என் மலர்

  உலகம்

  இம்ரான்கான்
  X
  இம்ரான்கான்

  பாகிஸ்தானில் உடனடியாக தேர்தல் நடத்தவேண்டும் - இம்ரான்கான் வலியுறுத்தல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண வரவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு புதிய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்துள்ளார்.
  இஸ்லாமாபாத்:

  பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது. மேலும், பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கப்பட்டார்.

  இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவரான ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷபாஸ் ஷெரீப் நேற்று பதவியேற்றுக் கொண்டார். 

  அப்போது பேசிய ஷபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் இந்தியாவுடன் நல்லுறவை விரும்புகிறது என குறிப்பிட்டார்.
   
  இந்நிலையில், பாகிஸ்தானில் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். 

  இதுதொடர்பாக இம்ரான்கான் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பாகிஸ்தானில் உடனடியாக தேர்தல் நடத்தவேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம். பிரதமராக யார் வரவேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்யட்டும் என பதிவிட்டுள்ளார். 

  Next Story
  ×