என் மலர்
தலைப்புச்செய்திகள்
- வேளாங்கண்ணி, நாகூர், கோடியக்கரையில் சுற்றுலா பகுதிகளை முன்னேற்றம் செய்யலாம், செய்தார்களா...
- நாகூரில் மருத்துவமனையில் பிரசவம் பார்க்கும் மருத்துவரே இல்லையாம்.
நாகை மாவட்டம் புத்தூர் ரவுண்டானா அண்ணா சிலை சந்திப்பில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய த.வெ.க. தலைவர் விஜய் கூறியதாவது:
* மீனவர்களின் கஷ்டத்தை பார்த்து கடிதம் எழுதிவிட்டு அமைதியாக இருக்க நாம் கபட நாடக தி.மு.க. கிடையாது.
* இந்திய மீனவர்கள் தமிழக மீனவர்களை என பிரித்து பார்க்க நாம் பாசிச பா.ஜ.க.வும் கிடையாது.
* பாரம்பரிய கடல்சார்ந்த ஊரில் அரசு மெரைன் கல்லூரி கொண்டு வந்திருக்கலாம், மீன் தொடர்பான ஆலை அமைத்திருக்கலாம்.
* CM சார் மனசை தொட்டு சொல்லுங்க.. வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீடா..
* ஒவ்வொரு முறை வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுவரும் போதெல்லாம் சிரித்துக்கொண்டே பேசுகிறார் CM.
* கடல் அரிப்பை தடுக்கும் அலையாத்தி காடுகளை பாதுகாக்காமல் சொந்த கும்பத்திற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.
* வேளாங்கண்ணி, நாகூர், கோடியக்கரையில் சுற்றுலா பகுதிகளை முன்னேற்றம் செய்யலாம், செய்தார்களா...
* நாகூரில் மருத்துவமனையில் பிரசவம் பார்க்கும் மருத்துவரே இல்லையாம்.
* மீன்வளம் மிக்க நாகையில் மீன் தொழிற்சாலை அமைத்தார்களா அல்லது வேலைவாய்ப்பு அளிக்க தொழில் வளத்தையாவது பெருக்கினார்களா?
* நாகை மக்களின் குடிநீர் பிரச்சனைகளை தீர்க்க காவிரி குடிநீர் திட்டம் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.
* நாகை பேருந்து நிலையத்தில் சுகாதாரம் இல்லை, ரெயில் நிலையத்தில் போதிய வசதிகள் இல்லை.
* நான் களத்திற்கு வருவது ஒன்றும் புதிதல்ல, எப்போதோ வந்துவிட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எங்கு திரும்பினாலும் உழைக்கும் மக்கள் இருக்கும் ஊர் தான் நாகப்பட்டினம் மாவட்டம்.
- மீனவர்களுக்காக குரல் கொடுப்பதும் அவர்களுடன் துணை நிற்பதும் நமது கடமை.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். கடந்த 13-ம் தேதி திருச்சியில் அவரது முதற்கட்ட அரசியல் சுற்றுப்பயணம் தொடங்கியது.
இதில் அவரை காண பல்லாயிரக்கணக்கானோர் திரண்ட காரணத்தினால் திருச்சி மாநகரம் ஸ்தம்பித்தது. திருச்சி விமான நிலையத்திலிருந்து மரக்கடை எம்ஜிஆர் சிலை வரை 7 கிலோமீட்டர் தூரத்தை கடப்பதற்கு 5 மணி நேரம் ஆனது. வழி நெடுகிலும் பிரசார வாகனத்தை பல்லாயிரக்கணக்கானோர் சூழ்ந்து கொண்டனர்.
நள்ளிரவு வெகுநேரம் ஆனதால் திருச்சி மற்றும் அரியலூர் பிரசாரத்தை முடித்துக் கொண்டு சென்னை புறப்பட்டார். பெரம்பலூர் மாவட்ட பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் விஜயின் இரண்டாம் கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் இன்று நடைபெறுகிறது. இதற்காக விஜய் தனி விமானத்தில் இன்று காலை திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு காலை 9:25 மணிக்கு வந்தடைந்தார். இன்றும் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்டனர்.
