search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இத்தாலியில் வாக்கெடுப்பு பிரதமர் மேத்யூ ரென்சியின் அரசியல் எதிர்காலம் இன்று தெரியும்
    X

    இத்தாலியில் வாக்கெடுப்பு பிரதமர் மேத்யூ ரென்சியின் அரசியல் எதிர்காலம் இன்று தெரியும்

    அரசியல் சீர்திருத்தங்கள் செய்ய இத்தாலியில் வாக்கெடுப்பு பணி தொடங்கி விட்டது. இதில் பிரதமர் மேத்யூ ரென்சியின் அரசியல் எதிர்காலம் என்ன ஆகும் என தெரிய வரும்.
    ரோம்:

    இத்தாலி நாட்டில் பிரதமர் மேத்யூ ரென்சி, பாராளுமன்ற செனட் சபையில் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 315–ல் இருந்து 100 ஆக குறைக்கவும், செனட் சபையின் அதிகாரத்தை குறைக்கவும், மத்திய அரசின் அதிகாரத்தை அதிகரிக்கவும் விரும்புகிறார். இது தொடர்பாக மக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அந்த வாக்கெடுப்பு நேற்று காலை உள்ளூர் நேரப்படி 7 மணிக்கு தொடங்கி இரவு 11 மணிக்கு முடிந்தது. இந்த வாக்கெடுப்பு விறுவிறுப்பாக நடந்தது.

    இந்த கருத்து வாக்கெடுப்பு வெற்றி பெற்று அரசியல் சீர்திருத்தங்கள் செய்கிறபோது, அது சிக்கலான சட்டம் இயற்றும் செயல்முறையை துரிதப்படுத்தும், ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி முதன்மை இடத்தை பிடிக்கும், குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்று பிரதமர் மேத்யூ ரென்சி கூறுகிறார். ஆனால் எதிர்ப்பாளர்கள், கருத்தறியும் வாக்கெடுப்பு வெற்றி பெற்றால், அது பிரதமர் கையில் அதிகாரம் குவிவதற்கு வழிவகுத்து விடும் என்கின்றனர்.

    இந்த வாக்கெடுப்பு குறித்த கருத்துக்கணிப்பும் நடைபெற்றுள்ளது. கருத்துக்கணிப்பில் பிரதமருக்கு தோல்விதான் கிடைக்கும் என தெரிய வந்துள்ளது.

    கருத்து வாக்கெடுப்பு ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கி விட்டது. இன்று முடிவு தெரியவரும். இதில் பிரதமர் மேத்யூ ரென்சியின் அரசியல் எதிர்காலம் என்ன ஆகும் என தெரிய வரும். ஒருவேளை கருத்து வாக்கெடுப்பில் தோல்வி ஏற்பட்டால், பிரதமர் மேத்யூ ரென்சி பதவி விலகுவார்.



    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் குருநாதா
    Next Story
    ×