என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mini India"

    • டிரைவருக்கான ஆக்டிவ் சீட், சரவுண்ட் லைட்கள் மற்றும் பனோரமிக் கிளாஸ் ரூஃப் ஆகியவற்றுடன் எலெக்ட்ரிக் முறையில் இருக்கை சரிசெய்யும் வசதியை பெறுகிறது.
    • இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 5.6 நொடிகளில் எட்டிவிடும்.

    மினி இந்தியா நிறுவனம் புதிய கண்ட்ரிமேன் SE All4 காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய கண்ட்ரிமேன் விலை ரூ.66.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. CBU வழியில் இந்தியா கொண்டு வரப்பட்ட இந்த மாடல் தற்போது அனைத்து அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்களிலும் முன்பதிவு செய்யலாம். இந்த காரின் டெலிவரி ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.

    வெளிப்புறத்தில், 2025 கன்ட்ரிமேன் SE All4 புதிய கிரில், ஹெட்லைட்களுக்கான புதிய வடிவமைப்பு, செதுக்கப்பட்ட பானட், ஜெட் பிளாக் ரூஃப், ஃப்ளஷ் கதவு கைப்பிடிகள் மற்றும் பலவற்றைக் கொண்டுள்ளது. JCW டிரிமில் மட்டுமே வழங்கப்படும் இது, ஸ்போர்ட்ஸ் ஸ்ட்ரைப்ஸ், ரூஃப் ரெயில்கள், 19-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் வீல் ஆர்ச்கள் போன்ற கருப்பு நிற கூறுகளைக் கொண்டுள்ளது.

    லெஜண்ட் கிரே மற்றும் மிட்நைட் பிளாக் ஆகிய இரண்டு நிற ஆப்ஷன்களும் ஜெட் பிளாக்கில் முடிக்கப்பட்ட ரூஃப் மற்றும் மிரர் கேப்களால் பூர்த்தி செய்யப்படுகின்றன. மேலும், இந்த கார் LED DRLகள், ஹெட்லேம்ப்கள் மற்றும் டெயில் லைட்களுக்கு பிரத்யேக சிக்னேச்சர் மோட்களைப் பெறுகிறது.



    புதிய மினி கன்ட்ரிமேன் SE All4 இன் உட்புறம் ஸ்டீயரிங் வீல், ஸ்போர்ட்ஸ் இருக்கைகள் மற்றும் டேஷ்போர்டு டிரிம்கள் போன்ற JCW-க்கு ஏற்ற அம்சங்களுடன் வருகிறது. இது டிரைவருக்கான ஆக்டிவ் சீட், சரவுண்ட் லைட்கள் மற்றும் பனோரமிக் கிளாஸ் ரூஃப் ஆகியவற்றுடன் எலெக்ட்ரிக் முறையில் இருக்கை சரிசெய்யும் வசதியை பெறுகிறது. இந்த மாடலில் சிக்னேச்சர் ரவுண்ட் OLED டிஸ்ப்ளே, மினி டிஜிட்டல் கீ, HUD, போன் மிரரிங், குரூயிஸ் கண்ட்ரோல், 360-டிகிரி கேமரா, ஆக்டிவ் கூலிங் ஏர் டக்ட்ஸ், மல்டிபிள் ஏர்பேக்குகள், TPMS மற்றும் ஹர்மன் கார்டன் மியூசிக் சிஸ்டம் ஆகியவையும் உள்ளன.

    கன்ட்ரிமேன் SE All4 மாடலில் 66.45kWh பேட்டரி பேக் உள்ளது, இது இரட்டை மின்சார மோட்டார்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 440 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என்று கூறப்படுகிறது. மேலும், இதில் உள்ள மின் மோட்டார்கள் 313bhp பவர் மற்றும் 494Nm டார்க் உற்பத்தி செய்யும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 5.6 நொடிகளில் எட்டிவிடும்.

    • பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக குவைத் சென்றுள்ளார்.
    • இந்திய வம்சாவளியினர் ஒன்று சேர்ந்து பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    குவைத்:

    பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக குவைத் சென்றுள்ளார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினர் ஒன்று சேர்ந்து பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    இந்நிலையில், குவைத்தின் ஷேக் சாத் அல் அப்துல்லா விளையாட்டு உள்ளரங்கில், ஹாலா மோடி என்ற தலைப்பில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியாவில் இருந்து குவைத் வருவதற்கு 4 மணி நேரங்களே ஆகும். ஆனால், இந்திய பிரதமர் ஒருவர் இங்கு வருவதற்கு 4 தசாப்தம் ஆகி உள்ளது.

    இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ளீர்கள். இங்கு அனைவரையும் ஒரே இடத்தில் பார்ப்பது என்பது மினி இந்தியா கூடியுள்ளது போல் தெரிகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் இங்கு வருகின்றனர். இந்திய வம்சாவளி டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள், குவைத் மருத்துவ உள்கட்டமைப்பின் பெரிய பலமாக உள்ளனர். இந்நாட்டின் எதிர்கால தலைமுறையை கட்டமைப்பதில் இந்திய ஆசிரியர்கள் உதவுகின்றனர்.

    குவைத் தலைவர்களிடம் பேசுகையில், அவர்கள் இந்திய சமூகத்தினரைப் புகழ்கின்றனர். உங்களின் கடின உழைப்பு, நேர்மை மற்றும் திறன் ஆகியவற்றை பார்த்து குவைத் குடிமக்கள் உங்கள்மீது பெரிய மரியாதை வைத்துள்ளனர்.

    வர்த்தகம் மற்றும் புதுமைகள் மூலம் ஊக்கத்தைத் தூண்டும் பொருளாதாரத்தை விரும்புகிறது. இந்தியாவும் புதுமையிலும், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது. புதிய குவைத்திற்கு தேவையான திறன், தொழில்நுட்பம், புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் மனித வளம் இந்தியாவிடம் உள்ளது என தெரிவித்தார்.

    மினி இந்தியா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகமாகும் முன்பே விற்றுத்தீர்ந்தது.


    மினி இந்தியா நிறுவனத்தின் மினி கூப்பர் எஸ்.இ. எலெக்ட்ரிக் கார் விற்றுத்தீர்ந்தது. மொத்தம் 30 யூனிட்கள் விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், முன்பதிவு துவங்கிய 2 மணி நேரத்தில் அனைத்து யூனிட்களும் விற்றுத்தீர்ந்ததாக மினி இந்தியா அறிவித்தது.

    இதுபற்றிய அறிவிப்பு மினி இந்தியா அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி உள்ளது. புதிய மினி கூப்பர் எஸ்.இ. மாடலுக்கான முன்பதிவு அக்டோபர் 29 ஆம் தேதி துவங்கியது. இந்திய சந்தையில் மினி எலெக்ட்ரிக் மாடல் முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

     மினி கூப்பர் எஸ்.இ.

    மினி கூப்பர் எஸ்.இ. விலை விவரங்கள் மற்றும் வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், புதிய கூப்பர் எஸ்.இ. மாடல் முழு சார்ஜ் செய்தால் 270 கிலோமீட்டர் வரை செல்லும் என கூறப்படுகிறது. இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 184 ஹெச்.பி. திறன் மற்றும் 270 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
    ×