ஆனால் இன்று முன்னெச்சரிக்கையாக துணை ராணுவப் படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் நுழைவு வாயில் பகுதியிலேயே தமிழக வெற்றி கழக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை தடுத்து நிறுத்தினர். விமான நிலையத்துக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. விமான நிலைய பணியாளர்கள், அடையாள அட்டை வைத்திருந்தவர்கள், டிக்கெட் வைத்திருந்த பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
மாநகருக்குள் நுழையாமல் புறநகர் பகுதி வழியாக செல்வதால் இன்று திட்டமிட்டபடி அவர் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பிரசாரம் செய்ய வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் விஜய் கார் மூலம் புதுக்கோட்டை ரோடு மாத்தூர், சூரியூர் ரிங் ரோடு, துவாக்குடி டோல் கேட் வழியாக தஞ்சாவூர் பைபாஸில் நாகை வந்தார். இதைத்தொடர்ந்து பிரசார வாகனம் மூலம் விஜய் நாகை வந்தடைந்தார். புத்தூர் ரவுண்டானா பகுதியில் அலைஅலையாய் தொண்டர்கள் திரண்டு இருந்தனர்.
நாகை வந்தடைந்த விஜய்க்கு த.வெ.க. தொண்டர்கள் வாளை பரிசாக அளித்தனர். அப்போது புத்தூர் ரவுண்டானா அண்ணா சிலை சந்திப்பில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு த.வெ.க. தொண்டர்கள் வழிவிட்டனர்.
இந்நிலையில் புத்தூர் ரவுண்டானா அண்ணா சிலை சந்திப்பில் தொண்டர்கள் மத்தியில் த.வெ.க. தலைவர் விஜய் எல்லோருக்கும் வணக்கம், எல்லோரும் எப்படி இருக்கீங்க... தொண்டர்களை நலம் விசாரித்து விட்டு உரையை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:
* நாகூர் ஆண்டவர், நெல்லுக்கடை மாரியம்மன், வேளாங்கண்ணி மாதா அருளோடு பேசுகிறேன்.
* அண்ணா அவர்களுக்கு ஒரு வணக்கம். பெரியார் அவர்களுக்கு ஒரு வணக்கம்.
* என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
* இப்ப நான் எந்த மண்ணில் நின்று கொண்டு இருக்கிறேன் தெரியுமா...
* எங்கு திரும்பினாலும் உழைக்கும் மக்கள் இருக்கும் ஊர் தான் நாகப்பட்டினம் மாவட்டம்.
* மதவேறுபாடு இல்லாத மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் நாகை மக்களுக்கு சிரம் தாழ்ந்த ஸ்பெஷல் வணக்கம்.
* என்றும் மீனவர்கள் நண்பன் நான்.
* மீன் ஏற்றுமதியில் 2-வது இடம் வகிக்கும் நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் எந்த வசதியும் செய்யப்படவில்லை.
* மீனவர்களுக்காக குரல் கொடுப்பதும் அவர்களுடன் துணை நிற்பதும் நமது கடமை.
* இலங்கை கடந்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து நான் பேசியது குற்றமா?
* மீனவர்களுக்காக குரல் கொடுக்கும் சமயத்தில் நம் தொப்புள்கொடி உறவான ஈழத்தமிழர்களுக்காகவும் குரல் கொடுப்பது கடமை.
* நாகப்பட்டினத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்திற்கு எங்கள் ஆட்சி தான் புரட்சி என அடுக்குமொழியில் பேசுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று இந்தியா- ஓமன் அணிகள் மோதினர்.
- இந்த போட்டியில் இந்தியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி தனது குரூப் கடைசி லீக் போட்டியில் ஓமனை எதிர்த்து விளையாடியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 188 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய ஓமன் அணி 167 ரன்கள் எடுத்தது. இதனால் இந்தியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக டாஸ் போடும் போது இரு அணி கேப்டன்களும் லெவனில் ஆடும் வீரர்களை மறந்து விட்டனர். அதன்படி டாஸ் போடும் போது இந்திய அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஒன்று ஹர்ஷித் ராணா மற்றும் மற்றொரு வீரர் என சூர்யகுமார் யோசிக்க ஆரமித்தார். சிரித்தப்படியே அட கடவுளே.. நான் ரோகித் போல ஆகிவிட்டேன் என கூறி சிரித்தார்.
