என் மலர்
உலகம்
- காசாவில் உள்ள 94% மருத்துவமனைகள் மற்றும் 90% பள்ளிகள் அழிக்கப்பட்டுள்ளன.
- வேளாண் நிலங்களில் 98.5% இப்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கி நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, பாலஸ்தீன நகரமான காசாவில் ஏற்பட்டுள்ள பேரழிவை மதிப்பீடு செய்து ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அறிக்கைபடி, இஸ்ரேலியத் தாக்குதல்களால் காசாவின் 80% கட்டிடங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன.
மொத்த சேத மதிப்பு 4.5 டிரில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 373.5 டிரில்லியன்) ஆகும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் காசாவில் இடிபாடுகள் உள்ளிட்ட 51 மில்லியன் டன் குப்பைகள் குவிந்துள்ளன. இவற்றை அகற்ற மட்டும் ரூ.99.6 டிரில்லியன் செலவாகும்.
போரினால் ஏற்பட்ட இடிபாடுகளை முழுமையாக அகற்ற 10 ஆண்டுகள் ஆகலாம். மேலும், காசாவின் வளமான நிலப்பரப்பை மீட்டெடுக்க 25 ஆண்டுகள் வரை ஆகலாம்.
குப்பைகளை அகற்றுவதற்கான உபகரணங்கள் கிடைப்பதில் உள்ள சிரமங்களே மறுகட்டமைப்புக்கு நீண்ட காலம் எடுக்கக் காரணம்.

இஸ்ரேலியத் தாக்குதல்களால் காசாவில் உள்ள 94% மருத்துவமனைகள் மற்றும் 90% பள்ளிகள் அழிக்கப்பட்டுள்ளன.
காசாவின் 2.3 மில்லியன் மக்கள்தொகையில் 90% பேர் வீடற்றவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். பாதிக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான பட்டினியை எதிர்கொள்கின்றனர். காசாவின் 80% பகுதி இராணுவ மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காசாவில், 1,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. போருக்கு முன் பயிரிடப்பட்ட நிலங்களில், தற்போது 232 ஏக்கர் மட்டுமே சாகுபடி செய்யக்கூடியதாக உள்ளது. அதாவது, வேளாண் நிலங்களில் 98.5% இப்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

வளமான மண் இல்லாதது உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. போருக்கு முன்பு காசா தனது மொத்த ஏற்றுமதியில் 32% ஸ்ட்ராபெர்ரிகள், 28% தக்காளி மற்றும் 15% வெள்ளரிகளை ஏற்றுமதி செய்து வந்தது.
இஸ்ரேலியத் தாக்குதல்கள் 83% பாசனக் கிணறுகளை அடைத்துள்ளன. வெடிபொருட்கள் மற்றும் இரசாயனங்கள் காரணமாக காசாவின் மண்ணில் ரசாயன அளவு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்த போரினால் ஏற்பட்ட சமூகம், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் பல தசாப்தங்களுக்கு நீடிக்கும் என்று ஐ.நா. அறிக்கை எச்சரித்துள்ளது.

இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை 66,158 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐநா முன்னதாக தெரிவித்திருந்தது.
ஐநாவின் சுயாதீன விசாரணை கமிஷன் காசாவில் இஸ்ரேல் செய்து வருவது இனப்படுகொலை என வரையறுத்துள்ளது.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் இன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்பது குறித்து எகிப்தில் இஸ்ரேல், ஹமாஸ் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- தனது சொந்த குடிமக்கள் மீது குண்டுவீசி திட்டமிட்ட இனப்படுகொலையைச் செய்யும் அதே நாடு இது.
- உலகம் அதன் இரட்டைத் தரத்தை உணர்ந்திருந்தாலும், இப்போது அது தன்னை 'மனித உரிமைகளின் பாதுகாவலர்' என்று சித்தரிக்க முயற்சிக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் "பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு" என்ற தலைப்பில் நேற்று விவாதம் நடைபெற்றது.
