search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெதர்லாந்து நாட்டில் ஊழல் வழக்கில் மந்திரி ராஜினாமா
    X

    நெதர்லாந்து நாட்டில் ஊழல் வழக்கில் மந்திரி ராஜினாமா

    நெதர்லாந்தில் நீதித்துறை மந்திரி பதவி வகித்த ஆர்த் வேன் டர் ஸ்டெயூர் ஊழல் வழக்கு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.
    ஆம்ஸ்டர்டாம்:

    ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் நீதித்துறை மந்திரி பதவி வகித்தவர் ஆர்த் வேன் டர் ஸ்டெயூர்.

    இவர் 2001-ம் ஆண்டு, தண்டிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரருக்கு இழப்பீடு வழங்கியதில் ஊழல் புரிந்துள்ளார். இந்த ஊழல், ஆர்த்துக்கு எதிராக திரும்பியது. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் புயல் வீசியது.

    இதன் காரணமாக நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். இது பிரதமர் மார்க் ரூட்டின் அரசுக்கு பலத்த அடியாக அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    வருகிற மார்ச் மாதம் பொதுத்தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில், ஆர்த் சார்ந்துள்ள வலதுசாரி தாராளவாத கட்சி ஏற்கனவே கருத்துக்கணிப்புகளில் பின் தங்கி உள்ளது. இந்த நிலையில், ஊழல் குற்றச்சாட்டில் ஏற்கனவே நீதித்துறை மந்திரி பதவி வகித்து வந்த இவோ ஆப்ஸ்டெல்டன், அவரது துணை மந்திரி பிரெட் டீவன் ஆகிய 2 பேர் ராஜினாமா செய்த நிலையில், இப்போது ஆர்த்தும் பதவி விலகி இருப்பது அந்தக் கட்சியை ஆட்டம் காண வைத்துள்ளது. 
    Next Story
    ×