அதன்பிறகு ஓமன் அணி கேப்டனிடன் எத்தனை மாற்றங்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவரும் 2 மாற்றம் என கூறி விட்டு ஒரு வீரரை மறந்து விட்டார். சிரித்து கொண்டே இரண்டு மாற்றம் என கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- இந்தியா இன்று வேகமாக முன்னேறி வருகிறது.
- இந்தியாவில் ஆற்றலுக்கு பஞ்சமில்லை.
பாவ்நகர்:
பிரதமர் மோடி, குஜராத்தின் பாவ்நகரில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ரூ.34,200 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:-
இந்தியா இன்று வேகமாக முன்னேறி வருகிறது. உலகில் நமக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை. நமது மிகப்பெரிய எதிரி மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பது தான். வெளிநாட்டு சார்பு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு நாட்டின் தோல்வியும் அதிகமாகும். நாம் மற்றவர்களைச் சார்ந்து இருந்தால் நமது சுயமரியாதை பாதிக்கப்படும். 140 கோடி மக்களின் எதிர்காலத்தை மற்றவர்களிடம் விட்டுவிட முடியாது. நாட்டின் வளர்ச்சிக்கான தீர்மானத்தை மற்றவர்களைச் சார்ந்து இருக்க விட்டுவிட முடியாது. இந்த சார்பு எதிரியை நாம் ஒன்றாக தோற்கடிக்க வேண்டும். இதற்கு சுயசார்பு இந்தியாதான் ஒரே தீர்வாகும்.
இந்தியாவில் ஆற்றலுக்கு பஞ்சமில்லை. ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியர்களின் அனைத்து ஆற்றலையும் காங்கிரஸ் புறக்கணித்தது. இதனால் சுதந்திரம் அடைந்து 6 முதல் 7 தசாப்தங்களுக்குப் பிறகும் இந்தியா அதற்கு தேவையான வெற்றியை அடையவில்லை. காங்கிரஸ் அரசின் கொள்கைகள் நாட்டின் இளைஞர்களுக்கு பெரும் தீங்கு விளைவித்தன.
இவ்வாறு அவர் பேசினார்.
தயாரிப்பாளர் சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி. இப்படத்தை இயக்கியதன் மூலம் உன்னி சிவலிங்கம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஷேன் நிகம் நாயகனாகவும், ப்ரீதி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். சாய் அபயங்கர் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். இப்படம் மலையாளம் மற்றும் தமிழில் வரும் செப்டம்பர் 26ஆம் தேதி வெளியாகிறது. அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. அந்த சந்திப்பில் கலந்து கொண்ட அப்படத்தின் கலைஞர்கள் பேசியதாவது..
இயக்குனர் உன்னி சிவலிங்கம் பேசும்போது,
இது என்னுடைய முதல் பத்திரிகையாளர் சந்திப்பு. மலையாளத்தில் எடுத்தாலும் தமிழ்நாட்டில் பத்திரிகையாளர் சந்திப்பு வைத்திருக்கிறோம். நான் மலையாளி, என்னையும் இப்படத்தையும் 60 சதவிகிதம் மலையாளம் 40 சதவிகிதம் தமிழ் படமாக மலையாளத்தில் இருக்கும். தமிழ் மொழியில் மாறி வரும். அதிரடியாக படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது விளையாட்டு தளமாக இருந்தால் ஆர்வமாக இருக்கும் என்று விளையாட்டை மையப்படுத்தி இயக்கியிருக்கிறேன்.
கச்சிசேரா ஆல்பத்தை பார்த்து தான் சாய்யை முடிவு செய்தேன். இன்று வரை என்னுடன் இருந்து பக்கபலமாக சாய் இருக்கிறார். ஷேன் மிகவும் நன்றாக நடித்திருக்கிறார்.
நடிகர் சாந்தனு பேசும்போது,
பல்டி 4 பசங்களை கொண்ட கதை. ஷேனுக்கு சமமாக மலையாளத்திலோ, தமிழில் மற்றவர்களையோ கூட தேர்வு செய்திருக்கலாம். ஆனால், இப்படிப்பட்ட கதையில் எனக்கு அற்புதமான கதாபாத்திரம் கொடுத்ததற்கு நன்றி. இப்படம் மலையாளத்தில் ரீஎண்ட்ரியாக இருக்கும்.ஷேனிடம் நிறைய கற்றுக் கொண்டேன். திருவிழா காட்சியில் தோன்றும்போது வேறு மாதிரி இருப்பார். நாமும் ஏன் இப்படி இருக்கக் கூடாது என்று கற்றுக் கொண்டேன்.
