search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவுக்கு சிறப்பு கூட்டாளி தகுதி: அமெரிக்க பாராளுமன்றத்தில் சட்டதிருத்தம் மீதான வாக்கெடுப்பு தோல்வி
    X

    இந்தியாவுக்கு சிறப்பு கூட்டாளி தகுதி: அமெரிக்க பாராளுமன்றத்தில் சட்டதிருத்தம் மீதான வாக்கெடுப்பு தோல்வி

    பாதுகாப்புத்துறை உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியாவுக்கு சிறப்பு கூட்டாளி தகுதி அளிக்க அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சட்டதிருத்தம் மீதான தீர்மானம் தோல்வியில் முடிந்தது.
    வாஷிங்டன்:

    அமெரிக்க பாராளுமன்றத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் உரையாற்றிய பின்னர் அவரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அதில் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களில் சிறப்புக்குரிய கூட்டாளி நாடாக இனி இந்தியா இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து, இருநாடுகளுக்கும் இடையில் தங்குதடையற்ற ஆயுத பரிமாற்றம் உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    அந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்துவதற்காக அந்நாட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டதிருத்தம் செய்வதற்கான அனுமதி கோரும் தீர்மானத்தை அமெரிக்க பாராளுமன்ற பொதுச்சபையில் ஆளும்கட்சியின் மூத்த எம்.பி.யான ஜான் மெக்கெய்ன் கொண்டு வந்தார்.

    கடந்த இருபது ஆண்டுகளாக இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவுகள் மேம்பாடு அடைந்துள்ளன. பரஸ்பர வளம், மிகப்பெரிய பொருளாதார ஒத்துழைப்பு பிராந்திய அமைதி, பாதுகாப்பு, நிரந்தரத்தன்மை உள்ளிட்ட சிறந்த ஜனநாயக மரபுகள் வாயிலாக சர்வதேச விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு துறையில் அமெரிக்காவின் கூட்டாளி நாடாக இந்தியாவை இணைத்து கொள்ள வேண்டும் என பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த சட்டதிருத்த தீர்மானத்தில் அமெரிக்க அதிபரை ஜான் மெக்கெய்ன் கேட்டிருந்தார்.

    கடல்சார் ஆளுமை தொடர்பான விழிப்புணர்வு, கடல் கொள்ளை தடுப்பு, பேரிடர் காலத்து நிவாரணம் மற்றும் மனிதநேய உதவிகளில் இந்தியாவுக்கு தேவையான நவீனகால தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை அமெரிக்கா வழங்க அதிபர் ஒபாமா ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் அந்த தீர்மானத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    தேசிய பாதுகாப்புத்துறை அங்கீகார சட்டதிருத்தம்-17 (National Defence Authorisation Act-17) என்ற இந்த தீர்மானத்தின்மீது ஆளும் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிகளை சேர்ந்த 98 எம்.பி.க்கள் இன்று வாக்களித்தனர். இந்த தீர்மானத்தை ஆதரித்து 85 பேரும், எதிர்த்து 13 பேரும் வாக்களித்திருந்தனர்.

    எனினும், இதன் உட்பிரிவான அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களில் சிறப்புக்குரிய கூட்டாளி நாடாக இந்தியாவை அறிவிப்பது உள்ளிட்ட சட்டதிருத்தத்துக்கான உபதீர்மானம் (The (Senate) amendment (No 4618) தோல்வியில் முடிந்தது.
    Next Story
    ×