search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திடீரென ஸ்விட்ச் ஆஃப் ஆகும் ஐபோன் : காரணம் இது தான்
    X

    திடீரென ஸ்விட்ச் ஆஃப் ஆகும் ஐபோன் : காரணம் இது தான்

    கடந்த சில வாரங்களாக பல்வேறு ஐபோன் பயனர்களும் தங்களின் ஐபோன்களில் பேட்டரி பேக்கப் இருந்தும் திடீரென அது ஸ்விட்ச் ஆஃப் ஆகி விடுகிறது என குற்றம்சாட்டினர். இப்பிரச்சனைக்கு ஆப்பிள் நிறுவனம் பதில் அளித்துள்ளது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6S ஸ்மார்ட்போனினை பயன்படுத்தியோர் கடந்த சில வாரங்களாக சந்தித்து வந்த ஸ்விட்ச் ஆஃப் பிரச்சனைக்கு ஆப்பிள் நிறுவனம் இணையத்தளம் மூலம் பதில் அளித்திருக்கிறது. அதன்படி பயனர்களின் ஐபோன்களில் சார்ஜ் இருந்தாலும் ஸ்விட்ச் ஆஃப் ஆனதற்கான காரணத்தை தெளிவாக விளக்கியுள்ளது.  

    ஐபோன் 6S ஸ்மார்ட்போனில் இந்த பிரச்சனையை சந்தித்தோருக்கு மாற்று வழிமுறைகளை ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த பிரச்சனையானது ஐபோன் 6S மாடல்களில் மட்டுமே ஏற்பட்டிருக்கிறது என்றும் மற்ற மாடல்களில் இது போன்ற பிரச்சனை ஏற்பட வாய்ப்பே கிடையாது என்றும் தெரிவித்துள்ளது. ஐபோன் 6S மாடல்கள் சார்ஜ் இருக்கும் போதே திடீரென ஸ்விட்ச் ஆஃப் ஆக ஐஓஎஸ் 10.1.1 இயங்குதளம் தான் காரணம் என்றும் கூறப்பட்டது.

    'ஆப்பிள் ஐபோன் 6S மாடல்கள் திடீரென ஸ்விட்ச் ஆஃப் ஆக முக்கிய காரணம் வன்பொருள் கோளாறு சார்ந்தது. செப்டம்பர் முதல் அக்டோபர் 2015 வரை தயாரிக்கப்பட்ட சில ஐபோன்களில் பேட்டரி சாரந்த கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐபோன் சார்ஜ் திடீரென முழுமையாக தீர்ந்து ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிடுகிறது. குறிப்பாக இது பாதுகாப்பு சார்ந்த பிரச்சனை இல்லை' என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஐபோன்கள் திடீரென ஸ்விட்ச் ஆஃப் ஆவது பாதுகாப்பு காரணங்களுக்காக இருக்கலாமே தவிர, அது ஒரு பிழை இல்லை. மேலும் அதிக குளிர்ச்சியாக இருக்கும் இடங்களில் தானாகவே ஸ்விட்ச் ஆஃப் ஆகும் படி ஐபோன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் குறைந்த வோல்டேஜ் இருக்கும் போது போனில் இருக்கும் மின்னணு பாகங்களை பாதுகாக்க முடியும் என ஆப்பிள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 
    Next Story
    ×