search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளா கோவில் வெடிவிபத்து: பாகிஸ்தான் பிரதமர்-தென் ஆப்பிரிக்க அதிபர் இரங்கல்
    X

    கேரளா கோவில் வெடிவிபத்து: பாகிஸ்தான் பிரதமர்-தென் ஆப்பிரிக்க அதிபர் இரங்கல்

    கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவத்துக்கு பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார்
    ஜோகன்னஸ்பர்க்:

    கேரளாவில் கோயில் திருவிழாவில் நிகழ்ந்த வெடி விபத்தில் பலியானோருக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    கேரள மாநிலம் கொல்லம் புட்டிங்கல் தேவி கோவில் திருவிழாவின்போது பட்டாசுகள் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த துயரச் சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் தனது வருத்தங்களை கூறினார். பாகிஸ்தான் அரசு இரங்கல் செய்தியும் வெளியிட்டது.

    இதேபோல் தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமாவும் இரங்கல் தெரிவித்துள்ளார். கோவில் வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொருவருக்கும், குறிப்பாக பலியான மற்றும் இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தென் ஆப்பிரிக்க மக்கள் சார்பாக தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாக ஜூமா கூறியுள்ளார்.
    Next Story
    ×