என் மலர்tooltip icon

    உலகம்

    • ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 38 பேர் உயிரிழந்தனர்.
    • மாயமான 100 பேரை தேடும் பணியில் மீட்புக் குழு ஈடுபட்டு வருகிறது.

    கின்ஷசா:

    மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடான காங்கோவின் இகியுடர் மாகாணத்தில் புசிரா என்ற ஆறு பாய்கிறது.

    இகியுடர் மாகாணத்தில் இருந்து நேற்று இரவு அண்டை நகருக்கு புசிரா ஆற்றில் நேற்று படகு ஒன்று புறப்பட்டது. அந்தப் படகில் 150க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

    கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட பலர் தங்கள் சொந்த ஊருக்கு அந்தப் படகில் புறப்பட்டுச் சென்றனர்.

    இந்நிலையில், ஆற்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் படகில் பயணித்த அனைவரும் ஆற்றில் தத்தளித்தனர்.

    இதில் ஆற்றில் மூழ்கி 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 100 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் மீட்புக்குழு ஈடுபட்டு வருகிறது.

    கடந்த அக்டோபர் மாதம் படகு கவிழ்ந்த விபத்தில் 78 பேர் பலியானது நினைவிருக்கலாம்.

    • வளைகுடா ஸ்பிக் தொழிலாளர் முகாம் சென்ற பிரதமர் மோடி இந்திய தொழிலாளர்களுடன் உரையாடினார்.
    • ஹாலா மோடி என்ற தலைப்பில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

    குவைத்:

    பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக குவைத் சென்றுள்ளார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினர் ஒன்று சேர்ந்து பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    வளைகுடா ஸ்பிக் தொழிலாளர் முகாமிற்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள இந்திய தொழிலாளர்களை சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களுடன் உற்சாகமாக கலந்துரையாடினார்.

    குவைத்தின் ஷேக் சாத் அல் அப்துல்லா விளையாட்டு உள்ளரங்கில், ஹாலா மோடி என்ற தலைப்பில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், குவைத் ஆட்சியாளர்களுடன் நான் பேசும்போது எல்லாம் இந்தியர்களை அவர்கள் புகழ்ந்து பேசுகின்றனர் என தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து, குவைத்தில் அரேபியன் கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். மேலும், போட்டியையும் கண்டு களித்தார்.

    • டயர் திடீரென வெடித்ததால் பயணிகள் பஸ் கட்டுப்பாட்டை இழந்தது.
    • எதிரே வந்த லாரி மீது பஸ் மோதிய விபத்தில் 38 பேர் உயிரிழந்தனர்.

    பிரேசிலா:

    பிரேசில் நாட்டின் மினஸ் கரேஸ் மாகாணத்தில் இருந்து நேற்று மாலை சால் பாலோ நகர் நோக்கி பயணிகள் பஸ் ஒன்று புறப்பட்டது. அதில் 45 பயணிகள் பயணம் செய்தனர்.

    தியொபிலோ ஒடானி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பஸ்ஸின் டயர் ஒன்று திடீரென வெடித்தது. இதனால் அந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது எதிரே வந்த லாரி மீது பஸ் வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் 38 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர்.

    விபத்து குறித்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாலை விபத்தில் 38 பேர் பலியானது குறித்து அறிந்த பிரேசில் அதிபர் லூலா டா சில்வா, பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.

    நடப்பு ஆண்டில் மட்டும் சாலை விபத்து தொடர்பான சம்பவங்களில் சுமார் 10 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர் என அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    லாரி மீது பயணிகள் பஸ் மோதியதில் 38 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக குவைத் சென்றுள்ளார்.
    • இந்திய வம்சாவளியினர் ஒன்று சேர்ந்து பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    குவைத்:

    பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக குவைத் சென்றுள்ளார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினர் ஒன்று சேர்ந்து பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    இந்நிலையில், குவைத்தின் ஷேக் சாத் அல் அப்துல்லா விளையாட்டு உள்ளரங்கில், ஹாலா மோடி என்ற தலைப்பில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியாவில் இருந்து குவைத் வருவதற்கு 4 மணி நேரங்களே ஆகும். ஆனால், இந்திய பிரதமர் ஒருவர் இங்கு வருவதற்கு 4 தசாப்தம் ஆகி உள்ளது.

    இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ளீர்கள். இங்கு அனைவரையும் ஒரே இடத்தில் பார்ப்பது என்பது மினி இந்தியா கூடியுள்ளது போல் தெரிகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் இங்கு வருகின்றனர். இந்திய வம்சாவளி டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள், குவைத் மருத்துவ உள்கட்டமைப்பின் பெரிய பலமாக உள்ளனர். இந்நாட்டின் எதிர்கால தலைமுறையை கட்டமைப்பதில் இந்திய ஆசிரியர்கள் உதவுகின்றனர்.

    குவைத் தலைவர்களிடம் பேசுகையில், அவர்கள் இந்திய சமூகத்தினரைப் புகழ்கின்றனர். உங்களின் கடின உழைப்பு, நேர்மை மற்றும் திறன் ஆகியவற்றை பார்த்து குவைத் குடிமக்கள் உங்கள்மீது பெரிய மரியாதை வைத்துள்ளனர்.

    வர்த்தகம் மற்றும் புதுமைகள் மூலம் ஊக்கத்தைத் தூண்டும் பொருளாதாரத்தை விரும்புகிறது. இந்தியாவும் புதுமையிலும், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது. புதிய குவைத்திற்கு தேவையான திறன், தொழில்நுட்பம், புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் மனித வளம் இந்தியாவிடம் உள்ளது என தெரிவித்தார்.

    • விமான கதவை திறந்து கீழே இறங்க முயன்றுள்ளார்.
    • ஏணிப்படி இல்லாததை கவனிக்காமல் கால் எடுத்து வைத்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    TUI-க்கு சொந்தமான விமானம் இங்கிலாந்தின் கிழக்கு மிட்லேண்ட்ஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் பயணிகள் ஏறுவதற்காக ஏணிப்படி வைக்கப்பட்டிருக்கும். விமானம் புறப்படும் முன் கதவு அடைக்கப்பட்டு, அந்த ஏணிப்படிகள் அகற்றப்படும். அதன்பின் விமானம் புறப்படும்.

    அந்த வகையில் ஏணிப்படிகள் பொருத்தப்பட்டு பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறினர். விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்தது. அப்போது விமான பணிப்பெண் ஒருவர் கதவை திறந்து கீழே இறங்க முயன்றார். ஆனால் படிக்கட்டு விமானத்துடன் இணையாமல் தனியாக இருந்துள்ளது. விமானம்தான் புறப்படவில்லையே என அந்த பணிப்பெண் கதவை திறந்தது படிக்கட்டில் கால் வைப்பது போல் வைக்க, நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். விமான ஓடுதளத்தில் விழுந்த பணிப்பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனடியாக ஆம்புலன்ஸ் சர்வீஸ் அழைக்கப்பட்டு முதலுதவி கொடுக்கப்பட்டது. பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விமான பணிப்பெண் கீழே விழுந்தது எப்படி என விசாரணை நடத்து வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    விமான பணிப்பெண் கதவை திறந்து, ஏணிப்படி இருக்கும் என காலை எடுத்து வைத்தார். ஆனால் அங்கே இருக்க வேண்டிய ஏணிப்படி இருக்கவில்லை. அது ஏன் எனத் தெரியவில்லை. அதனால் கீழே விழுந்தார். அவருக்கு பயங்கர காயம் ஏற்பட்டது என விமான நிலையத்தில் இருந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

    • ரஷியா- உக்ரைன் இடையே டிரோன் தாக்குதல் அதிகரித்து வருகிறது.
    • ரஷியாவின் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து உக்ரைன் இன்று டிரோன் தாக்குதல் நடத்தியது.

    உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து இரண்ரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் இரு நாடுகளுக்கு இடையிலான போர் நடைபெற்று வருகிறது. போர் நிறுத்தத்திற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுத்தபாடில்லை.

    தற்போது உக்ரைன் அமெரிக்க ஏவுகணைகள் மூலம் ரஷியா மீது தாக்குதல் நடத்துவதால், ரஷியாவும் உக்ரைனுக்கு எதிராக பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் ரஷியாவின் தலைநகர் மாஸ்கோ நகரில் இருந்து 800 கி.மீ. தொலைவில் உள்ள கசான் நகர் (டார்டஸ்டன் குடியரசு தலைநகர்) மீது உக்ரைன் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

    இதில் இரண்டு டிரோன்கள் மக்கள் வசித்து வரும் மிகப்பெரிய கட்டடங்கள் மீது மோதி தீப்பிடித்து எரிகிறது. இந்த டிரோன் தாக்குதல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

    கடந்த 2001-ம் ஆண்டு அமெரிக்காவின் வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரம் மீது விமானங்களை மோதவிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதே ஸ்டைலில் தற்போது ரஷியா மீது உக்ரைன தாக்குதல் நடத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது.

    கசான் நகரில் சுமார் 13 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். மக்கள் வசித்து வரும் கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் குடியிருப்புவாசிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. பாதுகாப்பாக மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதன் காரணமாக விமான நிலையத்தில் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டது.

    இன்று மிகப்பெரிய டிரோன் தாக்குதலால் கசான் பாதிப்படைந்தது. முன்னதாக இன்டஸ்ட்ரியல் என்டர்பிரைசஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இன்று காலை மக்கள் வசிக்கும் இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என டார்டஸ்டன் குடியரசு தலைவர் ருஸ்டாம் மின்னிகானோவ் தெரிவித்துள்ளார்.

    இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் பதில் ஏதும் அளிக்கவில்லை.

    இன்று காலை சுமார் இரண்டு மணி நேரத்தில் மூன்று முறை அலை அலையாக டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. 6 டிரோனகள் சுட்டு வீழ்த்தப்பட்டன. எத்தனை டிரோன்கள் தாக்குதல் நடத்தியது என்பதை கூறு இயலாது என ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதேபோன்று ஆகஸ்ட் மாதம் ரஷியாவின் சரடோவ் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 4 பேர் காயம் அடைந்தனர்.

    2001-ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இரட்டை கோபுரம், பென்டகன், பென்சில்வேனியாவில் உள்ள நிலப்பகுதியில் விமானங்களை மோதவிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுமார் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

    • ஓபன்ஐ (OpneI) கூகுள் தேடுதலுக்கு (Google Search) கடும் அச்சுறுத்தலாக இருக்கும் என கணிப்பு.
    • செயல்திறனை அதிகரிக்கும் வகையில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூகுள் தகவல்.

    கூகுள் நிறுவனத்தின் செயல்திறனை அதிகப்படுத்தும் நோக்கத்தில் டைரக்டர், துணைத் தலைவர் போன்ற நிர்வாக பணியாளர்கள் 10 சதவீதம் பேரை வேலையில் இருந்து கூகுள் நிர்வாகம் அதிரடியாக நீக்கியுள்ளது. அதன் செயல்திறனை இரட்டிப்பாக்கும் நீண்ட கால நோக்கத்தின் ஒருபகுதியாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை தலைமையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற உயர்மட்ட குழுவில் மானேஜர், டைரக்டர், துணைத் தலைவர் போன்ற பணியில் உள்ளவர்கள் நீக்கப்படலாம் என சூசகமாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் 10 சதவீதம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

    சில பணியாளர்களின் பதவி குறைக்கப்பட்டு, தனிநபர் பங்களிப்பு பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சிலர் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர் என கூகுள் செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

    கூகுள் நிறுவனம் இந்த வருடம் நான்காவது முறையாக ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் உலகளாவிய விளம்பரங்களுக்கான குழுவில் இருந்து சில நூறுபேரை நீக்கியிருந்தது. ஜூன் மாதம் மேலும் 100-க்கும் மேற்பட்டோரை நீக்கியிருந்தது.

