என் மலர்
உலகம்
- ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு 50 மாகாணங்களிலும் நேற்று தொடங்கியது.
- புதிய ஜனாதிபதி கமலா ஹாரிசா? அல்லது டிரம்பா? என்பது இன்று தெரியவரும்.
வல்லரசு நாடுகளில் ஒன்றாக அறியப்படும் அமெரிக்காவில் 47-வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு மொத்தம் உள்ள 50 மாகாணங்களிலும் நேற்று தொடங்கியது.
பல கட்சி வேட்பாளர்கள் போட்டியில் இருந்தாலும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களாக கமலா ஹாரிஸ்-டிரம்ப் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. புதிய ஜனாதிபதி கமலா ஹாரிசா? அல்லது டிரம்பா? என்பது இன்று (புதன்கிழமை) தெரியவரும்.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற நேரத்தில் புதிய ஜனாதிபதி யார் என்ற சூதாட்டமும் சூடுபிடித்துள்ளது. இதில் டிரம்ப் வெற்றி பெறுவார் என்று அதிகமானோர் பணம் கட்டியுள்ளனர். இதன் மூலம் இந்த சூதாட்ட சந்தையில் டிரம்பின் வெற்றி வாய்ப்பு 58.6 சதவீதத்தில் இருந்த 60.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், சூதாட்ட சந்தையில் இதுவரை இந்திய மதிப்பில் ரூ.26 ஆயிரத்து 880 கோடி பந்தய தொகையாக கட்டப்பட்டுள்ளது என்பதும், அங்கு இதுபோன்ற சூதாட்டம் சட்டப்பூர்வமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
+2
- இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணி முதல் இன்று காலை 5.30 மணி வலை வாக்குப்பதிவு நடைபெற்றது.
- ஸ்விங் மாகாணங்களான ஏழு மாகாணங்கள் வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கும்.
அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இரண்டு மாகாணங்களில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
- குடியரசு கட்சிக்கு சாதகமான வெர்மொன்ட் மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி
அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின.
தொடக்க சுற்றுகள் முடிவில் டொனால்டு டிரம்ப் முன்னிலை பெற்றுள்ளார்.
இண்டியானா மாகாணாத்தில் டொனால்டு டிரம்ப் அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றுள்ளார். அந்த மாகாணத்தில் 11 எல்க்டரல் காலேஜ் வாக்குகள் உள்ளன. இது டிரம்பிற்கு முழுமையாக வந்து சேரும். இண்டியானா மாகாணம் குடியரசு கட்சிக்கு சாதகமானதாகும்.
அதேபோல் கென்டக்கி மாகாணத்திலும் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இங்கு அவர் 3-வது முறையாக ஆதிக்கம் செலுத்தியுள்ளார். இங்கு 8 எலக்ட்ரல் காலேஜ் வாக்குகள் உள்ளது.

வெர்மொன்ட் மாகாணத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார். இந்த மாகாணத்தில் இதற்கு முன்னதாக குடியரசு கட்சிக்கு சார்பாக வாக்களித்து வந்தது. தற்போது ஜனநாயக கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.
மேலும் 4 மாகாணத்தில் டிரம்ப் முன்னிலை பெற்று வரும் நிலையில், கமலா ஹாரிஸ் ஒரு மாகாணத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.
- மொத்தமுள்ள 538 தேர்வாளர் வாக்குகளில் 270 வாக்குகளை பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராவார்.
- எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவது வழக்கம். இந்த தேர்தலில், பொதுமக்களின் வாக்குகளை விட ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள தேர்வாளர்களே வெற்றியை முடிவு செய்பவர்களாக உள்ளனர்.
அதனால், மொத்தமுள்ள 538 தேர்வாளர் வாக்குகளில் 270 வாக்குகளை பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராவார். அமெரிக்காவில் சமூக மற்றும் பொருளாதார நிலை மேம்பாடு அடைவதற்கான வழிகளை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர். விலைவாசி உயர்வு, வரி குறைப்பு, குடியேற்ற விவகாரம், பொருளாதார நெருக்கடி, துப்பாக்கி கலாசாரம் மற்றும் கருக்கலைப்பு உரிமை போன்ற விவகாரங்கள் அமெரிக்கா முழுவதும் பரவலாக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன.
