search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிங்கப்பூரில் கள்ளநோட்டு அச்சடித்த இந்திய வம்சாவளி வாலிபருக்கு சிறை
    X

    சிங்கப்பூரில் கள்ளநோட்டு அச்சடித்த இந்திய வம்சாவளி வாலிபருக்கு சிறை

    சிங்கப்பூரில் 50, 100 டாலர் கள்ளநோட்டுகளை அச்சடித்த இந்திய வம்சாவளி வாலிபருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் வசித்துவரும் சசி குமார் லக்‌ஷ்மணன்(29) என்பவர் பலரிடம் வட்டிக்கு பணம்வாங்கி கடன் தொல்லையில் சிக்கிக் கொண்டார். பிரசவ காலத்தை எதிர்நோக்கி இருக்கும் மனைவியின் மருத்துவ செலவுக்கு மேலும் பணம்புரட்ட முடியாமல் திண்டாடிய லக்‌ஷ்மணன், அந்நாட்டின் பணமான டாலர்களை போலியாக அச்சடித்து பிரச்சனைகளில் இருந்து விடுபட திட்டமிட்டார்.

    முதலில் 50 மற்றும் 100 டாலர் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்தார். பின்னர், அவற்றை நான்கு பிரதிகளாக அச்சிட்டார். மறுநாள் தனது வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் பெட்டிக்கடையில் 100 ரூபாய் கள்ளநோட்டை மாற்றி 21.80 டாலர்களுக்கு இரண்டு பாக்கெட் சிகரெட்களை வாங்கியதுடன், மீதி சில்லரை 78.20 டாலர்களையும் பெற்றுகொண்டார்.

    அடுத்தநாள் அந்த 100 டாலர் நோட்டு கள்ளப்பணம் என்பதை கண்டுபிடித்த கடைக்காரர், இந்த மோசடி தொடர்பாக கடந்த ஜூலை மாதம் 13-ம் தேதி போலீசில் புகார் அளித்தார். லக்‌ஷ்மணனின் வீட்டை சோதனையிட்ட போலீசார் அங்கு 50 டாலர் கள்ளநோட்டு இருந்ததைகண்டு, லக்‌ஷ்மணனை கைது செய்து, வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    நீதிபதி முன்னிலையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட லக்‌ஷ்மணன், கடன் தொல்லையில் இருந்து விடுபடவும், மனைவியின் பேறுகால செலவை எதிர்கொள்ளவும் இந்த தவறை செய்துவிட்டதாக வாக்குமூலம் அளித்தார்.

    இதுபோன்ற குற்றச்செயல்களுக்கு அந்நாட்டில் 20 ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கப்படும் நிலையில் லக்‌ஷ்மணன் மீது பரிதாபப்பட்ட நீதிபதி, அவருக்கு மூன்றாண்டு சிறை விதித்து தீர்ப்பளித்தார்.

    Next Story
    ×