என் மலர்
உலகம்
- ரஷியாவின் தாக்குதலில் விமானம் சேதமடைந்ததால், அவசரமாக தரையிறக்க முயன்றதில் விபத்து ஏற்பட்டதாக அஜர்பைஜான் குற்றம்சாட்டியது.
- இந்த விபத்து தொடர்பாக ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றங்களில் வழக்குத் தொடர அசர்பைஜான் தயாராகி வருவதாக அலியேவ் ஜூலையில் அறிவித்திருந்தார்.
2024 டிசம்பர் 25 அன்று, பாகுவிலிருந்து குரோஸ்னிக்குச் சென்ற அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம், கஜகஸ்தானின் அக்தாவுக்கு அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானிகள் உட்பட 38 பேர் உயிரிழந்தனர்.
ரஷியாவின் தாக்குதலில் விமானம் சேதமடைந்ததால், அவசரமாக தரையிறக்க முயன்றதில், விபத்து ஏற்பட்டதாக அஜர்பைஜான் அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் ரஷியாவின் விமானத் தற்காப்பு அமைப்பே அஜர்பைஜான் பயணிகள் விமானத்தை தவறுதலாக தாக்கியதாக ரஷிய அதிபர் புதின் ஒப்புக்கொண்டார்.
தஜிகிஸ்தான் நாட்டில் நடைபெறும் முன்னாள் சோவியத் நாடுகளின் மாநாட்டில், அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் சந்திப்பில், விமான விபத்துக்கு ரஷியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள்தான் காரணம் என ஒப்புக்கொண்ட புதின் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
இந்த விபத்து தொடர்பாக ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றங்களில் வழக்குத் தொடர அஜர்பைஜான் தயாராகி வருவதாக அலியேவ் கடந்த ஜூலையில் அறிவித்திருந்தார். இந்நிலையில் புதின் தற்போது வெளிப்படையாக தவறை ஒப்புக்கொண்டுள்ளது பேசுபொருளாகி உள்ளது.
- சோதனைக்காக அந்தப் பயணியை தலிபான் வீரர் ஒருவர் நிறுத்தி அடையாள அட்டையை கேட்டுள்ளார்.
- இதன்பின் அவர் தனது பயணத்தைத் தொடர அனுமதித்தனர்.
ஆப்கானிஸ்தானில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இந்திய சுற்றுலாப் பயணி ஒருவரை தலிபான் பாதுகாப்புப் படையினர் அன்புடன் வரவேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
சோதனைச் சாவடி ஒன்றில் வழக்கமான பாஸ்போர்ட் சோதனைக்காக அந்தப் பயணியை தலிபான் வீரர் ஒருவர் நிறுத்தி அடையாள அட்டையை கேட்டுள்ளார்.
அவர் தன்னை இந்தியர் என்று கூறியவுடன், தாலிபான் வீரர் உடனடியாகச் சிரித்து, அவரை வரவேற்று, ஆவணங்களைச் சரிபார்க்காமல் செல்ல அனுமதித்தனர்.
அந்த வீரர், இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் சகோதரர்கள் போல என்று கூறியதுடன், இந்திய பயணியை தேநீர் அருந்த அழைத்தார். இதன்பின் அவர் தனது பயணத்தைத் தொடர அனுமதித்தனர்.
"ஆப்கானிஸ்தான் தனது உண்மையான நண்பர்களை இப்படித்தான் நடத்துகிறது" என்ற தலைப்பில் இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
- இந்த பரிசு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.
- 2024 இலக்கியத்துக்கான நோபல் பரிசு தென் கொரியாவை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஹான் காங் அவர்களுக்கு வழங்கப்ட்டது.
உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
முதலாவதாக மனித உடலில் உள்ள புறநோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆராய்ச்சிகளுக்காக அமெரிக்காவை சேர்ந்த மேரி இ பிரன்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல், ஜப்பானை சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகிய 3 பேருக்கு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து குவாண்டம் கணினிக்கான சிப் தொடர்பான கண்டுபிடிப்பிற்காக அமெரிக்காவை சேர்ந்த ஜான் கிளார்க், மைக்கேல் எச். டெவோரெட், ஜான் எம். மார்டினிஸ் ஆகிய 3 பேருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.''
