என் மலர்tooltip icon

    உலகம்

    • 50 மாகாணங்களில் மொத்தம் 18.65 கோடி வாக்காளர்கள் உள்ளனர்
    • அமெரிக்காவில் மொத்தமாக 538 எலக்ட்ரல் பிரதிநிதிகள் உள்ளனர்

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிய உள்ள நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று [நவம்பர் 5] நடைபெற உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் நிற்கும் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசு கட்சி சார்பில் நிற்கும் டொனல்டு டிரம்ப் ஆகிய இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

    இழுபறி ஏற்படாமல் இருந்தால் வாக்குகள் உடனுக்குடன் எண்ணப்பட்ட உடனேயே அடுத்த அதிபர் யார் என தெரிந்துவிடும். 50 மாகாணங்களில் மொத்தம் 18.65 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் அவர்களில் 7 கோடி பேர் முன்கூட்டியே வாக்களிக்கும் முறைப்படி தங்களது வாக்குகளைச் செலுத்தி விட்டனர். மீதமுள்ள 11 கோடி பேர் இன்றைய தினம் தங்கள் வாக்குகளைச் செலுத்த உள்ளனர்.

    பிரதிநிதிகள் 

    அமெரிக்க தேர்தலில் அதிபர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. "Electoral College" எனப்படும் முறை மூலம் அதிபர் தேர்வு நடக்கிறது. ஒவ்வொரு மாகாணத்துக்கும் அங்கு இருக்கும் செனட் மற்றும் பிரதிநிதிகள் எண்ணிக்கையை பொறுத்து ஒரு குறிப்பிட்ட எலக்ட்ரல் பிரதிநிதிகள் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். வாக்காளர்கள் தேசிய அளவில் போட்டியிடும் அதிபர் வேட்பாளர்களையன்றி மாநில அளவில் அக்கட்சிகளின் பிரதிநிதிகளை தான் தேர்வு செய்வார்கள்.

     அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. அனைத்தையும் சேர்ந்து மொத்தமாக 538 எலக்ட்ரல் பிரதிநிதிகள் உள்ளனர். இவர்களின் வாக்கு Electoral College ஆகும். இந்த எலக்டர்ஸ் அளிக்கும் வாக்குகள்தான் எலக்ட்ரல் ஓட்டு என்று அறிவிக்கப்படும். 

    எனவே இந்த 538 எலக்ட்ரல் பிரதிநிதிகள் வாக்குகளில் 270 க்கு மேல் யாருக்கு வருகிறதோ அவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார். எந்த அதிபர் வேட்பாளர் அதிக எண்ணிக்கையிலான மக்களின் வாக்குகளைப் பெறுகிறாரோ, அவருக்கு அந்த மாகாணத்தின் அனைத்து Electoral College வாக்குகளும் அளிக்கப்படும். உதாரணமாக டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு வேட்பாளர்  50.1%  வாக்குகளைப் பெற்றால், அவருக்கு அம்மாகாணத்தின் 40 எலக்ட்ரல் வாக்குகளும் மொத்தமாக வழங்கப்படும்.

    • 1980 முதல் குடியரசுக் கட்சியினர் சிவப்பு மாகாணங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
    • 7 முக்கிய மாகாணங்களில் கடுமையான போட்டி நிலவுகிறது

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிய உள்ள நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று [நவம்பர் 5] நடைபெற உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் நிற்கும் கமலா ஹாரிஸ்  மற்றும் குடியரசு கட்சி சார்பில் நிற்கும் டொனல்டு டிரம்ப்  ஆகிய இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

     இழுபறி ஏற்படாமல் இருந்தால் வாக்குகள் உடனுக்குடன் எண்ணப்பட்ட உடனேயே அடுத்த அதிபர் யார் என தெரிந்துவிடும். பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் கமலா சொற்ப வித்தியாசத்தில் டிரம்ப்பை விட முன்னிலையில் உள்ளார். எனவே இழுபறி ஏற்படும் சூழல் உருவாகலாம் என்று வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