    2025 ஜனவரி மாதத்திற்குள் (அதாவது அடுத்த மாதம்) கூகுள் நிறுவனம் 12 பேரை வேலையில் இருந்து நிறுத்தியிருக்கும். இது உலகளவில் கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் மொத்த பணியாளர்களில் 6.4 சதவீதம் ஆகும்.

    உலகளவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் முன்னேறி வருவதாலும், ஓபன்ஏஐ (OpenAI) போன்ற போட்டி நிறுவனங்கள் கூகுள் தேடுதலுக்கு (Google Search) மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தலாக இருக்கும் என வல்லுனர்கள் எச்சரித்துள்ளதாலும் கூகுள் செயல்திறனை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கூகுள் தேடுதல் கடந்த வருடம் 57 சதவீதம் அதிகமாக வருமானம் ஈட்டியிருந்தது. இந்த வருமானம் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    கூகுளின் பங்கு வால் ஸ்ட்ரீட்டில் ஏற்கனவே 3.5 சதவீதம் உயர்ந்த நிலையில், இந்த அறிவிப்புக்கு பிறகு 4 சதவீதத்திற்கு மேல் பங்குகள் மதிப்பு உயர்ந்துள்ளது.

    எந்தவொரு நிறுவனமும் இதை கடந்த செல்வது கடினம். 25 வருடத்தில் கூகுள் நிறுவனம் இதுபோன்ற நடவடிக்கையை எடுத்தது கிடையாது. நாங்கள் இந்த நடவடிக்கையை எடுக்கவில்லை என்றால், இது மிகவம் கவலைக்குரியதாகும் என்பது தெளிவானது எனத் தெரிவித்துள்ளார்.

    • உலகெங்கிலும் உள்ள மக்கள் இந்த வான நிகழ்வை வெவ்வேறு வழிகளில் கொண்டாடுகிறார்கள்.
    • ஆண்டின் மிக நீண்ட இரவையும், குறைந்த பகல் நேரத்தையும் கொண்டு வருகிறது.

    குளிர்கால சங்கிராந்தி எனப்படும் ஆண்டின் மிக குறுகிய நாளாக இன்றைய தினம் அமைந்துள்ளது.

    வடக்கு மற்றும் தெற்கு அரைக்கோளங்கள் சூரியனைச் சுற்றி வருவதால் நமது கிரகத்தின் சாய்வு காரணமாக ஆண்டு முழுவதும் வெவ்வேறு அளவு சூரிய ஒளியைப் பெறுகிறது. இது இரண்டு அரைக்கோளங்களின் பருவகால மாறுபாடுகளை வேறுபடுத்துகிறது.

    கோடைக்காலத்தை அனுபவிக்கும் தெற்கு அரைக்கோளத்திற்கு மாறாக, வடக்கு அரைக்கோளம் குளிர்காலம் முழுவதும் சிறிய பகல் நேரத்தை அனுபவிக்கிறது.

    குளிர்கால சங்கிராந்தியின் போது, வட துருவமானது சூரியனிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. இது ஆண்டின் மிக நீண்ட இரவையும், குறைந்த பகல் நேரத்தையும் கொண்டு வருகிறது.

    இந்நிலையில், குளிர்கால சங்கிராந்தி எனப்படும் ஆண்டின் மிக குறுகிய நாளாக (குறுகிய பகல், நீண்ட இரவு) இன்றைய தினம் அமைந்துள்ளது.

    பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் உள்ளவர்களுக்கு இன்று சற்று தாமதமாக உதித்த சூரியன், சீக்கிரமாகவே மறைந்து விடும்.

    பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்படும் இந்த சங்கிராந்தி உலகம் முழுவதும் உள்ள பல பாரம்பரியங்களில் கலாச்சார, ஆன்மீக மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.