இதில் பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி சைமா சலீம், காஷ்மீரில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை பல தசாப்தங்களாக போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.
ஆனால் இதை மறுத்து பேசிய இந்தியாவுக்கான நிரந்தர ஐநா பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் பாகிஸ்தான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
அவர் பேசியதாவது, "ஒவ்வொரு ஆண்டும் நமது நாட்டிற்கு எதிராக பொய்களைப் பரப்பும் பாகிஸ்தானிடமிருந்து தவறான அறிக்கைகளைக் கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
1971 ஆம் ஆண்டு வங்கதேச போரில் ஆபரேஷன் சர்ச்லைட்டின் போது 400,000 பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய உத்தரவிட்ட அதே நாடு இதுதான்.
தனது சொந்த குடிமக்கள் மீது குண்டுவீசி திட்டமிட்ட இனப்படுகொலையைச் செய்யும் அதே நாடு இது.
உலகம் அதன் இரட்டைத் தரத்தை உணர்ந்திருந்தாலும், இப்போது அது தன்னை 'மனித உரிமைகளின் பாதுகாவலர்' என்று சித்தரிக்க முயற்சிக்கிறது.
பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியாவின் சாதனை எந்த விதத்திலும் குறைபாடற்ற முன்மாதிரியான ஒன்றாகும்" என்று தெரிவித்தார்.
- இந்த பேச்சுவார்த்தையை விரைவாக முடிக்க வேண்டியது அவசியம் என்று வெள்ளை மாளிகை வலியுறுத்தியுள்ளது.
- பசியால் வாடும் காசா மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகள் அனுப்ப ஐ.நா. தயாராக உள்ளது என்று அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்தார்.
2023, அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் பணய கைதிகளாக பிடித்துச் செல்லபட்டனர்.
இதன்பிறகு காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் பதிலடித் தாக்குதல்களில் இதுவரை 67,160 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.
ஹமாஸ் தாக்குதல் தொடுத்து இன்றுடன் 2 இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலில் உயிரழந்தவர்கள், பணய கைதிகளாக உயிரிழந்தர்வர்களுக்கு நினைவேந்தல் நடைபெற்றது.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்தை ஏற்று போரை முழுவதுமாக நிறுத்துவது குறித்துஇஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக் ரிசார்ட் நகரில் இன்று (அக்டோபர் 7) இரண்டாவது நாளாகத் தொடர்ந்தது.
நேற்று (திங்கட்கிழமை) முதற்கட்டமாக நடந்த நான்கு மணி நேரப் பேச்சுவார்த்தையில், பிணைக்கைதிகள் விடுதலை மற்றும் போர் நிறுத்தம் ஆகிய முதல் கட்ட நிபந்தனைகளில் பெரும்பாலானவற்றை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தர்கள், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தூதுக் குழுவினருடன் தனித்தனியாகப் பேசினர்.
அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்கோப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று டிரம்ப்புக்கு நிலவரங்களைத் தெரிவித்தனர்.
இந்த பேச்சுவார்த்தையை விரைவாக முடிக்க வேண்டியது அவசியம் என்று வெள்ளை மாளிகை வலியுறுத்தியுள்ளது.
காசா போரை முடிவுக்குக் கொண்டு வந்து, மத்திய கிழக்கில் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.
ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் மற்றும் காசாவின் எதிர்கால நிர்வாகம் எப்படி இருக்கும் என்பன போன்ற முக்கிய கோரிக்கைகளில் இன்னமும் தெளிவின்மை நீடிக்கிறது.
ஹமாஸ் ஆயுதங்களைக் களைந்த பிறகு இஸ்ரேல் தனது படைகளை காசாவிலிருந்து திரும்பப் பெறும். பின்னர் காசாவுக்கு ஒரு சர்வதேச பாதுகாப்புப் படை அனுப்பப்பட்டு, டிரம்ப் மற்றும் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் ஆகியோர் மேற்பார்வையிடும் ஒரு சர்வதேச நிர்வாகத்தின் கீழ் காசா இருக்கும்.