இந்த தேர்தலில், ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
வேறு சில வேட்பாளர்கள் போட்டியில் இருந்தபோதும், இந்த இரு கட்சி வேட்பாளர்களிடையே நேரடி போட்டி உள்ளது. கட்சிகளின் வேட்பாளர்கள் இருவரும் நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தனர். ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ், முன்கூட்டியே வாக்குகளை செலுத்தும் வசதியின்படி, இ-மெயில் மூலம் தனது வாக்கை செலுத்தினார்.
இந்த சூழலில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.
இதைதொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. வெல்லப்போவது டிரம்பா..? கமலா ஹாரிஸா? என்பது இன்று பிற்பகவில் தெரியவரும்.
- வேறு சில வேட்பாளர்கள் போட்டியில் இருந்தபோதும், இந்த இரு கட்சி வேட்பாளர்களிடையே நேரடி போட்டி உள்ளது.
- பல திட்டங்களை வைத்திருக்கிறேன் என்றார்.
அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவது வழக்கம். இந்த தேர்தலில், பொதுமக்களின் வாக்குகளை விட ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள தேர்வாளர்களே வெற்றியை முடிவு செய்பவர்களாக உள்ளனர்.
அதனால், மொத்தமுள்ள 538 தேர்வாளர் வாக்குகளில் 270 வாக்குகளை பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராவார். அமெரிக்காவில் சமூக மற்றும் பொருளாதார நிலை மேம்பாடு அடைவதற்கான வழிகளை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர். விலைவாசி உயர்வு, வரி குறைப்பு, குடியேற்ற விவகாரம், பொருளாதார நெருக்கடி, துப்பாக்கி கலாசாரம் மற்றும் கருக்கலைப்பு உரிமை போன்ற விவகாரங்கள் அமெரிக்கா முழுவதும் பரவலாக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன.
இந்த சூழலில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று (6.11.2024) அதிகாலை 5.30 மணியளவில் தேர்தல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலில், ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
வேறு சில வேட்பாளர்கள் போட்டியில் இருந்தபோதும், இந்த இரு கட்சி வேட்பாளர்களிடையே நேரடி போட்டி உள்ளது. கட்சிகளின் வேட்பாளர்கள் இருவரும் நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தனர். ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ், முன்கூட்டியே வாக்குகளை செலுத்தும் வசதியின்படி, இ-மெயில் மூலம் தனது வாக்கை செலுத்தினார்.
இந்நிலையில், அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் அவர் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியின்போது, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் 2 விஷயங்களுக்கு முன்னுரிமை அளிப்பேன் என கூறினார்.
இதுபற்றி அவர் பேசும்போது, மக்களின் வாழ்க்கை செலவுகளை குறைப்பது அவசியம். அதற்காக பல திட்டங்களை வைத்திருக்கிறேன் என்றார். வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களின் விலை உயர்வுக்கு தேசிய அளவில் தடை விதிக்கும் திட்டம் உள்ளது.
குடும்பங்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு வரி குறைப்பு மற்றும் முதன்முறையாக வீடு வாங்குபவர்களுக்கு உதவியாக முன்பணம் வழங்கும் திட்டம் ஆகியவையும் உள்ளன என்று கூறியுள்ளார்.
இதேபோன்று, குடியுரிமை திட்ட நடைமுறையில் உள்ள குறைகளை சரி செய்வதற்கான தேவையும் உள்ளது. ஜனநாயக மற்றும் குடியரசு என இரண்டு அரசுகளின் நிர்வாகத்தின் கீழும் அது நீண்டகாலம் வரை சரிவர செயல்படுத்த முடியாத நிலையிலேயே உள்ளது. அதனை சரி செய்ய போகிறேன் என்றார்.