உலோக-கரிம கட்டமைப்புகளின் வளர்ச்சி கண்டுபிடிப்பிற்காக சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன், ஒமர் எம். யாகி ஆகிய ஆகிய 3 பேருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வருடம் இலக்கியத்திற்கான நோபல் பரிசு, 71 வயதான ஹங்கேரி எழுத்தாளர் 'லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை' ( László Krasznahorkai) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அழிவை நோக்கிய உலகின் அபோகாலிப்டிக் பயங்கரத்தின் மத்தியில், கலையின் சக்தியை உறுதிப்படுத்தும் அவரது தொலைநோக்குப் பார்வை கொண்ட பணிக்காக இந்த பரிசு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.
2024 இலக்கியத்துக்கான நோபல் பரிசு தென் கொரியாவை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஹான் காங் அவர்களுக்கு வழங்கப்ட்டது குறிப்பிடத்தக்கது.
- ஜாங் தனது குடும்பத்தினரிடம் தவளைகளை பிடித்து வருமாறு கூறினார்.
- 8 சிறிய தவளைகளை பிடித்து வந்தனர்.
சீனாவின் ஜெஜியாங் மாகாணம் ஹாங்சோ பகுதியை சேர்ந்த 82 வயதான ஜாங் என்ற பெண் முதுகுவலியால் அவதிபட்டு வந்தார். இதற்கு பல சிகிச்சைகள் மேற்கொண்டும் குணமாகவில்லை. இதற்கிடையே தவளைகளை உயிருடன் விழுங்கினால் முதுகுவலி குணமாகும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை நம்பிய ஜாங் தனது குடும்பத்தினரிடம் தவளைகளை பிடித்து வருமாறு கூறினார். அதன்படி 8 சிறிய தவளைகளை பிடித்து வந்தனர். ஜாங் முதலில் 3 தவளைகளை விழுங்கினார். அடுத்த நாள் 5 தவளைகளை விழுங்கினார். அதன்பின் அவருக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பரிசோதனையில் தவளைகளை விழுங்கியதால் ஜாங்க்குக்கு செரிமான பாதிப்பு ஏற்பட்டு ஒட்டுண்ணி தொற்றுகள் மற்றும் ரத்தக் கோளாறுகள் ஆகிய நோய்கள் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
- இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு பிரதிநிதிகள் இடையே எகிப்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
- அமைதியை ஏற்படுத்துபவர்கள் பாக்கியவான்கள்! என்று கூறியுள்ளார்.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் 20 அம்ச திட்டத்தை சமீபத்தில் பரிந்துரைத்தார்.
இதை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிப்பது உள்ளிட்ட சில பரிந்துரைகளை ஹமாஸ் ஏற்றுக் கொண்டது. மற்ற பரிந்துரைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேலும் ஒப்புக் கொண்டது. இருதரப்பும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்த தயாராகி வருகின்றன. இதுதொடர்பாக இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு பிரதிநிதிகள் இடையே எகிப்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த நிலையில், இரண்டு வருட கால போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை இருதரப்பும் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டிரம்ப் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எங்கள் அமைதி திட்டத்தின் முதல் கட்டத்தில் இஸ்ரேலும் ஹமாஸும் கையெழுத்திட்டுள்ளன என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இதன் பொருள் அனைத்து பணயக்கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள், மேலும் வலுவான, நீடித்த மற்றும் நித்திய அமைதியை நோக்கிய முதல் படிகளாக இஸ்ரேல் தங்கள் படைகள் வெளியேறும். அனைத்து தரப்பினரும் நியாயமாக நடத்தப்படுவார்கள்! இஸ்லாமிய நாடுகள், இஸ்ரேல், சுற்றியுள்ள அனைத்து நாடுகள் மற்றும் அமெரிக்காவிற்கும் இது ஒரு சிறந்த நாள். மேலும் இந்த வரலாற்று மற்றும் முன்னோடியில்லாத நிகழ்வை நிகழ்த்த எங்களுடன் இணைந்து பணியாற்றிய கத்தார், எகிப்து மற்றும் துருக்கியின் மத்தியஸ்தர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். அமைதியை ஏற்படுத்துபவர்கள் பாக்கியவான்கள்! என்று கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, காசாவிற்குள் பணயக்கைதிகள்-கைதிகள் பரிமாற்றம் மற்றும் உதவி நுழைவுக்கான ஒப்பந்தத்தை இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டுள்ளதாக மத்தியஸ்தர்கள் தெரிவித்ததாக எகிப்திய அரசு தொடர்பான ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
- காசாவுக்கு கப்பல் மூலம் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைக் கொண்டுசென்றார்.
