search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சிரியா நடத்திய வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 34 பேர் பலி

    ரஷிய படைகளுடன் இணைந்து சிரிய உள்நாட்டு படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 34 பேர் கொல்லப்பட்டனர்.
    டமாஸ்கஸ்: 

    சிரியாவில் 2011-ம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப்போர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அந்நாட்டின் வடக்கு பகுதிகளை தற்போது சிரிய அரசுகள் தங்கள் வசம் கைப்பற்றிவருகின்றனர். 

    மேலும், வடக்கு பகுதியில் உள்ள இட்லிப் மாகாணத்தில் அரசுக்கு எதிராக செயல்பட்டுவரும் போராளிகள் குழுக்கள் மீதும் ரஷியா உதவியுடன் சிரியா ராணுவம்  தாக்குதல் நடத்திவருகிறது.

    இட்லிப் மாகாணத்தின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள போராளிகள் குழுக்களுக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகிறது. மேலும், சிரியாவின் எல்லைக்குள் துருக்கி தங்கள் படைகளையும் குவித்து வைத்துள்ளது. 

    உள்நாட்டில் தொடங்கிய இப்போர் தற்போது இட்லிப் மாகாணத்தை கைப்பற்றும் நோக்கில் உள்ள துருக்கி-சிரியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியின் இந்த நடவடிக்கையால் ரஷியா மிகுந்த ஆத்திரம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிவருகிறது.

    இதற்கிடையில், இட்லிப் மாகாணத்தில் உள்ள போராளிகள் குழுக்களுக்கு போர் விமானங்களை வீழ்த்தக்கூடிய ஏவுகணைகளை துருக்கி வழங்குவதாகவும், அந்த ஏவுகணைகள் போராளிகளால் தங்கள் போர் விமானங்களை குறிவைத்து ஏவப்படுவதாகவும் ரஷியா குற்றச்சாட்டியது. இதனால் ரஷியா-துருக்கி இடையே மோதல் நிலவிவருகிறது.

    இந்நிலையில், போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப் மாகாணத்தின் பாரா மற்றும் பிலியன் நகரங்களில் சிரியா மற்றும் ரஷிய கூட்டுப்படைகள் இன்று அதிரடியாக வான்வெளி தாக்குதல்கள் நடத்தியது. இந்த தாக்குதல்களில் துருக்கி ராணுவ வீரர்கள் 34 பேர் கொல்லப்பட்டனர்.
    Next Story
    ×