    50 மாகாணங்களில் மொத்தம் 18.65 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் அவர்களில் 7 கோடி பேர் முன்கூட்டியே வாக்களிக்கும் முறைப்படி தங்களது வாக்குகளை செலுத்தி விட்டனர். மீதமுள்ள 11 கோடி பேர் இன்றைய தினம் தங்கள் வாக்குகளை செலுத்த உள்ளனர்.50 மாகாணங்களில் உண்மையில் கடுமையான போட்டி நிலவும் 7 முக்கிய மாகாணங்கள் வெற்றியை தீர்மானிக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

    ஸ்விங் ஸ்டேட்டஸ்

    அமெரிக்க அரசியலில் ஸ்விங் ஸ்டேட்டஸ் [Swing states] என்ற வார்த்தை பிரயோகம் உண்டு. அதாவது, ஜனநாயக கட்சிக்கு பாரம்பரியமாக இருக்கும் வாக்காளர்கள் உள்ள மாகாணங்கள்  நீல ஸ்டேட்ஸ் என்றும் குடியரசு கட்சிக்கு பாரம்பரியமாக வாக்களிக்கும் மாகாணங்களில் சிவப்பு ஸ்டேட்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மாகாணங்களில் பெரிய அளவில் கட்சி மாற்றி வாக்களிப்பதில்லை.

    1980 முதல் குடியரசுக் கட்சியினர் சிவப்பு மாகாணங்களிலும் , 1992 முதல் ஜனநாயகக் கட்சியினர் நீல மாகாணங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த மாகாணங்களில் பெரிய அளவில் கட்சி மாற்றி வாக்களிப்பதில்லை. இவற்றை தவிர்த்து சில மாகாணங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் மாறி மாறி வாக்களிக்கும். எனவே இழுபறி நிலவும் இந்த மாகாணங்களை ஸ்விங் ஸ்டேட்டஸ் என்று அழைப்பது வழக்கம்.

    இங்கு இரு கட்சிக்கும் இடையே போட்டி கடுமையாக இருக்கும். கடைசி நேரம் வரை வாக்குகள் யார் பக்கம் வேண்டுமானாலும் திரும்பும் சூழல் இங்கு காணப்படுகிறது. அதன்படி அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய 7 ஸ்விங் ஸ்டேட்டஸ் மாகாணங்கள் தேர்தல் களத்தில் அதி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

     

    இங்கு உள்ள வாக்காளர்களே அமெரிக்காவின் விதியை தீர்மானிக்க உள்ளனர். குறிப்பாக  கடந்த 2020 அதிபர் தேர்தலில், ஸ்விங் ஸ்டேட்டான அரிசோனாவில் அதிபர் ஜோ பைடன்  வெறும் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி  பெற்றிருந்தார். எனவே எந்நேரமும் மாறக்கூடிய இந்த  இம்மாகாணங்களில் கூடுதல் கவனம் செலுத்தி கமலா ஹாரிஸும், ட்ரம்பும் இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்டனர்.

    டிரம்ப் முன்னிலை

    கடைசியாக நடந்த அட்லஸ் இன்டெல் போல் கருத்துக்கணிப்பின்படி, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய 7 மாகாணங்களில் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார். அரிசோனாவில் டிரம்புக்கு அதிகப்படியாக 51.9 சதவீதம் ஆதரவும், கமலா ஹாரிசுக்கு 45.1 சதவீத ஆதரவுவும் கிடைத்துள்ளது. நெவாடாவில் டிரம்ப் 51.4 சதவீதமும், கமலா ஹாரிஸ்க்கு 45.9 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது. வட கரோலினாவில் டிரம்ப் 50.4 சதவீதமும் கமலா ஹாரிசுக்கு 46.8 சதவீதமும் ஆதரவு உள்ளது.

    • லெபனானில் இஸ்ரேல் வான் மற்றும் தரைவழி தாக்குதலை நடத்தி வருகிறது.
    • கடந்த 13 மாதங்களாக நடைபெற்று வரும் தாக்குதலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி.

    இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கியதில் இருந்து லெபானானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு அவ்வப்போது இஸ்ரேல் பதிலடி கொடுத்து வந்த நிலையில் கடந்த அக்டோபர் 1-ந்தேதியில் இருந்து அதிக அளவில் தாக்குதல் நடத்தி வருகிறது. தரைவழி தாக்குதலும் நடத்தி வருகிறது.

