search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    50 ஆண்டு உள்நாட்டு போருக்கு முடிவு: கொலம்பியா அமைதி நடவடிக்கையில் ரவிசங்கரின் முக்கிய பங்கு
    X

    50 ஆண்டு உள்நாட்டு போருக்கு முடிவு: கொலம்பியா அமைதி நடவடிக்கையில் ரவிசங்கரின் முக்கிய பங்கு

    கொலம்பியாவில் அரசுக்கும், புரட்சிகர ஆயுத முன்னணி என்ற தீவிரவாத அமைப்பினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள அமைதி நடவடிக்கையில் ரவிசங்கர் முக்கிய பங்கு ஆற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
    பகோடோ:

    ஆப்பிரிக்க நாடான கொலம்பியாவில் அரசுக்கும், பார்க் எனப்படும் புரட்சிகர ஆயுத முன்னணி என்ற தீவிரவாத அமைப்பினருக்கும் இடையே கடந்த 50 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வந்தது. இதனால் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் (செப்டம்பர்) 26-ந் தேதி அரசுக்கும், பார்க் அமைப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் மூலம் 50 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது. அதை தொடர்ந்து கொலம்பியா பிரதமர் ஜுயான் மானுவல் சான்டோசுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

    வரலாற்று சிறப்பு மிக்க இந்த அமைதி ஒப்பந்தம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்தவர் இந்தியாவின் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கர் என தற்போது தெரிய வந்துள்ளது.

    ஒரு நிகழ்ச்சிக்காக கொலம்பியா சென்று இருந்த அவர் பார்க் அமைப்பு மற்றும் கொலம்பியா மக்கள் இயக்கம் உள்ளிட்டவற்றின் தலைவர்கள் 500 பேரை அழைத்து பேசினார். அப்போது நாட்டில் அமைதி நிலவ வேண்டும் எனவும், அதற்கு அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் எனவும் எடுத்துரைத்தார்.

    அரசு தரப்பில் மந்திரி ரபேல் பார்டோ கலந்து கொண்டார். அதன் பின்னர் பார்க் அமைப்பினரால் கடத்தி கொலை செய்யப்பட்ட 12 பேரின் குடும்பத்தினரையும் பார்க் நிர்வாகிகளையும் நேரடியாக சந்திக்க வைத்தார்.

    அப்போது வன்முறையினால் பாதிக்கப்படுபவர்களின் துன்பங்களையும், துயரங்களையும் அறிய செய்தார். இதன் மூலம் பார்க் அமைப்பினரின் மனதில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டு உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது.

    இதற்காக வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு கொலம்பியா அதிபர் சான்டோஸ் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார். மேலும் வரும் நவம்பர் 30-ந்தேதி நடைபெற உள்ள விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு ஸ்ரீரவிசங்கருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    Next Story
    ×