என் மலர்
உலகம்

அவுரங்கசீப் ஆட்சியின் கீழ் மட்டுமே இந்தியா ஒன்றுபட்டதாக இருந்தது: ஆத்திரமூட்டும் வகையில் பாகிஸ்தான் அமைச்சர் பேச்சு
- வீட்டில் நாங்கள் வாக்குவாதம் செய்கிறோம். சண்டையிடுகிறோம்.
- ஆனால், இந்தியாவுக்கு எதிராக சண்டை என்று வந்தால், நாங்கள் ஒன்றிணைவோம்.
இந்திய ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திரா திவேதி, ராஜஸ்தானில் அனுப்கர் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் மத்தியில் கடந்த 3ஆம் தேதி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவை நிறுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால், ஆபரேசன் சிந்தூர் 2-ம் பாகம் வெகு தொலைவில் இல்லை.
அப்போது நாம் 'ஆபரேஷன் சிந்தூர் 1.0-ன் போது கடைப்பிடித்த நிதானத்தை கடைப்பிடிக்க மாட்டோம். இந்த முறை நாம் ஏதாவது செய்வோம். அது பாகிஸ்தான், தான் உலக வரைபடத்தில் தொடர்ந்து இருக்க வேண்டுமா இல்லையா என்று யோசிக்க வைக்கும்.
பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருக்க விரும்பினால், அது அரசு ஆதரவு பயங்கரவாதத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். ராணுவ வீரர்கள் தயாராக இருக்க வேண்டும். கடவுளின் விருப்பம் இருந்தது என்றால், உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் விரைவில் வரும்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், இந்தியா அவுரங்கசீப் ஆட்சியின் கீழ் மட்டுமே ஒன்றுபட்டதாக இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கவாஜா ஆசிஃப் கூறியதாவது:-
இந்தியா அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் இருந்ததை தவிர, மற்ற ஒருபோதும் ஒன்றுபட்ட நாடாக இருந்ததில்லை. பாகிஸ்தான் அல்லா பெயரால் உருவாக்கப்பட்டது. வீட்டில் நாங்கள் வாக்குவாதம் செய்கிறோம். சண்டையிடுகிறோம். ஆனால், இந்தியாவுக்கு எதிராக சண்டை என்று வந்தால், நாங்கள் ஒன்றிணைவோம். இந்தியா உடனான போர் வாய்ப்பு உண்மையானவை.
இவ்வாறு கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.