    இதனால் கடந்த 13 மாதங்களில் இஸ்ரேல்- லெபனான் சண்டையில் லெபனானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்ததாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையிலான சண்டை முடிவடைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அமெரிக்க தேர்தலுக்கு முன்னதாக இஸ்ரேல்- காசா, ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்தம் ஏற்பட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால் அதில் வெற்றி கிடைக்கவில்லை.

    இஸ்ரேலின் வான்தாக்குதலில் இருந்து தப்பிக்க 1.2 மக்கள் லெபனானில் தங்களுடைய இருப்பிடத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.

    உச்சக்கட்டமாக கடந்த செப்டம்பர் 23-ந்தேதி தெற்கு மற்றும் கிழக்கு லெபனானில் இஸ்ரேல் பயங்கரமாக வான்தாக்குதலை நடத்தியது இதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 16 பேர் உயிரிழந்த நிலையில் 90 பேர் காயம் அடைந்தனர் எனவும் லெபனான் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேலை சேர்ந்த 72 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 32 ராணுவ வீரர்கள் அடங்குவர். 60 ஆயிரம் மக்கள் இஸ்ரேல் வடக்கு எல்லையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

    • சொற்ப சதவீதமே இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் உள்ளது.
    • நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள் வெளியானது.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிய உள்ள நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று [நவம்பர் 5] நடைபெற உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் நிற்கும் கமலா ஹாரிஸ் [60 வயது] மற்றும் குடியரசு கட்சி சார்பில் நிற்கும் டொனல்டு டிரம்ப் [78 வயது] ஆகிய இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

    கருத்துக்கணிப்புகள் 

    இழுபறி ஏற்படாமல் இருந்தால் வாக்குகள் உடனுக்குடன் எண்ணப்பட்ட உடனேயே அடுத்த அதிபர் யார் என தெரிந்துவிடும். தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே கருத்துக்கணிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் டிரம்பை விட கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் சொற்ப சதவீதமே இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் என்று கணிக்கப்பட்டுள்ளதால் இழுபறி ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

    அட்லஸ் இன்டெல் போல்

    குறிப்பாக முந்தைய கருத்துக்கணிப்புகளை போலல்லாது அட்லஸ் இன்டெல் போல் நிறுவனம் சார்பில் கடந்த நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் டிரம்ப் 49 சதவீத ஆதரவுடன் முன்னிலை பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 47.2 சதவீத ஆதரவு பெற்றுள்ளார். எனவே இருவருக்கும் இடையே 1.8 சதவீத வித்தியாசம் மட்டுமே உள்ளது.

    இந்த கருத்துக்கணிப்பின்படி அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய 7 மாகாணங்களில் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார்.

    அரிசோனாவில் டிரம்புக்கு அதிகப்படியாக 51.9 சதவீதம் ஆதரவும், கமலா ஹாரிசுக்கு 45.1 சதவீத ஆதரவுவும் கிடைத்துள்ளது. நெவாடாவில் டிரம்ப் 51.4 சதவீதமும், கமலா ஹாரிஸ்க்கு 45.9 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது. வட கரோலினாவில் டிரம்ப் 50.4 சதவீதமும் கமலா ஹாரிசுக்கு 46.8 சதவீதமும் ஆதரவு உள்ளது.

    ராய்ட்டர்ஸ் / இப்சோஸ்

    முன்னதாக கடந்த ஜூலை மாதம் முதல் ராய்ட்டர்ஸ்/இப்சோஸ் வெளியிட்ட அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் கமலா ஹாரிஸ் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.

    கடந்த வாரம் அக்டோபர் 29 ஆம் தேதி ராய்ட்டர்ஸ் / இப்சோஸ் கடைசியாக வெளியிட்ட கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் 1 சதவீத வித்தியாசத்தில் டிரம்பை விட முன்னிலையில் உள்ளார். இந்த கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் 44 சதவீத ஆதரவும், டிரம்ப் 43 சதவீத ஆதரவும் உள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் முந்தைய கருத்துக் கணிப்புகளில் இருந்ததைவிட கமலா ஹாரிசின் ஆதரவு சற்றே குறைந்துள்ளதையும் பார்க்க வேண்டி உள்ளது.