    உலகெங்கிலும் உள்ள மக்கள் இந்த வான நிகழ்வை வெவ்வேறு வழிகளில் கொண்டாடுகிறார்கள்.

    இந்திய நேரப்படி, குளிர்கால சங்கிராந்தி நேரம் பிற்பகல் 02.49 மணிக்கும், குளர்கால சங்கிராந்த சூரிய உதயம் காலை 7.10 மணிக்கும், குளிர்கால சூரிய அஸ்தமனம் மாலை 5.29 மணிக்கு எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

    • தினாஜ்பூரில் உள்ள பிர்கஞ்ச் பகுதியில் காளி கோவிலில் 5 சிலைகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன.
    • இந்துக்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருகிறது.

    வங்காளதேசத்தில் சமீபகாலமாக சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து உள்ளன. கோவில்களும் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வங்காளதேசத்தில் மேலும் 3 கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

    தினாஜ்பூரில் உள்ள பிர்கஞ்ச் பகுதியில் காளி கோவிலில் 5 சிலைகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் பீல்தோரா, ஷாகுவாய் ஆகிய பகுதிகளில் உள்ள இந்து கோவில்களில் சாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டன.


    இது தொடர்பாக, பொலஷ்கந்தா கிராமத்தை சேர்ந்த அலல் உதின் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். வங்காளதேசத்தில், மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்து ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

    அதன்பின் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்தது. இந்த தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக இடைக்கால அரசு தெரிவித்தது. ஆனாலும் இந்துக்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருகிறது.

    • சீனாவில் யோகா மற்றும் நடனப் பள்ளி நடத்தி வருகிறார்.
    • பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்கள் கின்னஸ் உலக சாதனைகளை அர்ப்பணிக்க விரும்புகிறோம்.

    ஆந்திர மாநிலம் அனகாபல்லியைச் சேர்ந்தவர் கொனத்தலா விஜய், 2012-ம் ஆண்டு முதல் சீனாவில் வசித்து வருகிறார். இவர் யோகா ஆசிரியராகவும் நடன அமைப்பாளராகவும் உள்ளார்.

    சீனாவில் யோகா மற்றும் நடனப் பள்ளி நடத்தி வருகிறார். 2021-ம் ஆண்டில், யோகா பிரிவின் கீழ் கின்னஸ் உலக சாதனைகளில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றார்.

    அஷ்டவக்ராசனம், மயூராசனம் மற்றும் பகாசனம் போன்ற மேம்பட்ட ஆசனங்களை உள்ளடக்கிய மிக நீண்ட யோகா அமர்வுக்கான சாதனையை அவர் பெற்றுள்ளார்.

    தி ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் நோபல் உலக சாதனைகளிலும் சாதனை படைத்துள்ளார்.

    அவரது மனைவி, கொனத்தலா ஜோதி, கர்ப்பத்தின்போது 9-வது மாதத்தில் (குழந்தை பிறப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பு) மேம்பட்ட யோகாசனங்களைச் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

    விஜய் மற்றும் ஜோதி தம்பதியரின் 14 வயது மகள் கொனத்தலா ஜஸ்மிதா, ஒரு நிமிடத்தில் ஒரே காலில் கயிற்றை வேகமாக இழுத்து சாதனை படைத்துள்ளார்.

    இவர்களது 5 வயது மகனான கொனதலா ஷங்கரும் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஒரு நிமிடத்தில் டிராம்போலைனில் அதிக எண்ணிக்கையிலான கயிறு ஸ்கிப் செய்ததற்காக கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்தார். இந்த குடும்பத்துக்கு நடிகர் சிரஞ்சீவி வாழ்த்து தெரிவித்தார்.

    பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்கள் கின்னஸ் உலக சாதனைகளை அர்ப்பணிக்க விரும்புகிறோம்.

    "இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை மேம்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளுக்காக நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்.

