என் மலர்

  செய்திகள்

  100-வது பிறந்தநாள் கொண்டாடிய இரட்டை சகோதரிகள்
  X

  100-வது பிறந்தநாள் கொண்டாடிய இரட்டை சகோதரிகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இங்கிலாந்தில் இரட்டை சகோதரிகள் தங்களது 100-வது பிறந்தநாளை ஒரே மாதிரியான உடை அணிந்து ‘கேக்’ வெட்டி கொண்டாடினர்.
  லண்டன்:

  இங்கிலாந்தில் உள்ள ஸ்டூயர் பிரிட்ஜ் பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரிகள் இரெனே குரும்ப்- பிலிஸ் ஜோன்ஸ். இவர்கள் கடந்த 1916-ம் ஆண்டு நவம்பர் 20-ந் தேதி பிறந்தனர்.

  தற்போது இவர்களுக்கு 100 வயது ஆகிறது. அதை தொடர்ந்து சமீபத்தில் இந்த இரட்டை சகோதரிகள் தங்களின் 100-வது பிறந்த நாளை கொண்டாடினார்கள். அப்போது இருவரும் ஒரே நிறத்தில், ஒரே மாதிரியான உடை அணிந்து இருந்தனர். மேலும் ஒரே நேரத்தில் ‘கேக்’ வெட்டி மகிழ்ந்தனர்.

  விழாவில் நண்பர்களும், குடும்பத்தினரும் பங்கேற்றனர். இருவரும் 25 நிமிட இடைவெளியில் பிறந்தனர். ஒரே பள்ளியில் படித்து, ஒரே அலுவலகத்தில் இருவரும் பணிபுரிந்தனர். தற்போது இவர்கள் இருவரும் ஒன்றாகவே வாழ்கின்றனர்.

  90-வது பிறந்த நாளை யும், 99-வது பிறந்த நாளையும் இருவரும் சேர்ந்து கொண்டாடியுள்ளனர். கடின உழைப்பு மற்றும் சிறந்த உணவே தங்களது உடல் நலனுக்கும், நீண்ட காலம் உயிர் வாழவும் உதவும் ரகசியம் என இவர்கள் தெரிவிக்கின்றனர்.
  Next Story
  ×