    நியூயார்க் டைம்ஸ்

    நியூயார்க் டைம்ஸ் மற்றும் சியனா கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பில், நெவாடா, வட கரோலினா, விஸ்கான்சின் ஆகிய மாநிலங்களில் கமலா ஹாரிஸ் சற்று முன்னிலையில் உள்ளதாக தெரியவருகிறது. அரிசோனாவில் டிரம்ப் முன்னிலையில் உள்ளார்.

     7 கோடி பேர் 

     50 மாகாணங்களில் மொத்தம் 18.65 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் அவர்களில் 7 கோடி பேர் முன்கூட்டியே வாக்களிக்கும் முறைப்படி தங்களது வாக்குகளை செலுத்தி விட்டனர். அதன்படி 7 மாநிலங்களிலும் சுமார் 40 சதவீத வாக்காளர்கள் ஏற்கனவே வாக்களித்துவிட்டனர்.

    அவர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸ் 8 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார். அதேசமயம் டிரம்ப்க்கு வாக்களிக்பவர்கள் அதிகம் பேர் இன்றைய தினம் நடக்கும் நேரடி வாக்குப்பதிவிலேயே தங்களது வாக்குகளை செலுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.

    இருவருக்கும் இடை சொற்ப சதவீதங்களே வாக்கு வித்தியாசம் உள்ளதால் கடைசி நேரத்தில் நிலைமை யாருக்கு சாதகமாக அமையும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

    • கின்னஸ் சாதனை முயற்சிக்காக கடந்த 2011 முதல் இவர் தனது தோட்டத்தில் ராட்சத பூசணிக்காயை வளர்த்து வருகிறார்.
    • போன்வில்லே நகரில் இருந்து வான்கூவர் வரை 73 கிலோ மீட்டர் தூரத்துக்கு அந்த படகில் சென்றார்.

    அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தைச் சேர்ந்தவர் கேரி கிறிஸ்டென்சன் (வயது 46). கின்னஸ் சாதனை முயற்சிக்காக கடந்த 2011 முதல் இவர் தனது தோட்டத்தில் ராட்சத பூசணிக்காயை வளர்த்து வருகிறார். அதன்படி இந்த ஆண்டு சுமார் 500 கிலோ எடை கொண்ட பூசணிக்காயை வளர்த்தார். பின்னர் அந்த பூசணி மூலம் ஒரு படகை உருவாக்கினார்.

    இதனையடுத்து கின்னஸ் சாதனை முயற்சியாக கொலம்பியா ஆற்றில் அந்த படகை துடுப்பு மூலம் செலுத்தினார். அதன்படி போன்வில்லே நகரில் இருந்து வான்கூவர் வரை 73 கிலோ மீட்டர் தூரத்துக்கு அந்த படகில் சென்றார். 26 மணி நேரம் நீடித்த இந்த கின்னஸ் சாதனை முயற்சி சமூகவலைதளங்களில் வைரலாகியது. இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டு உள்ளனர்.

    • மராபி எரிமலை நேற்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
    • சிதைந்த வீடுகளுக்குள் சிக்கி பலர் பலியாகியிருக்கலாம் என்று அச்சம்.

    பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்திருப்பதால் இந்தோனேசியாவில் செயல்படும் பல எரிமலைகள் காணப்படுகின்றன.

    அவற்றில் சுமத்ரா மாகாணத்தில் உள்ள மராபி எரிமலை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இங்கு மலையேற்ற வீரர்கள் சாகசத்தில் ஈடுபடுவதால் சிறந்த சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது.

    இந்தநிலையில் மராபி எரிமலை நேற்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    இதில், சுமார் 6 ஆயிரத்து 500 அடி உயரத்துக்கு கரும்புகை வெளியேறியது. எனவே அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது.

