search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீவிரவாதிகளின் புகலிடம் ஜெர்மனி:  துருக்கி அதிபர் பேச்சு
    X

    தீவிரவாதிகளின் புகலிடம் ஜெர்மனி: துருக்கி அதிபர் பேச்சு

    தீவிரவாதிகளின் புகலிடம் ஆக ஜெர்மனி உருவாகியுள்ளது என்று துருக்கி ஜனாதிபதி டய்யீப் எர்டோகன் பேசினார்.
    அங்காரா:

    தீவிரவாதிகளின் புகலிடம் ஆக ஜெர்மனி உருவாகியுள்ளது என்று துருக்கி ஜனாதிபதி டய்யீப் எர்டோகன் பேசினார்.

    துருக்கியில் கடந்த ஜூலையில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் தொடர்புடைய அமெரிக்காவை சேர்ந்த மதகுருவின் ஆதரவாளர்களை வெளியேற்ற ஜெர்மனி தவறி விட்டது என்றும் துருக்கி  அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார்.

    துருக்கியில் கடந்த 30 வருடங்களாக குர்தீஷ் இனத்திற்கு சுயாட்சி கோரி குர்தீஷ் இன போராளிகள் மற்றும் இடதுசாரிகளும் ஆயுத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.  அவர்களுக்கு ஜெர்மனி நீண்ட நாட்களாக தஞ்சம் அளித்து வந்துள்ளது என்றும் எர்டோகன் கூறியுள்ளார்.

    அவர், ஜெர்மனியிடம் இருந்து எதனையும் நாங்கள் எதிர்நோக்கி இருக்கவில்லை.  ஆனால் தீவிரவாதத்தினை தூண்டியதற்காக நீங்கள் வரலாறில் நியாயம் கற்பிக்கப்படுவீர்கள்...  ஜெர்மனி தீவிரவாதிகளின் முக்கிய புகலிடம் ஆக உருவாகியுள்ளது என தலைநகர் அங்காராவில் உள்ள அரண்மனையில் நடந்த விழா ஒன்றில் பேசினார்.

    குர்தீஷ் இன போராளிகள் மற்றும் புரட்சிகர மக்களின் சுதந்திர முன்னணி அமைப்பினர் ஆகியோரை பல வருடங்களாக பாதுகாத்து வரும் ஜெர்மனியை நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம்.  அந்த நாடு முன்னாள் இமாம் மற்றும் துருக்கி நாட்டின் மதபோதகரான குலெனின் தீவிரவாத அமைப்பிற்கு பின்புலம் ஆக உருவாகியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×