அதனுடன், அமெரிக்க தொழிற்சாலை, அமெரிக்க தொழிலாளர்கள் என இவற்றில் முதலீடு செய்யும் பணியும் மேற்கொள்ளப்படும். 21-ம் நூற்றாண்டில் உலகளவில் போட்டியாளராக அமெரிக்கா இருக்கும் என உறுதி செய்யப்படும். வெளிப்படையாக கூறுவதென்றால், 21-ம் நூற்றாண்டில் சீனாவுடனான போட்டியில் நாம் வெற்றி பெறுவோம். இவையே என்னுடைய முன்னுரிமையான விஷயங்கள் ஆகும் என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
குடியேற்ற விவகாரத்தில், எல்லையில் ஏஜெண்டுகளை அதிகரிப்பது, மனித கடத்தலை எதிர்த்து போராடுவது உள்ளிட்ட விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்படும். இதற்காக மசோதா ஒன்றை கொண்டு வரவும் திட்டமிடப்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார். அமெரிக்காவில் மக்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படுத்தும் விஷயங்களை மேற்கொள்ளும் கட்சிக்கு அதிக ஆதரவு இருக்கும் என்றும் பார்க்கப்படுகிறது.
- நாங்கள் எல்லா இடங்களிலும் சிறப்பாக செயல்பட்டோம் என கேட்க முடிந்தது.
- பொருளாதார சரிவில் இருந்து அமெரிக்காவை மீட்டு, பொருளாதார அதிசயம் ஏற்படுத்த போகிறேன் என்று பேசினார்.
புளோரிடா:
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (5.11.2024) காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
வேறு சில வேட்பாளர்கள் போட்டியில் இருந்தபோதும், இந்த இரு கட்சி வேட்பாளர்களிடையே நேரடி போட்டி உள்ளது. கட்சிகளின் வேட்பாளர்கள் இருவரும் நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தனர்
முன்கூட்டியே வாக்களிக்காத வாக்காளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ், முன்கூட்டியே வாக்குகளை செலுத்தும் வசதியின்படி, இ-மெயில் மூலம் தனது வாக்கை செலுத்தினார்.
இதேபோன்று, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தங்களுடைய வீட்டின் அருகே உள்ள பாம் பீச் பகுதியில் அமைந்த வாக்கு மையத்திற்கு மனைவி மெலனியா டிரம்புடன், முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வருகை தந்து, வாக்களித்த பின்னர் நிருபர்களிடம் பேசினார்.
அவர் கூறும்போது, நான் அதிக நம்பிக்கையாக உணர்கிறேன். நாங்கள் எல்லா இடங்களிலும் சிறப்பாக செயல்பட்டோம் என கேட்க முடிந்தது. தேர்தலில் வெற்றி பெறுவேன் என்பதில் அதிக நம்பிக்கை உள்ளது என்றார்.
அவர் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) பென்சில்வேனியா மாகாணத்தில் அரசியல் பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது, கடின உழைப்பை தரும் தேசப்பற்றாளர்கள் நாட்டை பாதுகாக்க போகிறார்கள் என்றார். என்னுடைய தலைமையின் கீழ், பொருளாதார சரிவில் இருந்து அமெரிக்காவை மீட்டு, பொருளாதார அதிசயம் ஏற்படுத்த போகிறேன் என்று பேசினார்.
அமெரிக்காவை வளம் கொழிக்கும் நாடாக மீண்டும் உருவாக்குவோம். ஆனால், அதற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். 4 ஆண்டுகளாக நாம் அனைவரும் இதற்காக காத்திருந்தோம் என்றும் குறிப்பிட்டார்.
- இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பு இடையே நடந்துவரும் போர் ஓர் ஆண்டை கடந்துள்ளது.
- இந்தப் போரில் இதுவரை சுமார் 43,000 பேர் பலியாகினர்.
காசா:
இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்து வரும் போர் ஓர் ஆண்டைக் கடந்துள்ளது. இந்தப் போரில் இதுவரை சுமார் 43,000 பேர் பலியாகினர்.
மனிதாபிமான அடிப்படையில் காசாவில் போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தி வருகின்றன.
ஹமாஸ் அமைப்பை அடியோடு ஒழிக்கும்வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என கூறி வரும் இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.
இதற்கிடையே, கடந்த சில வாரமாக வடக்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் வான்வழியாகவும், தரைவழியாகவும் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில், வடக்கு காசாவில் பெய்ட் லாஹியா நகரில் உள்ள ஒரு வீடு மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 8 பெண்கள், 6 குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அமெரிக்க தேர்தலில் முன்கூட்டியே வாக்குகளை செலுத்தும் வசதியும் உள்ளது.
