search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசியான்-கிழக்காசிய மாநாடு முடிந்து தாயகம் புறப்பட்டார் மோடி
    X

    ஆசியான்-கிழக்காசிய மாநாடு முடிந்து தாயகம் புறப்பட்டார் மோடி

    லாவோசில் நடைபெற்ற ஆசியான் மற்றும் கிழக்காசிய மாநாட்டில் பங்கேற்ற இந்திய பிரதமர் மோடி இன்று தாயகம் புறப்பட்டார்.
    வியன்டியான்:

    லாவோஸ் நாட்டில் வியன்டியான் நகரில் 14-வது ஆசியான் மற்றும் 11-வது கிழக்கு ஆசிய மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திரமோடி 2 நாட்கள் பயணமாக லாவோஸ் புறப்பட்டுச் சென்றார். மாநாட்டில் பங்கேற்று பேசிய மோடி, தீவிரவாதம் பரப்பப்படுவதால் பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக பாகிஸ்தான் நாட்டை மறைமுகமாக குற்றம்சாட்டினார்.

    இந்த மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் ஒபாமா, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, லாவோஸ் பிரதமர் தொங்லான் சிகோலித், தென்கொரிய அதிபர் பார்க் ஜியன்-ஹை, மியான்மர் நாட்டின் சிறப்பு ஆலோசகர் ஆங் சான் சூகி ஆகியோரையும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புகளின்போது பரஸ்பர உறவுகள் மட்டுமின்றி தீவிரவாத ஒழிப்பு, வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.

    இந்நிலையில் மோடி தனது 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று லாவோசில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார். பிரதமர் மோடியின் குறுகியகால மற்றும் முக்கியமான பயணம் முடிந்ததையடுத்து விமானம் மூலம் புதுடெல்லிக்கு புறப்பட்டதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் டுவிட் செய்துள்ளார்.
    Next Story
    ×