- அவருடன் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் சென்றனர்.
வாஷிங்டன்:
சுவீடன் நாட்டைச் சேர்ந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் (22).
உலக நாடுகளுக்கு சுற்றி வந்து சுற்றுச்சூழல் பாதிப்பு, மாசுபாடு, புவி வெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடத்தி வருகிறார்.
இதற்கிடையே, இஸ்ரேல் தாக்குதலால் சின்னாபின்னமான காசாவுக்கு கப்பல் மூலமாக உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு சென்றார். அவருடன் பல நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் சென்றனர்.
அப்போது இஸ்ரேல் ராணுவத்தால் இடைமறித்து சிறைவைக்கப்பட்டு சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்டார்.
இதுதொடர்பாக கிரெட்டா தன்பெர்க் சுவீடனில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இஸ்ரேல் ராணுவம் தங்களை மிகவும் மோசமாக நடத்தியது என தெரிவித்தார். இதனை இஸ்ரேல் ராணுவம் திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
இந்நிலையில் கிரெட்டாவின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார். அவர், "கிரெட்டா தன்பெர்க் ஒரு பைத்தியம்போல செயல்படுகிறார். எப்போதும் மூர்க்கமாக உள்ளார். அவர் நல்ல ஒரு மனநல டாக்டரை பார்க்க வேண்டும்" என பரிந்துரைத்துள்ளார்.
- சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.
- ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை முன்மொழிந்துள்ளது.
கோபன்ஹேகன்:
குழந்தைகளின் மனநலனைக் காக்கும் வகையில் டென்மார்க் அரசு 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது.
உலகம் முழுவதும் குழந்தைகளை சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை முன்மொழிந்துள்ளது. சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரெட்ரிக்சன், 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், சமூக ஊடகங்களும், செல்போன்களும் குழந்தைகளின் குழந்தைப் பருவத்தைத் திருடுகின்றன. இளைஞர்களிடையே அதிகரித்து வரும் மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் சமூகத் தனிமை போன்றவற்றைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
சமீபத்தில் ஆஸ்திரேலிய அரசு 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
- வீட்டில் நாங்கள் வாக்குவாதம் செய்கிறோம். சண்டையிடுகிறோம்.
- ஆனால், இந்தியாவுக்கு எதிராக சண்டை என்று வந்தால், நாங்கள் ஒன்றிணைவோம்.
இந்திய ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திரா திவேதி, ராஜஸ்தானில் அனுப்கர் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் மத்தியில் கடந்த 3ஆம் தேதி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவை நிறுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால், ஆபரேசன் சிந்தூர் 2-ம் பாகம் வெகு தொலைவில் இல்லை.
அப்போது நாம் 'ஆபரேஷன் சிந்தூர் 1.0-ன் போது கடைப்பிடித்த நிதானத்தை கடைப்பிடிக்க மாட்டோம். இந்த முறை நாம் ஏதாவது செய்வோம். அது பாகிஸ்தான், தான் உலக வரைபடத்தில் தொடர்ந்து இருக்க வேண்டுமா இல்லையா என்று யோசிக்க வைக்கும்.
பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருக்க விரும்பினால், அது அரசு ஆதரவு பயங்கரவாதத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். ராணுவ வீரர்கள் தயாராக இருக்க வேண்டும். கடவுளின் விருப்பம் இருந்தது என்றால், உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் விரைவில் வரும்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், இந்தியா அவுரங்கசீப் ஆட்சியின் கீழ் மட்டுமே ஒன்றுபட்டதாக இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கவாஜா ஆசிஃப் கூறியதாவது:-
இந்தியா அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் இருந்ததை தவிர, மற்ற ஒருபோதும் ஒன்றுபட்ட நாடாக இருந்ததில்லை. பாகிஸ்தான் அல்லா பெயரால் உருவாக்கப்பட்டது. வீட்டில் நாங்கள் வாக்குவாதம் செய்கிறோம். சண்டையிடுகிறோம். ஆனால், இந்தியாவுக்கு எதிராக சண்டை என்று வந்தால், நாங்கள் ஒன்றிணைவோம். இந்தியா உடனான போர் வாய்ப்பு உண்மையானவை.