- இதைப் பயன்படுத்தி 7 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் ஏற்கனவே வாக்களித்துள்ளனர்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரியுடன் முடிவடைகிறது.
அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஏற்பாடுகள் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தொடங்கிவிட்டன.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதிபர் தேர்தலுடன், பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் (435 உறுப்பினர்கள்) மற்றும் செனட் சபையின் 34 உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
13 மாநில மற்றும் பிராந்திய ஆளுநர் பதவிகள் மற்றும் பல மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தல்களும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இந்த இரு கட்சி வேட்பாளர்களிடையே நேரடி போட்டி உள்ளது.
அமெரிக்க சட்டப்படி தேர்தலில் முன்கூட்டியே வாக்குகளை செலுத்தும் வசதியும் உள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி 7 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் ஏற்கனவே வாக்களித்துவிட்டனர். ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் இ-மெயில் மூலம் நேற்று தனது வாக்கை செலுத்தினார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முன்கூட்டியே வாக்களிக்காத வாக்காளர்கள் இன்று தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்கு எண்ணிக்கையும் தொடங்கிவிடும்.
நாளை காலை அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பது தெரியவரும்.
- இந்த விமான விபத்தினால் யாரும் உயிரிழக்கவில்லை
- பயணிகள் அலறியடித்து ஓடியதால் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இந்தோனேசியா நாட்டின் ஜெயபுராவில் உள்ள சென்டானி விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்த திரிகானா ஏர் 737-500 என்ற விமானத்தின் என்ஜினில் திடீரென தீப்பிடித்ததால் பயணிகள் அலறியடித்த படி விமானத்தில் இருந்து அவசரமாக வெளியேறினர்.
விமானத்தின் இறக்கையில் இருந்து தீப்பொறி பறப்பது மற்றும் பயணிகள் விமானத்தில் இருந்து அவசர அவசரமாக கீழே இறங்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தினால் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் சென்டானி விமான நிலைய அதிகாரி சூர்யா ஏகா தெரிவித்தார்.
இந்த விபத்து காரணமாக இந்த விமான பயணம் ரத்து செய்யப்பட்டது என்றும் பயணிகளை வேறு விமானத்தில் மாற்றி அனுப்பி வைக்க உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அமெரிக்காவுக்கு வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத மிரட்டல் விடுத்து வருகிறது
- இந்திய நேரப்படி இன்று மாலை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்குகிறது
உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி இன்று மாலை தொடங்குகிறது. இந்நிலையில் தென் கொரியாவையும் அதற்கு உதவும் அமெரிக்காவையும் பரம எதிரியாக கருதும் வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை செய்து சர்வதேச அரங்கில் பீதியை கிளப்பியுள்ளது.
சமீப காலங்களாகவே அமெரிக்காவுக்கு தொடர்ந்து அணு ஆயுத மிரட்டல் விடுத்துவரும் வட கொரியா எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் ரஷியாவுடன் நட்பு பாராட்டி வருகிறது. உக்ரைன் போர் சூழலில் ரஷியாவுக்கு 12 ஆயிரம் வரையிலான வட கொரிய ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். தென் கொரியாவும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் இதை உறுதிப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் இன்றைய தினம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்னதாக வட கொரிய ராணுவம் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை கிழக்கு கடல் நோக்கி ஏவி சோதனை செய்துள்ளது. இதை தென் கொரியாவும், ஜப்பானும் உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த ஏவுகணைகள் சுமார் 400 கி.மீ. தூரம் வரை பாய்ந்து சென்று கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது. சர்வதேச அரசியல் களம் அமெரிக்க தேர்தலை நோக்கி திரும்பியிருக்க வடகொரியாவின் இந்த சோதனை உலக நாடுகளிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
- தாய்லாந்து அரசாங்கம் இந்தியர்களுக்கு விசா இல்லாத நுழைவை அறிவித்துள்ளது.
- 2024-ஆம் ஆண்டின் நவம்பர் 11-ஆம் தேதியுடன் முடிவடையவிருந்த விசா தளர்வு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து செல்லும் இந்தியப் பயணிகள் முன்னதாகவோ தாய்லாந்தில் இறங்கிய பிறகோ விசா பெற வேண்டிய அவசியம் இல்லை. நவம்பர் 11-ம் தேதி நிறைவடைய இருந்த விசா சலுகையை காலவரம்பின்றி தாய்லாந்து அரசு நீட்டித்துள்ளது.
