search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காளதேச சிறுமிக்கு அபூர்வ தோல் நோய்
    X

    வங்காளதேச சிறுமிக்கு அபூர்வ தோல் நோய்

    வங்காளதேச சிறுமிக்கு முகத்தில் மரம் போன்று தசைகள் வளரும் அபூர்வ தோல் நோய் பாதிப்பு உள்ளது.
    டாக்கா:

    வங்காளதேசத்தை சேர்ந்த 10 வயது சிறுமி சஹானா காதுன். இவள் ஒருவித அபூர்வ தோல் நோயினால் அவதிப்படுகிறாள். இவளது முகம், காது, நாடி, மூக்கு உள்ளிட்ட இடங்களில் மரம் போன்று சிறிய அளவில் சதை வளர்ந்துள்ளது. இவள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள்.

    இவளது தந்தை முகமது ஷாஜகான் கூலி வேலை பார்க்கிறார். இந்த நோய்க்கு டாக்காவில் உள்ள மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சஹானா சிகிச்சை பெற்று வருகிறாள்.

    அவளுக்கு டாக்டர்கள் தீவிர பரிசோதனை செய்து வருகின்றனர். இது ஒரு அபூர்வ நோய் என்றும், உலக அளவில் 6 பேர் இத்தகைய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து சிறுமி சஹானாவின் தந்தை முகமது ஷாஜகான் கூறும்போது, “நாங்கள் மிகவும் ஏழைகள். எனது மகள் 6 வயதில் தனது தாயை இழந்தாள். உடலில் வளரும் மரம் போன்ற தசையை அகற்றி எனது மகளின் அழகிய முகத்தை டாக்டர்கள் மீண்டும் திருப்பி தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
    Next Story
    ×