search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நைஜீரியாவில் 130 பெண்களை திருமணம் செய்த மதபோதகர் மரணம்
    X

    நைஜீரியாவில் 130 பெண்களை திருமணம் செய்த மதபோதகர் மரணம்

    நைஜீரியாவில் 130 பெண்களை திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கிய முன்னாள் மதபோதகர் மரணம் அடைந்தார்.
    கனோ:

    நைஜீரியாவை சேர்ந்தவர் முகமது பெல்லோ. முன்னாள் மத போதகரான இவர் தனது 93 வது வயதில் மரணம் அடைந்தார். இவர் 130 பெண்களை திருமணம் செய்து அவர்களுடன் குடும்பம் நடத்தியவர். அவர்கள் மூலம் 203 குழந்தைகள் பெற்றுள்ளார்.

    இஸ்லாமிய சட்டத்தை மீறி அவர் பல பெண்களை திருமணம் செய்தால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 2008ம் ஆண்டு அவர் 86 பெண்களை மணந்திருந்த சமயத்தில், 82 மனைவிகளை உடனடியாக விவாகரத்து செய்யும்படி பிற மதபோதர்கள் வலியுறுத்தினர். ஷரியா சட்டத்தில் 4 மனைவிகள் வரை மட்டுமே மணந்துகொள்ள அனுமதி இருப்பதால், பிற மனைவிகளை விவாகரத்து செய்ய ஷரியா கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், அவர்களை விவாகரத்து செய்ய முகமது பெல்லோ மறுத்து விட்டார். தொடர்ந்து திருமணம் செய்தவண்ணம் இருந்தார்.

    இவ்வாறாக 130 பெண்களை மணந்து 203 பிள்ளைகளைப் பெற்றெடுத்த முகமது பெல்லோ, கடந்த சனிக்கிழமை மரணம் அடைந்தார். பிடா நகரில் அவரது இறுதிச்சடங்கு நடந்ததாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
    Next Story
    ×