நடிகர் ஷேன் நிகம் பேசும்போது,
பல்டி ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் டிராமா. 4 பசங்க, அவர்களுடைய கபடி குழு. இதில் வில்லன் வந்தால் எந்தளவிற்கு போராட்டமாக இருக்கும் என்பதே படத்தின் கதை. பினு சேட்டா, சந்தோஷ் சேட்டாவிற்கு நன்றி. செல்வராகவன் சாருக்கு நான் மிகப் பெரிய ரசிகன் அவருடைய புதுப்பேட்டை படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன்.
சாந்தனு மாதிரி ஆர்வமுடன் நடிப்பவர்களை பார்ப்பது அரிது. சாய் நன்றாக இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கு நன்றி. ப்ரீதிக்கு நன்றி மற்றும் இப்படக் குழு அனைவருக்கும் நன்றி.
இப்படம் பிடித்திருந்தால் ஆதரவு கொடுங்கள் என்றார்.
- பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக பல நாடுகள் அறிவித்துள்ளன.
- 193 ஐ.நா. உறுப்பு நாடுகளில் 147 நாடுகள் ஏற்கனவே பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளன.
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக பல நாடுகள் அறிவித்துள்ளன. 193 ஐ.நா. உறுப்பு நாடுகளில் 147 நாடுகள் ஏற்கனவே பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளன.
இந்நிலையில், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை காணொளி மூலம் ஐநா சபையில் உரையாற்ற அனுமதிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.
ஐநா சபையில் பங்கேற்க விடாமல் தடுக்க அவரின் விசாவை அமெரிக்கா ரத்து செய்துள்ள நிலையில், இந்த தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.
முன்னதாக காசாவில் போர் நிறுத்தம் கோரும் ஐ.நா. தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி மீண்டும் ஒருமுறை தோல்வி அடைய செய்தது குறிப்பிடத்தக்கது.
- இதுவரை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் எடுத்துக்கொண்ட சிறப்பு முயற்சிகளின் மூலம், 74% இழந்த பொருட்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளன.
- சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான பயணத்தை வழங்க உறுதி மேற்கொண்டுள்ளது.
மெட்ரோவில் பயணத்தின்போது ஏதேனும் பொருட்கள் தவறவிட்டு மீட்கப்பட்டால், அவை தொடர்புடைய நிலையம் மூலமாகவோ அல்லது "இழந்த மற்றும் மீட்டெடுக்கப்பட்ட பொருட்கள் அலுவலகம்" (Lost & Found Office) மூலமாகவோ பெற முடியும். அதற்காக சென்ட்ரல் மெட்ரோவில் அலுவலகம் திறக்கப்பட்டது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பயணிகள் அனைவரும் தங்களின் பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமென அறிவுறுத்துகிறது. அப்படி ஏதேனும் பொருட்களை தவறவிட்டால், அதற்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பொறுப்பேற்காது. எனினும், பயணத்தின்போது ஏதேனும் பொருட்கள் தவறவிட்டு மீட்கப்பட்டால், அவை தொடர்புடைய நிலையம் மூலமாகவோ அல்லது "இழந்த மற்றும் மீட்டெடுக்கப்பட்ட பொருட்கள் அலுவலகம்" (Lost & Found Office) மூலமாகவோ பெற முடியும்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குநர் மனோஜ் கோயல், (அமைப்புகள் மற்றும் இயக்கம்), புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.இராமசந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் "இழந்த மற்றும் மீட்டெடுக்கப்பட்ட பொருட்கள் அலுவலகத்தை" (Lost & Found Office) திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமை ஆலோசகர் கோபிநாத் மல்லையா, (இயக்கம் மற்றும் பராமரிப்பு), பொது மேலாளர் திரு.எஸ்.சதீஷ்பிரபு, (இயக்கம் மற்றும் பராமரிப்பு), சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதுவரை, தனித்தனி மெட்ரோ நிலையங்கள் வாயிலாக பயணிகளுக்கு இழந்த பொருட்கள் மீட்டு தரப்பட்டது. இதுவரை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் எடுத்துக்கொண்ட சிறப்பு முயற்சிகளின் மூலம், 74% இழந்த பொருட்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளன. இப்போது இந்த அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளதால், பயணிகள் நேரடியாக சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் உள்ள இந்த அலுவலகத்தை அணுகி தங்களின் இழந்த பொருட்களை எளிதில் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த முயற்சி பயணிகள் வசதியை பெரிதும் மேம்படுத்தி, சிறந்த அணுகல் வசதி மற்றும் தடையற்ற அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இழந்த பொருட்கள் தொடர்பான கேள்விகளுக்கு தொடர்பு கொள்ள:
மின்னஞ்சல்: LFO@cmrl.in
இணையதளம்: https://chennaimetrorail.org/lost-and-found-enquiry
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான பயணத்தை வழங்க உறுதி மேற்கொண்டுள்ளது.
