என் மலர்

  செய்திகள்

  நாயை திருமணம் செய்த மாடல் அழகி
  X
  நாயை திருமணம் செய்த மாடல் அழகி

  220 காதல் தோல்விகளால் விரக்தி- நாயை திருமணம் செய்த மாடல் அழகி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  220 ஆண்களை காதலித்தும் எந்த காதலும் வெற்றி அடையாத விரக்தியில் மாடல் அழகி ஒருவர் நாயை திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  லண்டன்:

  இங்கிலாந்து நாட்டின் கிழக்கு எஸ்கார்ட் பகுதியை சேர்ந்தவர் எலிசபெத் ஹோட். பிரபல மாடல் அழகியான எலிசபெத்துக்கு தற்போது வயது 49 .

  மாடலிங் துறையில் பிரபலமான இவர் கடந்த வாரம், தான் வளர்க்கும் நாயுடன் திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்தார். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அறிவித்தது போலவே இன்று தனது நாயை திருமணம் செய்து கொண்டார்.

  4 முறை நிச்சயதார்த்தம் வரை சென்ற அவரது திருமண வாழ்வு கல்யாணத்தில் சென்று முடிவடையவில்லை. இதுவரை 220 ஆண்களை காதலித்தும் எந்த காதலும் வெற்றி அடையவில்லை.

  எனவே ஆண்கள் மீது விரக்தியான அவர் திருமணம் செய்துகொள்வதில் ஈடுபாடு இல்லாமல் இருந்து வந்தார். கடந்த வாரம் எலிசபெத் இந்த அறிவிப்பை வெளியிட்டதும் பிரபலமான தனியார் தொலைக்காட்சியில் அவர் திருமணம் செய்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.

  திருமணம் செய்து கொண்ட மாடல் அழகியுடன் நாய்

  திருமண நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு என்றும் அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை பார்க்க தொலைக்காட்சி முன் ஏராளமானோர் குவிந்தனர்.

  எலிசபெத் தன்னுடைய ‘லோகன்’ என்ற நாயை அறிமுகப்படுத்தி, மோதிரம் மற்றும் பிரேஸ்லெட் மாற்றி திருணம் செய்துகொண்டார். ‘நான்கு முறை நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் நின்றுபோனநிலையில், நாயை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். அந்த திருமணம்தான் இது’ என்று நிகழ்ச்சி தொகுப்பாளர்களிடம் எலிசபெத் தெரிவித்தார்.

  ‘நான் லோகனை காணும் முன்வரை உடைந்திருந்தேன். என்னை லோகன் காப்பாற்றியது, நான் அதை காப்பாற்றினேன்’ என்றும் கூறினார்.

  ஒருவருடத்துக்கு முன்புதான் அந்த நாயை எலிசபெத் வாங்கியுள்ளார். ‘என்னுடைய தோழிகள் பலரும், ஆண்களை காட்டிலும் நாயை திருமணம் செய்துக்கொள்ளலாம் என விரும்பி இருக்கிறார்கள்’ என்று விநோதமான இந்த நடைமுறைக்கு விளக்கம் கொடுத்துள்ளார் எலிசபெத்.

  தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. ‘அந்த பெண்ணுக்கு மருத்துவ உதவி தேவை’ என்றெல்லாம் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மற்றொரு தரப்பினர், “சரியான முடிவு. அவர், தனது வாழ்க்கைக்கான முடிவை எடுத்திருக்கிறார்” என்று வரவேற்றும் பேசிவருகின்றனர்.
  Next Story
  ×