    இதனால் எரிமலையை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

    இதில், வீடுகள் எரிந்து 9 பேர் பலியாகியுள்ளனர். நெருப்புக்குழம்பு வெளியேறுவதால், அருகில் உள்ள கிராமங்களில் உள்ள வீடுகள் எரிந்து சாம்பலாகின.

    சிதைந்த வீடுகளுக்குள் சிக்கி பலர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என கூறப்படுகிறது.

    • அட்லஸ் இன்டெல் என்கிற நிறுவனம் வெளியிட்ட கருத்தக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • இரு வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவும் என்று கருத்து.

    வல்லரசு நாடான அமெரிக்காவில் நாளை அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்கள்.

    தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், இருவரும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் அதிபர் தேர்தலில் யார் எவ்வளவு முன்னிலையில் உள்ளனர் என்று அட்லஸ் இன்டெல் என்கிற நிறுவனம் வெளியிட்ட கருத்தக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் தனது போட்டியாளரும் அமெரிக்க துணை அதிபருமான கமலா ஹாரிஸை விட ஏழு மாநிலங்களில் முன்னிலை பெற்றுள்ளதாக அட்லஸ் இன்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகும். இந்த மாநிலங்களில் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார்.

    இதற்கு முன்னதாக, அயோவா மாகாணத்தில் நடந்த கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அவருக்கு 47 சதவீத ஆதரவு கிடைத்தது. டிரம்புக்கு 44 சதவீத ஆதரவு கிடைத்தது. டிரம்பை விட கமலா ஹாரிஸ் 3 சதவீதம் அதிகம் பெற்றுள்ளார்.

    2016 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் அயோவா மாகாணத்தில் டிரம்ப் எளிதில் வெற்றி பெற்று இருந்தார். தற்போது அங்கு அவர் பின்தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும் இரு வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவும் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    • 1990 களில் இல்லாத டிஎன்ஏ டெக்னாலஜி 2017 இல் எப்.பி.ஐக்கு கை கொடுத்தது.
    • 61 வயதான ஷீலா சிறையில் இருந்து வெளியே வந்தார்.

    கணவனின் முன்னாள் மனைவியைக் கோமாளி வேசம் போட்டு கொலை செய்த அமெரிக்கப் பெண்மணி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த புளோரிடா கில்லர் கிளவுன் கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    கில்லர் கிளவுன் கொலை 

    மைக்கல் வாரன் என்பவரது மனைவி மார்லன் வாரன் என்ற பெண்மணியில் வீட்டின் காலிங் பெல்லை கிளவுன்[ கோமாளி] வேஷம் போட்ட ஒருவர் அழுத்தினார். கதவை திறந்த மார்லனிடம், கையில் வைத்திருந்த பலூன்களை அந்த கோமாளி கொடுத்தது. பலூங்களை வாங்கிக்கொண்டு How nice என்று மார்லன் சொல்லி முடிக்கும் முன்னர் அந்த கோமாளி மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மார்லன் முகத்திலேயே சுட்டது. மார்லன் உயிரிழக்க கோமாளி வேடம் போட்டவர் அங்கிருந்து தப்பினார்.

     

     ஷீலா

    இந்த கொலை வழக்கில் எந்த விதமாக துப்பும் கிடைக்காமல் எப்.பி.ஐ. திணறி வந்தது. மைக்கல் வாரன் ஷீலா என்ற பெண்ணை மறுமணம் செய்துகொண்டு தனது வாழ்க்கையை தொடர்ந்தார். ஆனால் 1990 களில் இல்லாத டிஎன்ஏ டெக்னாலஜி  2017 இல் எப்.பி.ஐக்கு  கை கொடுத்தது. அதன்படி மைக்கல் வாரனின் இரண்டாவது மனைவி ஷீலா கீன் வாரன் தான் அந்த கொலையாளி என்ற முடிவுக்கு எப்.பி.ஐ.வந்தது.

     மரண தண்டனை

    ஷீலா கோமாளி துணி வாங்கியது, குறிப்பிட்ட அந்த பலூன்களை வாங்கியது என்று ஆதாரங்களைச் சேகரித்து கடந்த 2017 ஆம் ஆண்டு ஷீலாவை எப்.பி.ஐ. கைது செய்தது. 7 ஆண்டுகள் அவர் சிறையில் இருந்த நிலையில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது, ஆனால் தனது குற்றத்தை ஷீலா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் நீதிமன்றத்தில் முன்வந்து ஒப்புக்கொண்டதால் அவருக்கு 12 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.