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், இந்தப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க டிரம்ப் முன்மொழிவை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பசியால் வாடும் காசா மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகள் அனுப்ப ஐ.நா. தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
- இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- சிலர் உயிருடன் இடிபாடுகளில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டனர்.
ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள சிடோர்ஜோ நகரில் பள்ளி கட்டிடத்தின் ஒரு பகுதி கடந்த 29-ம் தேதி இடிந்து விழுந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் சிக்கிக் கொண்டனர். மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
இதில் 99 மாணவர்களை மீட்டனர். இடிபாடுகளில் சிக்கிய 65 மாணவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 14 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். சிலர் உயிருடன் இடிபாடுகளில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டனர்.
இந்நிலையில், கட்டிட இடிபாடுகளில் மேலும் உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், பள்ளி இடிந்த விபத்தில் மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன என தெரிவித்தனர்.
- பப்புவா நியூ கினியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கம் 6.7 ரிக்டர் அளவில் ஏற்பட்டது.
பப்புவா நியூ கினியா:
தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. இங்குள்ள கடற்கரை பகுதிகளில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 6.7 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக ஜெர்மனி புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.
- அமெரிக்காவை சேர்ந்த 3 பேருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
- குவாண்டம் கணினிக்கான சிப் தொடர்பான கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது
2025ம் ஆண்டு நோபல் பரிசுக்கான அறிவிப்புகள் வெளியானது. இதில், முதலில் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்காவை சேர்ந்த மேரி இ பிரன்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல், ஜப்பானை சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகிய 3 பேருக்கு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று 2025ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது..
அதன்படி, அமெரிக்காவை சேர்ந்த ஜான் கிளார்க், மைக்கேல் எச். டெவோரெட், ஜான் எம். மார்டினிஸ் ஆகிய 3 பேருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
குவாண்டம் கணினிக்கான சிப் தொடர்பான கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு 3 பேருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
- ஆப்பிரிக்காவில் மன்னராட்சியின் கீழ் இருக்கும் ஒரே நாடு எசுவாத்தினி மட்டும் தான்.
- எசுவாத்தினி நாட்டை மன்னர் மூன்றாம் எம்ஸ்வதி ஆட்சி செய்து வருகிறார்.
தெற்கு ஆப்பிரிக்காவில் எசுவாத்தினி என்ற நாடு உள்ளது. பின்னர் இந்த நாடு சுவாசிலாந்து என்று அழைக்கப்பட்டது. ஆப்பிரிக்காவில் மன்னராட்சியின் கீழ் இருக்கும் ஒரே நாடு எசுவாத்தினி மட்டும் தான்.
எசுவாத்தினி நாட்டை மன்னர் மூன்றாம் எம்ஸ்வதி ஆட்சி செய்து வருகிறார். 1986 முதல் தற்போது வரை கிட்டத்தட்ட 40 வருடங்களாக அந்நாட்டை அவர் ஆட்சி செய்து வருகிறார்.
இந்நிலையில், எசுவாத்தினி மன்னர் மூன்றாம் எம்ஸ்வதி தனி விமானத்தில் அபுதாபி விமான நிலையத்தில் இறங்கினார். அப்போது ன்னர் மூன்றாம் எம்ஸ்வதி அந்நாட்டின் பாரம்பரிய உடையை அணிந்திருந்தார்.
மன்னர் மூன்றாம் எம்ஸ்வதி உடன் அவரது 15 மனைவிகள் மற்றும் 30 குழந்தைகள் மற்றும் 100 பணியாளர்கள் அபுதாபி விமான நிலையத்தில் இறங்கிய வீடியோ இணையத்தில் வைரலாக வருகிறது.
- சுல்தான்கோட் பகுதியில் ரெயில் சென்றபோது தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது.
- ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பலூச் விடுதலை ராணுவத்தின் போராளிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். சமீபகாலமாக ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை குறிவைத்து தாக்கினர். கடந்த மார்ச் மாதம் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை கடத்தி 400 பயணிகளை பிணைக்கைதிகளாக பிடித்தனர். பின்னர் பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து பயணிகளை மீட்டனர்.
இந்த நிலையில் இன்று ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்த ரெயில் குவெட்டா நகருக்கு சென்று கொண்டிருந்தது. சிந்து-பலூசிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள சுல்தான்கோட் பகுதியில் ரெயில் சென்றபோது தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதனால் ரெயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தது. இதில் பலர் காயம் அடைந்தனர். உடனே மீட்புக் குழுக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- அமெரிக்காவிற்கு நடுத்தர மற்றும் கனரக லாரிகளை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடுகளாக மெக்சிகோ, கனடா உள்ளன.
- 2023-24ம் நிதியாண்டில் அமெரிக்காவிற்கு இந்தியாவின் வாகன உதிரிபாக ஏற்றுமதி 6.79 பில்லியன் டாலராக இருந்தது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்தார். பல பொருட்களின் இறக்குமதிக்கு தொடர்ந்து வரிகளை விதித்து வருகிறார்.
சமீபத்தில் சமையலறை மற்றும் கழிவறை உபகரணங்களுக்கு 50 சதவீத வரியும், பர்னிச்சருக்கு 30 சதவீத வரியும் விதித்தார். மேலும் காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு 100 சதவீத வரி விதிப்பதாக அறிவித்தார்.
இந்த நிலையில் லாரிகள் இறக்குமதிக்கு 25 சதவீத வரி விதிப்படுவதாக டிரம்ப் அறிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
வருகிற நவம்பர் 1-ந்தேதி முதல் பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் வரும் அனைத்து நடுத்தர மற்றும் கனரக லாரிகளுக்கும் 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார். டெலிவரி லாரிகள், குப்பை லாரிகள், பொது பயன்பாட்டு லாரிகள், போக்குவரத்து மற்றும் பள்ளி பஸ்கள், டிராக்டர்-டிரெய்லர் லாரிகள், கனரக தொழில் வாகனங்கள் ஆகியவை இந்த வரி விதிப்புக்குள் வரும்.
அமெரிக்காவிற்கு நடுத்தர மற்றும் கனரக லாரிகளை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடுகளாக மெக்சிகோ, கனடா உள்ளன. டிரம்ப்பின் புதிய வரி விதிப்பால் இந்த இரு நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும்.
2023-24ம் நிதியாண்டில் அமெரிக்காவிற்கு இந்தியாவின் வாகன உதிரிபாக ஏற்றுமதி 6.79 பில்லியன் டாலராக இருந்தது. இந்த புதிய வரி விதிப்பால் இந்திய வாகன உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு தான் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.
- டீசல் மானியத்தை திரும்ப வழங்க கோரி தலைநகர் குயிட்டோவில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
- போராட்டக்காரர்களின் அழுத்தத்துக்கு அரசாங்கம் அடிபணியாது.
குயிட்டோ:
தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் பட்ஜெட்டில் பல்வேறு செலவினங்களை அரசாங்கம் குறைத்துள்ளது.
அந்தவகையில் டீசலுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்வதாக அதிபர் டேனியல் நோபோவா அறிவித்தார். இதனால் டீசலின் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரித்தது.
இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. எனவே டீசல் மானியத்தை திரும்ப வழங்க கோரி தலைநகர் குயிட்டோவில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
அதேசமயம் அதிபர் டேனியல் நோபோவாவின் ஆதரவாளர்களும் அங்கு அதிகளவில் திரண்டனர். அப்போது அதிபருக்கு எதிராக முழக்கம் எழுப்பிய போராட்டக்காரர்கள் பாதுகாப்பு வளையத்தை மீறி அங்கிருந்த பூங்காவுக்குள் நுழைய முயன்றனர்.
