search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தானில் பெண்ணின் தலையை துண்டித்து கொன்ற தலிபான் தீவிரவாதிகள்
    X

    ஆப்கானிஸ்தானில் பெண்ணின் தலையை துண்டித்து கொன்ற தலிபான் தீவிரவாதிகள்

    நகரத்துக்கு தனியாக வந்ததால் ஆப்கானிஸ்தானில் பெண்ணின் தலையை துண்டித்து தலிபான் தீவிரவாதிகள் கொன்றனர்.
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் கடந்த 2001-ம் ஆண்டு வரை தலிபான் தீவிரவாதிகள் ஆட்சி நடந்தது. அப்போது அங்கு பெண்களுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. பெண்கள் கல்வி கற்க தடைவிதிக்கப்பட்டிருந்தது.

    ஆண் துணையின்றி பெண்கள் வெளியே செல்லக்கூடாது. ஆடம்பரமாக உடை அணிய அனுமதி மறுக்கப்பட்டது. சினிமா, நடனம், விளையாட்டு உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு தடை போடப்பட்டிருந்தது.

    அதை தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான ‘நேட்டோ’ படைகள் தலையீட்டால் அங்கு தலிபான் தீவிரவாதிகள் ஆட்சி அகற்றப்பட்டு மக்கள் பிரதிநிதிகளின் ஜனநாயக ஆட்சி ஏற்பட்டது. அதையடுத்து மக்கள் தற்போது அங்கு சுதந்திர காற்றை சுவாசித்து வருகின்றனர்.

    தற்போது நேட்டோ படைகள் வாபஸ் பெறப்பட்டதால் மீண்டும் தலிபான்கள் ஆதிக்கம் வளர தொடங்கியுள்ளது. மேலும் சில பகுதிகள் அவர்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அங்கு கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

    இந்த நிலையில் சர்-இ- புல் மாகாணத்தில் 30 வயது பெண்ணின் தலையை துண்டித்து தலிபான் தீவிரவாதிகள் தண்டனை நிறைவேற்றியுள்ளனர். அப்பெண் அங்குள்ள ஒரு நகரத்துக்கு ஆண் துணையின்றி தனியாக பயணம் செய்தாள்.

    அதை ஒரு குற்றமாக கருதி அப்பெண்ணுக்கு இக்கொடூர தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இத்தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது.

    இத்தகவலை சர்-இ-புல் மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் ‌ஷபியுல்லா அமானி தெரிவித்தார். ஆனால் இதை தலிபான் தீவிரவாதிகள் மறுத்துள்ளனர். இச்சம்பவத்தில் தங்களுக்கு தொடர்பு எதுவும் இல்லை என கூறியுள்ளனர்.
    Next Story
    ×