     

    ஏற்கனவே 7 ஆண்டுகள் சிறையில் இருந்த நிலையில் தற்போது நன்னடத்தை காரணமாக ஷீலா முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளார். அதன்படி நேற்று முன்தினம் நவம்பர் 2 அன்று சிறையில் இருந்து 61 வயதான ஷீலா வெளியே வந்தார்.

    குற்றம்

    கொலைசெய்யப்பட்ட மார்லனின் கணவர் மைக்கல் ஒரு கார் டீலராக இருந்துள்ளார். ஷீலா இவரிடம் வேலை பார்த்து வந்துள்ளார். மைக்கிலும் ஷீலாவும் காதல் உறவில் இருந்ததாக அவர்களது சகாக்கள் கூறுகின்றனர். மார்லன் கொல்லப்பட்ட பின்னர் திருமணம் செய்துகொண்ட மைக்கல் மற்றும் ஷீலா கைது செய்யப்படும்வரை ஒன்றாகவே வாழ்ந்து வந்துள்ளனர்.

     

    அமெரிக்காவின் கில்லர் கிளவுன் 

    ஆனால் தற்போது மரண தண்டனையைத் தவிர்ப்பதற்காகவே ஷீலா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்றும் அவர் கொலை செய்யவில்லை என்றும் அவரது வக்கீல் கூறியுள்ளார். முன்னதாக கடந்த 1970 களில் 33 ஆண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவர் ஜான் வெயின் கேசி. கிளவுன் வேடமைந்த இவர் அமெரிக்காவின் கில்லர் கிளவுன் என்று அறியப்படுகிறார். அதே பாணியில் ஷீலா புளோரிடாவின் கில்லர் கிளவுன் என்று அறியப்படுகிறார்.  

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காற்று தரநிலை குறியீட்டில் ஆயிரத்தை கடந்து மோசம்.
    • மோட்டார் ரிக்ஷாவுக்கு தடை உள்ளிட்ட பல்வேறு தடைகள் போடப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானில் உள்ள லாகூரில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில், தொடக்க பள்ளிகளை ஒருவாரத்திற்கு மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    சுவாசம் மற்றும் அதன் தொடர்பான மற்ற நோய்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லாகூரில் 1.4 கோடி பேர் வசித்து வருகிறார்கள். அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    க்ரீன் லாக்டவுன் என்பதின் ஒரு பகுதியாக 55 சதவீத பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மோட்டார் பொருத்தப்பட்ட ரிக்ஷா போன்றவைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்குள் திருமண மண்டபங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், காற்றுமாசை குறைக்க செயற்கை மழைக்கு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

    வார இறுதி நாளில் காற்று தரநிலை குறியீட்டில் காற்று மாசு லாகூரில் ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது பாகிஸ்தானில் மிகவும் மோசமான தரநிலை ஆகும்.

    இந்தியாவை ஒட்டியுள்ள கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் கடந்த சில நாட்களாகவே காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. இந்த காற்று மாசால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என லாகூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • வேலன்சியா, கஸ்டிலா லா மஞ்சா, அண்டலூசியா ஆகிய நகரங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • அவர்களின் வருகையை முன்னிட்டு சேறும், சகதியுமாக இருந்த சாலைகள் சமன்படுத்தப்பட்டன.

    ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கடந்த வாரம் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அங்குள்ள பல மாகாணங்கள் வெள்ளத்தில் மிதந்தன. ஓராண்டு பெய்ய வேண்டிய மழை சில மணி நேரங்களில் கொட்டித் தீர்த்தது.

