search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் நாளில் 54 ஆயிரம் பொதுமக்கள் வெளியேற்றம்
    X

    ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் நாளில் 54 ஆயிரம் பொதுமக்கள் வெளியேற்றம்

    தெற்கு ஜெர்மனியில் 2-ம் உலகப் போரின்போது வீசப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால், அது இன்று அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் 54 ஆயிரம் பேர் வெளியேறினார்கள்.
    தெற்கு ஜெர்மனியில் உள்ள ஆக்ஸ்பர்க் நகரில் ஒரு கட்டுமான வேலை நடைபெற்று கொண்டிருந்தது. கடந்த செவ்வாய்கிழமை அன்று வேலை நடைபெற்றிருந்த இடத்தில் 1.8 டன் எடைகொண்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

    2-ம் உலகப்போரின் போது ஜெர்மனி மீது இங்கிலாந்து வீசிய குண்டு என்று கண்டறியப்பட்டுள்ள இது, கடந்த செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை அதை அப்புறப்படுத்தும் வேலையில் போலீசார் ஈடுபட நினைத்தனர்.

    இதனால் அங்குள்ள மக்களை வெளியேற முடிவு செய்தனர். கிறிஸ்துமஸ் அன்று வெளியேறச் சொன்னதால் மக்கள் கவலையுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட முடியாமல் வெளியேறினார்கள்.

    இதுகுறித்து ஆக்ஸ்பர்க் மேயர் கர்ட் க்ரிபி கூறுகையில் ‘‘ஒவ்வொருவரும் இந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கவலையுடன் கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார்.
    Next Story
    ×