கு ஸ்ரீருத்ரத்ரிச தீ லட்சார்ச்சனை, இரவு8 மணிக்கு ஹோமம், பூர்ணாஹூதி, 9 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. இந்நிகழ்ச்சிகள் 8,9,10-ந் தேதிகளிலும் நடக்கிறது.

    10-ந்தேதி பகல் 12-30 மணிக்கு அதிருத்ரக லசங்களால் தாயுமானவருக்கு அபிஷேகம், த்ரிசதி அர்ச்சனை, தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்குதல், இரவு 8 மணிக்கு ஸ்ரீசுந்தர மூர்த்தி சுவாமிகள் யானை வாகனத்தில் வீதி உலா நடக்கிறது.

    Next Story
    ×