search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கருடன் அமெரிக்க மந்திரி பேச்சு
    X

    ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கருடன் அமெரிக்க மந்திரி பேச்சு

    ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ், இந்திய ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கருடன் தொலைபேசியில் பேசினார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் புதிய ராணுவ மந்திரியாக பதவி ஏற்றுள்ள ஜேம்ஸ் மேட்டிஸ், இந்திய ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கருடன் நேற்று முதன்முதலாக தொலைபேசியில் பேசினார். இதுதொடர்பாக அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகனின் ஊடக செயலாளர் கேப்டன் ஜெப் டேவிஸ் குறிப்பிடுகையில், “ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ், இந்திய ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கருடன் தொலைபேசியில் பேசினார்.

    இந்த முதல் பேச்சின்போது, சமீப ஆண்டுகளில் இரு தரப்பு ராணுவ உறவில் ஏற்பட்டுள்ள அபாரமான முன்னேற்றத்தினை தொடர்ந்து கட்டமைக்க ஜேம்ஸ் மேட்டிஸ் உறுதி தெரிவித்தார். அமெரிக்க, இந்திய உறவின் முக்கியத்துவம் மற்றும் உலக சமாதானத்தையும், பாதுகாப்பையும் முன்னெடுத்து செல்வதில் இந்தியாவின் பங்களிப்பு முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார்” என குறிப்பிட்டார்.

    மேலும், “ ஜேம்ஸ் மேட்டிசும், மனோகர் பாரிக்கரும் இரு தரப்பு ராணுவ உறவினை நிலைக்கச்செய்யவும், அதில் ராணுவ தொழில் நுட்பம், வர்த்தக நடவடிக்கைகளை சேர்த்துக்கொள்ளவும் சம்மதம் தெரிவித்தனர்” என்றும் கூறினார். 
    Next Story
    ×