இவ்வாறு கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.
- பயங்கரவாதிகள் தாக்குதலில் லெப்டினன்ட் கர்னல், மேஜர் உள்ளிட்டோர் உயிரிழப்பு.
- 19 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 11 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் உள்ள பக்துன்க்வா மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறை சார்பில் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப்படை வீரர்கள் அந்த இடத்திற்கு சென்றனர். அப்போது பயங்கரவாதிகளுக்கும், பாகிஸ்தான் வீரர்களுக்கும் இடையில் கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
இதில் 19 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அதேவேளையில் 11 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். இந்த சண்டையில் 39 வயதான லெப்டினன்ட் கர்னல் ஜுனைத் தரிக் உயிரிழந்தார். இவர் படையை வழி நடத்திச் சென்றவர் ஆவார். அவருடன் 33 வயதான மேஜர் தய்யாப் ரஹத்தும் உயிரிழந்தார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வீரர்கள் உயிரிழப்பிற்கு வருத்தம் தெரிவித்ததுடன், பாதுகாப்புப் படைகளின் அச்சமற்ற மகன்களின் தியாகம் ஒருபோம் வீண் போகாது என்றார். அத்துடன் பாகிஸ்தானின் ஒருமைப்பாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் கூறுகள் வெற்றிபெற நாங்கள் அனுமதிக்க மாட்டோம் எனக் கூறியுள்ளார்.
- ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்காவை சேர்ந்த இந்த 3 பேருக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்டுகிறது.
- உலோக-கரிம கட்டமைப்புகளின் வளர்ச்சி கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
2025ம் ஆண்டு நோபல் பரிசுக்கான அறிவிப்புகள் வெளியானது. இதில், முதலில் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது..
இந்நிலையில், இன்று 2025ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன், ஒமர் எம். யாகி ஆகிய ஆகிய 3 பேருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்காவை சேர்ந்த இந்த 3 பேருக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்டுகிறது.
உலோக-கரிம கட்டமைப்புகளின் வளர்ச்சி கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு 3 பேருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
- மியான்மரின் சாங் யூ நகரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர்.
- போராட்டம் நடத்திய மக்கள் மீது மியான்மர் ராணுவம் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது.
மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. ஆங் சான் சூகி உள்ளிட்ட ஆளுங்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மியான்மரின் சாங் யூ நகரில் புத்தமத பண்டிகையின் போது, ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர்.
போராட்டம் நடத்திய மக்கள் மீது மியான்மர் ராணுவம் வெடிகுண்டுகள் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 80 பேர் படுகாயம் அடைந்தனர்.
- பண்டிகை நாளில் விடுமுறை எடுப்பதில் பலர் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
- பண்டிகையைக் கொண்டாடும் வகையில் மாநில அரசு ஊழியர்களும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுக்க முடியும்.
இந்தியாவின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியை நாடு முழுவதும் உள்ள மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள். மற்ற நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் அவர்கள் எங்கிருந்தாலும் உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள். இருப்பினும், பண்டிகை நாளில் விடுமுறை எடுப்பதில் பலர் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
அத்தகைய மக்களுக்கு அமெரிக்கா ஒரு நல்ல செய்தியை அறிவித்துள்ளது. குறிப்பாக அந்த நாட்டில் அதிக இந்திய மக்கள் தொகை இருப்பதால், கலிபோர்னியா தங்களுக்குப் பிடித்த தீபாவளிப் பண்டிகையை அதிகாரப்பூர்வ விடுமுறையாக அறிவித்துள்ளது. மாநிலத்தில் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறையாக அங்கீகரித்து, ஆளுநர் கவின் நியூசம் நேற்று முன்தினம் ஒரு புதிய மசோதாவில் கையெழுத்திட்டார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை இந்திய-அமெரிக்க சமூகங்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர். இந்தப் புதிய சட்டத்தின்படி, பொதுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தீபாவளி நாளில் விடுமுறை அறிவிக்கப்படும். மேலும், இந்தப் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் மாநில அரசு ஊழியர்களும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுக்க முடியும்.






