search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதலில் பலி எண்ணிக்கை 100-ஆக உயர்வு
    X

    ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதலில் பலி எண்ணிக்கை 100-ஆக உயர்வு

    ஈராக்கில் யாத்ரீகர்கள் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 100-ஆக உயர்ந்துள்ளது.
    பாக்தாத்:

    ஈராக்கில் ஷியா பிரிவினரின் வழிபாட்டு தலம் கர்பாலா நகரில் உள்ளது. ஈரானை சேர்ந்தவர்கள் பெரும்பாலானவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்து வருகின்றனர். நேற்று சர்பாலாவில் வழிபாடு முடித்துவிட்டு யாத்ரீகர்கள் ஈரானுக்கு பஸ்களில் திரும்பிக்கொண்டிருந்தனர்.

    வழியில் ஹில்லா என்ற நகரில் பெட்ரோல் கியாஸ் நிரப்பும் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப பஸ்களை நிறுத்தியிருந்தனர். இது பாக்தாத்தில் இருந்து 100 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது.

    அப்போது வெடிகுண்டு ஏற்றிய லாரியுடன் அதிவேகமாக வந்த ஐ.எஸ் தீவிரவாதி ஈரான் யாத்ரீகர்களின் பஸ் மீது பயங்கரமாக மோதினான். இதனால் பஸ்கள் நொறுங்கின அப்பகுதியில் கட்டிடங்கள் இடிந்தன.

    இத்தாக்குதலில் 100 பேர் பலியாகினர். தற்கொலை தீவிரவாதி தாக்குதல் நடத்திய கியாஸ் நிரப்பும் நிலையத்தை ஒட்டி ஓட்டலும் இருந்தது. இதனால் சாவு எண்ணிக்கை அதிகரித்தது.

    இதில் பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் ஈரானை சேர்ந்த யாத்ரீகர்கள் ஆவர். ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருந்த மொசூல் நகரம் மீண்டும் ஈராக் ராணுவ வசமானது. எனவே, அதற்கு பழிவாங்க இது போன்ற தாக்குதல்களை தீவிரவாதிகள் நடத்தி வருகின்றனர்.

    தீவிரவாதிகளின் இத்தாக்குதலுக்கு ஈரான் வெளியுறவு துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நாட்டு செய்தி தொடர்பாளர் கூறும் போது, தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் ஈராக்குக்கு ஈரான் ஆதரவு தொடரும் என கூறியுள்ளார்.

    ஹில்லா நகரில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் அங்கு நின்று கொண்டிருந்த 5பஸ்கள் எரிந்து நாசமாயின, அங்கிருந்த கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் ஒளிபரப்பாயின.
    Next Story
    ×