கனடா: இந்து கோவிலில் பக்தர்கள் மீது காலிஸ்தான் கும்பல் தாக்குதல் - பரபரப்பு வீடியோ.. ட்ரூடோ கண்டனம்

பிராம்டனில் ஹிந்து மகா சபை கோவில் உள்ளது இந்த சம்பத்துக்கு எதிர்க்கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கனடா: இந்து கோவிலில் பக்தர்கள் மீது காலிஸ்தான் கும்பல் தாக்குதல்  - பரபரப்பு வீடியோ.. ட்ரூடோ கண்டனம்
Published on

கனடாவின் பிராம்டன் நகரில் அமைந்துள்ள ஹிந்து மகாசபை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிராம்டனில் உள்ள ஹிந்து மகா சபை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது அங்கு கூடிய காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் குச்சியால் தாக்கியுள்ளனர்.

கையில் காலிஸ்தான் கொடியுடன் அவர்கள் பக்தர்களை தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியானது. இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு கனடா பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, மதத் தளத்தில் நடக்கும் வன்முறைச் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது.

ஒவ்வொரு கனேடியருக்கும் தங்கள் நம்பிக்கையை சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் கடைப்பிடிக்க உரிமை உண்டு. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துளளார். இந்த சம்பத்துக்கு எதிர்க்கட்சி மற்றும் இந்திய வம்சாவளி அரசியல்வாதிகள் தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com