search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சவுதி பெண்கள்
    X
    சவுதி பெண்கள்

    சவுதி பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்ல இனி ஆண்களின் அனுமதி தேவையில்லை

    சவுதி நாட்டில் பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செல்ல வேண்டுமென்றால், இனி ஆண்களின் அனுமதி தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
    ரியாத்:

    சவுதி நாட்டில் வாழும் பெண்களுக்கென பல்வேறு விதிகள் நடைமுறையில் உள்ளன. அந்நாட்டு அரசு சவுதியினை நவீன மயமாக்கும் வகையில் சில முக்கிய விதிகளை சமீப காலமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக பெண்களுக்கென முக்கிய விதிகளை மாற்றியது. பெண்களுக்கு வாகனங்கள் ஓட்ட அனுமதி, 40 ஆண்டுகளுக்குப் பின்னர் திரை அரங்குகள் திறப்பு மற்றும் பெண்கள் செய்தியாளர்களாக நியமனம் என அனைவரும் வரவேற்கும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது.

    சவுதி ஏர்லைன்ஸ்

    இந்த விதிகளை நடைமுறைப்படுத்திய சவுதி அரசுக்கு,  அந்நாட்டு மக்கள் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து சவுதி பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டும் என்றால், அவர்களது தந்தை , கணவர் அல்லது குடும்பத்தினரின் அனுமதி பெற்றுதான் செல்ல வேண்டும் என்ற விதியை நீக்கியுள்ளது.

    புதிய விதியின்படி, 21 வயதை கடந்த பெண்கள் அனைவரும் ஆண்களின் ஒப்புதல் இல்லாமல் பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ளலாம் என்றும், வெளிநாடுகளுக்கு பயணம் செல்லலாம் என்றும் அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.








    Next Story
    ×