இதனால் ஏற்பட்ட வன்முறையில் பலருக்கு காயம் ஏற்பட்டது. எனவே போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து அதிபர் டேனியல் நோபோவா சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், போராட்டக்காரர்களின் அழுத்தத்துக்கு அரசாங்கம் அடிபணியாது. மேலும் போராட்டத்தில் வன்முறையை கையில் எடுப்பவர்கள் குற்றவாளியாகவே கருதப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனினும் அதிபருக்கு எதிரான போராட்டம் பல இடங்களில் தீவிரமடைந்து வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 மாகாணங்களில் அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் அதிபர் மாளிகை உள்ளிட்ட முக்கிய இடங்கள் ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளன.
- காரில் இருந்த குமார் மனோஜ் (34), சிங் சுர்ஜித் (33), சிங் ஹர்விந்தர் (31), மற்றும் சிங் ஜஸ்கரன் (20) ஆகிய நான்கு இந்தியர்கள் உயிரிழந்தனர்.
- ரோமில் உள்ள இந்தியத் தூதரகம் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.
இத்தாலியின் சாலை விபத்தில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சனிக்கிழமை நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள மடேரா நகரின் ஸ்கான்சானோ யோனிகோ பகுதியில் ரெனால்ட் ஸ்கெனிக் வகை கார் ஒன்று, சரக்கு லாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காரில் இருந்த குமார் மனோஜ் (34), சிங் சுர்ஜித் (33), சிங் ஹர்விந்தர் (31), மற்றும் சிங் ஜஸ்கரன் (20) ஆகிய நான்கு இந்தியர்கள் உயிரிழந்தனர்.
விபத்துக்குள்ளான காரில் மேலும் ஆறு பேர் இருந்துள்ளனர். அவர்களில் ஐந்து பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
லாரி ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரோமில் உள்ள இந்தியத் தூதரகம் இன்று இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்றும் தெரிவித்துள்ளது. விபத்து குறித்து இத்தாலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பூமியில் உள்ள அரிய கனிம வளங்களை அமெரிக்கா விரும்புகிறது.
- ஏற்கனவே, பாகிஸ்தான் பிரதமர் மாதிரிகளை காண்பித்த நிலையில், தற்போது அவைகள் கப்பலில் ஏற்றப்பட்டுள்ளது.
வர்த்தக வரி ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி அமெரிக்காவுடன் பாகிஸ்தான் நட்பு பாராட்டி வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவ தலைமை தளபதி ஆகியோரை வெள்ளை மாளிகைக்கு வரவேற்று விருந்து அளித்தார். பாகிஸ்தான் தற்போது கடுமையான நிதிப்பற்றாக்குறையால் தத்தளித்து வருகிறது.
இதை டிரம்ப் சரியாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார். பாகிஸ்தானில் உள்ள அரிய கனிம வளங்களை அமெரிக்கா வெட்டி எடுத்துக் கொள்ள விரும்பினார். இது தொடர்பாக பாகிஸதான் பிரதமரிடம் பேசினார். அவரும் சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது.
கடந்த முறை அமெரிக்கா சென்றபோது, பாகிஸ்தானில் உள்ள அரிய வகை கனிமங்களின் மாதிரிகளை டிரம்பிடம் காண்பித்துள்ளார் ஷெபாஷ் ஷெரீப்.
இதனைத் தொடர்ந்து 500 மில்லியன் டாலருக்கு பாகிஸ்தானுக்கும், அமெரிக்க நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெட்டி எடுக்கப்பட்ட கனிம வளங்கள் அடங்கிய முதல் கப்பல் பாகிஸ்தானில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு கனிம வளங்களை விற்பனை செய்வதற்கு இம்ரான் கான் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் ரகசிய ஒப்பந்தம் எனக் குற்றம்சாட்டியுள்ளது.