    எங்கள் பயணம் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள பிரதமரை சந்திக்க விரும்புகிறோம். இது எங்கள் குடும்பத்திற்கு ஒரு கனவு என்றனர்.

    • இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்கள் தொடர்ந்து நிற்கும்போது நடனமாடிக் கொண்டே இருப்பது போல் உடல் நடுங்குகிறது.
    • இதுவரை இந்த நோயினால் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை.

    கம்பாலா:

    கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் டிங்கா டிங்கா என்று பெயரிடப்பட்ட புதுவகை வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறுமிகளை அதிகளவில் தாக்குகிறது.

    அங்குள்ள புண்டிபுக்யோ மாவட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் டிங்கா டிங்கா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த டிங்கா டிங்கா வைரசின் அறிகுறிகளாக அதிகப்படியான உடல் நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஆகியவை உள்ளன.

    இது உடல் இயக்கத்தையும் கடுமையாக பாதிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்கள் தொடர்ந்து நிற்கும்போது நடனமாடிக் கொண்டே இருப்பது போல் உடல் நடுங்குகிறது.

    நோயாளிகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு உடல் பலவீனம் அடையும். சிலர் பக்கவாத உணர்வை கொண்டுள்ளனர். அவர்களால் சிறிது தூரம் நடக்க முடிவதில்லை. இதுவரை இந்த நோயினால் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதற்காக எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த வைரசால் பாதிக்கப்பட்டோர் ஒருவார காலத்துக்குள் குணமடைந்து விடுவதாகவும் புண்டி புக்யோ மாவட்டத்தை தவிர வேறு எங்கும் நோய் பரவவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. டிங்கா டிங்கா வைரஸ் பாதிப்பு எப்படி ஏற்படுகிறது என்பது குறித்து அறிவியல் விஞ்ஞானிகளும், மருத்துவ நிபுணர்களும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    • அல்பேனியா, அர்ஜென்டினா, பாலஸ்தீனம், வடக்கு மாசிடோனியா, மாண்டினீக்ரோ மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ளன.
    • வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமான செயின்ட் நிக்கோலஸ் கதீட்ரலும் தாக்கப்பட்டது

    உக்ரைன் தலைநகர் கீவ் -இல் ரஷியா நேற்று [டிசம்பர் 20] பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 6 தூதரகங்கள் மற்றும் ஒரு பழமையான தேவாலயம் [கதீட்ரல்] சேதமடைந்துள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 12 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

    தாக்குதலை உறுதிப்படுத்திய உக்ரைன் விமானப்படை, உக்ரைனின் வான் பாதுகாப்புப் படைகள் ரஷிய படைகளால் ஏவப்பட்ட 5 இஸ்கந்தர்-எம்/கேஎன்-23 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் இடைமறித்து அழித்ததாகவும், உயிரிழப்புகளைத் தடுத்ததாகவும் தெரிவித்துள்ளது.

     

    நகரின் மையப்பகுதி முழுவதும் பலத்த வெடிச் சத்தங்கள் கேட்டன.  கட்டிடங்களில் தீ பற்றி எரிந்ததில் மேற்கூரை மற்றும் ஜன்னல்கள் சேதமடைந்தன. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகி உள்ளன.

    தீப்பற்றிய கட்டடத்தில் அல்பேனியா, அர்ஜென்டினா, பாலஸ்தீனம், வடக்கு மாசிடோனியா, மாண்டினீக்ரோ மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ளன. இருப்பினும் தூதரக ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று உக்ரைன் தெளிவுபடுத்தி உள்ளது.

     

    மேலும் இந்த தாக்குதலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமான செயின்ட் நிக்கோலஸ் கதீட்ரலும் சேதமடைந்ததாக உக்ரைனின் கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் மைகோலா டோசிட்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    எனினும் ஏவுகணை வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் ஈடுபட்ட உக்ரைனின் SBU பாதுகாப்புப் படையின் கட்டளை மையத்தை மூலம் வெற்றிகரமாகக் குறிவைத்து தாக்கியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

     

    ×