தாய்லாந்து அரசாங்கம் இந்தியர்களுக்கு விசா இல்லாத நுழைவை அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்திய குடிமக்கள் நீண்ட நாட்கள் விசா இல்லாமல் தாய்லாந்தில் தங்கி வரலாம். 2024-ஆம் ஆண்டின் நவம்பர் 11-ஆம் தேதியுடன் முடிவடையவிருந்த விசா தளர்வு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளின் படி இந்தியர்கள் தாய்லாந்தில் விசா இல்லாமல் 60 நாட்கள் வரை தங்கி வர அனுமதிக்கப்படுகிறார்கள்.
உள்ளூரில் இருக்கும் இமிகிரேஷன் ஆபீஸில் விண்ணப்பித்து 30 நாட்களுக்கு உங்களுடைய வருகையை எக்ஸ்டென்ட் செய்து கொள்ளலாம். இந்தியர்களுக்கு விசா இல்லாத நுழைவை நீட்டித்திருக்கும் காரணத்தினால் தாய்லாந்துக்கு சுற்றுலா செல்ல திட்டமிடும் இந்தியர்களுக்கு சுற்றுலா செல்வது மிகவும் எளிதாக மாறியுள்ளது.
ஆவணங்களே இல்லாத புதிய நடைமுறையின் காரணமாக 2024-ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் அக்டோபர் வரையில் இந்தியா சுற்றுலா பயணிகளின் வரத்து 16.17 மில்லியனாக அதிகரித்துள்ளது. விசா இல்லாத நுழைவு காரணமாக வார இறுதி விடுமுறையை பயன்படுத்தி தாய்லாந்துக்கு செல்லும் இந்தியர்களும் அதிகரித்துள்ளனர்.
- டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
- இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்? என்பதுதான் தற்போதைய கோடிக்கணக்கானோரின் கேள்வி. இதற்கான நாள்தான் இன்று. இன்று அமெரிக்காவில் அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மக்கள் வாக்களித்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுப்பதற்கு முன்னதாகவே யார் வெற்றி பெறுவார் என்று பல்வேறு கணிப்புகள் நடத்தப்படுவது உண்டு. சில நேரங்களில் செல்லப்பிராணிகள் அல்லது பூங்காவில் உள்ள மிருகங்கள் ஆகியவற்றை வைத்து கணிப்பது உண்டு.
அப்படித்தான் தாய்லாந்தில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் குட்டி நீர் யானையை வைத்து அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றி யாருக்கு என கணித்துள்ளனர்.
தாய்லாந்தின் உள்ள பூங்காவில் மூ டெங் என்ற குட்டி நீர் யானை உள்ளது. இந்த நீர் யானையை கவரும் வகையில் இரண்டு தர்பூசணி பழங்கள் அலங்கரிக்கப்பட்டு, ஒன்றில் டொனால்டு டிரம்ப் எனப் பெயரிட்டு வைக்கப்பட்டுள்ளது. மற்றொன்றில் கமலா ஹாரிஸ் என பெயரிட்டு தனித்தனியே வைக்கப்பட்டது
நீரில் இருந்து வெளியே வந்த குட்டி நீர் யானை நேராக சென்று டொனால்டு டிரம்ப் எனப் பெயர் எழுதப்பட்ட பழத்தை சாப்பிடுகிறது. இதன்மூலம் டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவார் என குட்டி நீர் யானை கணித்ததாக வெளியான வீடியோ வைரலாக பரவி வருகிறது.
மூ டெங் என்ற குட்டி நீர் யானை தீர்க்கதரிசியாக மாறுமா? என்பது தேர்தல் முடிவுக்கு பின்னர்தான் தெரியும்.
2010-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஆக்டோபஸ் இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஜெயிப்பது யார்? என்பதை கணித்து ஆரூடம் கூறியது. அது கணித்தது அப்படியே நடந்தது. இந்த கணிப்பு உலக முழுவதும் பிரபலமாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப்- கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.






