search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யீயீ பாண்டா
    X
    யீயீ பாண்டா

    மலேசியா-சீனா உறவில் பாலமாக விளங்கும் 'யீயீ' பாண்டா

    மலேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையே பாலமாக 'யீயீ' எனும் பாண்டா தற்போது செயல்படுகிறது.
    கோலாலம்பூர்:

    மலேசியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கிடையே நட்பினை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றாக இருப்பது, பாண்டாக்களை இரு நாடுகளுக்கும் இடையே பரிமாறிக் கொள்வது.

    இந்த ஒப்பந்தத்தின்படி, சீனாவில் இருந்து மலேசியாவிற்கு பரிமாறப்படும் பாண்டாக்கள் இனப்பெருக்கம் செய்து, அந்த பாண்டாக்களுக்கு 2 வயதானதும் மீண்டும் சீனாவிற்கு அனுப்புவதே முக்கிய நோக்கமாகும்.

    சீனா-மலேசியா

    இதன்படி மலேசியாவில் பிறந்த பாண்டா ஒன்றுக்கு பெயர் சூட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழா கோலாலம்பூரில் நடைப்பெற்றது. இதில் கலந்துக் கொண்ட அந்நாட்டு அமைச்சர் சேவியர் ஜெயக்குமார் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறுகையில், 'சீன மொழியில் 'யீயீ' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 'யீயீ' என்றால், நட்பு என்பது பொருள். இதனை பறைசாற்றும் விதமாகவே இப்பெயர் சூட்டப்படுகிறது' என கூறினார்.




    Next Story
    ×