    வேலன்சியா, கஸ்டிலா லா மஞ்சா, அண்டலூசியா ஆகிய நகரங்களில் கனமழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீருடன் சேறும் வீடுகளைச் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். ஏராளமான சாலைகள், தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

    வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 217 ஆக உயர்ந்துள்ளது. வாலென்சியா பகுதியில் மட்டும் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது. பலர் மாயமாகி உள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. ஆனாலும் மீட்புப் பணி சரியாக நடக்கவில்லை என்று மக்கள் கடும் அதிருப்தியில் இருந்துள்ளனர்.

    இந்த சூழலில் வாலென்சியாவில் பைபோர்ட்டோ நகரில்  வெள்ள பாதிப்புகளை பார்வையிட ஸ்பெயின் மன்னர் ஃபிலிப் மற்றும் அவரது மனைவி, ராணி லெட்டிஸியா வருகை தந்தனர். அவர்களின் வருகையை முன்னிட்டு சேறும், சகதியுமாக இருந்த சாலைகள் சமன்படுத்தப்பட்டன.

    பாதுகாலவர்கள் புடை சூழ ராணியுடன் மன்னர் ஃபிலிப் வருவதை பார்த்த மக்கள் ஆத்திரத்தில் அவர்களை எதிர்த்து கோஷமிட்டனர். அவர்களை திரும்பி போகுமாறு முழக்கமிட்டபடியே சாலையில் கிடந்த சேற்றை அள்ளி மன்னர் மீதும் ராணி மீதும் வீசினர். இதனால் மன்னரின் முகம் மற்றும் ஆடைகள் சேறானது. உடன் வந்த ஸ்பெயின் பிரதமரும் இதில் சிக்கிக்கொண்டார்.

    உடன் இருந்த பாதுகாவலர்கள் உடனே மன்னரை சுற்றி அரணாக நின்றனர். அவர்களை விலக்கி ஆத்திரமுற்றிருந்த மக்களை சமாதானப்படுத்தும் வகையில் மன்னர் பேசினார். ஆனால் கோபத்தில் இருந்த மக்கள் அவரை கடுமையாக திட்டித் தீர்த்தனர். நிலைமை சரியில்லாததால் ராணியுடன் அந்த இடத்தில் இருந்து மன்னர் அகன்றார். மன்னர் மீதே சேறு வீசப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பிராம்டனில் ஹிந்து மகா சபை கோவில் உள்ளது
    • இந்த சம்பத்துக்கு எதிர்க்கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    கனடாவின் பிராம்டன் நகரில் அமைந்துள்ள ஹிந்து மகாசபை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிராம்டனில் உள்ள ஹிந்து மகா சபை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது அங்கு கூடிய காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் குச்சியால் தாக்கியுள்ளனர்.

    கையில் காலிஸ்தான் கொடியுடன் அவர்கள் பக்தர்களை தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியானது. இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு கனடா பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, மதத் தளத்தில் நடக்கும் வன்முறைச் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது.

    ஒவ்வொரு கனேடியருக்கும் தங்கள் நம்பிக்கையை சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் கடைப்பிடிக்க உரிமை உண்டு. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துளளார். இந்த சம்பத்துக்கு எதிர்க்கட்சி மற்றும் இந்திய வம்சாவளி அரசியல்வாதிகள் தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வளர்ச்சிப் பாதையில் செல்லும் இந்தியா, உலகத்துடன் வளர விரும்புகிறது.
    • ஆஸ்திரேலியாவில் மகாத்மா சிலைக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மரியாதை செலுத்தினார்.

    மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறை சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இரண்டு நாடுகள் பயணத்தின் அங்கமாக முதலில் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அதன்பிறகு அங்குள்ள இந்திய வம்சாவளியினர் இடையே உரையாற்றிய அவர், வளர்ச்சிப் பாதையில் செல்லும் இந்தியா, உலகத்துடன் வளர விரும்புகிறது என்றும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு நாடுகளிடையே உண்மையான நல்லெண்ணமும் விருப்பமும் உள்ளது என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் பிரிஸ்பேன் நகரில் ரோமா சாலை பார்க்லேண்ட்ஸில் உள்ள மகாத்மா சிலைக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மரியாதை செலுத்தினார்.

    இதைத்தொடர்ந்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், மகாத்மா காந்தியின் அமைதி மற்றும் மதநல்லிணக்க செய்தி உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    ×