search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இந்திய வம்சாவளி வக்கீல்: தாக்குதல் பின்னணி குறித்து விசாரணை
    X

    அமெரிக்க வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இந்திய வம்சாவளி வக்கீல்: தாக்குதல் பின்னணி குறித்து விசாரணை

    அமெரிக்க வணிக வளாகத்தில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் நடத்தியவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த வக்கீல் என தகவல் வெளியான நிலையில் அந்த தாக்குதல் பின்னணி குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது
    ஹூஸ்டன்:

    அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் மர்ம நபர் ஒருவர் திடீரென புகுந்து, அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் 9 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரைப்பற்றிய கூடுதல் தகவல்கள் தெரியவந்துள்ளன. அவரது பெயர், நாதன் தேசாய் (வயது 46), இந்திய வம்சாவளியை சேர்ந்த வக்கீல். அவர் என்ன காரணத்துக்காக இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தினார் என்பது குறித்து இன்னும் துப்பு துலங்காமல் போலீசார் திணறுகின்றனர்.

    அவரது தந்தை, “எனது மகன் சொந்தமாக சட்ட நிறுவனம் நடத்தி தோல்வி கண்டு அதனால் அதிர்ச்சியில் இருந்தார். வாடிக்கையாளர்கள் பற்றாக்குறை காரணமாக அவர் சட்ட நிறுவனத்தை மூடி விட்டார்” என கூறினார். எனவே தொழில் தோல்வி காரணமாக அவர் மன உளைச்சலில் இருந்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்டாரா என தெரியவில்லை.

    இதுபற்றி ஹூஸ்டன் நகர போலீஸ் அதிகாரி மார்த்தா மாண்டல்வோ கூறும்போது, “என்ன காரணத்துக்காக இந்த துப்பாக்கிச்சூட்டை நாதன் தேசாய் நடத்தினார் என்பதை இன்னும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை” என குறிப்பிட்டார்.
    Next Story
    ×