2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.
இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக 'காந்தாரா சாப்டர்1' உருவாகி உள்ளது. திரைப்படம் அடுத்த மாதம் 2-ந்தேதி இப்படம் வெளியாக உள்ளது.
இப்படத்தின் தமிழக தியேட்டர் வியாபார உரிமம் சுமார் ரூ.33 கோடிக்கு படத்தின் விநியோகம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், 'காந்தாரா சாப்டர் 1' படத்தை 30 நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் படத்தின் டிரெய்லர் வரும் 22 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட இருக்கிறார், இந்தி மொழியில் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் வெளியிடவுள்ளார்.
காந்தாராவின் முதல் பாகம் மற்றும் கேஜிஎஃப் 2, சலார் ஆகிய படங்களை தயாரித்த ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனமே காந்தாரா சாப்டர் 1-ஐயும் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
- மு.க.ஸ்டாலினுக்கு சாலையின் இருமருங்கிலும் குவிந்திருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னைக்கு கூடுதலாக செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
இதற்காக காரில் ரோடு ஷோவாக செம்பரம்பாக்கம் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சாலையின் இருமருங்கிலும் குவிந்திருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து 265 மி.லி. குடிநீர் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.
படத்திற்கான புரோமோசன் வேலைகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. படத்தின் டிரெய்லரை இன்று மாலை 5 மணிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. கோவையில் உள்ள ப்ரோஸோன் மாலில் இந்த நிகழ்ச்சி நடைப்பெற இருக்கிறது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
- ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் ஓமன் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இந்திய அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சுக்லா 2 பந்தில் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா- ஓமன் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய ஓமன் அணி, யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடினர். அந்த அணி கடைசி வரை போராடி 4 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி தான் தன்னுடைய இன்ஸ்பிரேஷன் என ஓமன் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் விநாயக் சுக்லா கூறினார். மேலும் அவர் ஆட்டங்களை முடித்து அணியை வழிநடத்து விதம் ஈடு இணையற்றது. அவர் எனது குரு என கூறியுள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சுக்லா 2 பந்தில் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.
- H-1B விசா பெற ஆண்டுதோறும் ரூ.88 லட்சம் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவு
- 2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந்நடவடிக்கை அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், H1B விசா என்பது அமெரிக்காவில் வேலை செய்ய வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் வேலை விசா. இதைப் பற்றி சுருக்கமாக இக்கட்டுரையில் பார்ப்போம்.
H1B விசா யாருக்கு எல்லாம் கிடைக்கும்?
* உயர் கல்வித் தகுதி (பொதுவாக Bachelor's அல்லது Master's degree) மற்றும் குறிப்பிட்ட துறையில் திறமை கொண்டவர்கள்.
* பொதுவாக IT, Engineering, Finance, Medicine, Research போன்ற துறைகளில் வேலை பெறுபவர்கள்.
யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?
* தனிநபர் நேரடியாக விண்ணப்பிக்க முடியாது.
* அமெரிக்காவில் உள்ள நிறுவனம் (Employer) தான் விண்ணப்பிக்க வேண்டும்.
செல்லுபடியாகும் காலம்:
* ஆரம்பத்தில் 3 வருடம்.
* அதிகபட்சம் 6 வருடம் வரை நீட்டிக்கலாம்.
விசா தேர்வு முறை:
* ஒவ்வொரு ஆண்டும் H1B lottery system மூலம் தேர்வு செய்கிறார்கள்.
• வருடத்திற்கு சுமார் 65,000 விசா + Master's degree பெற்றவர்களுக்கு 20,000 விசா ஒதுக்கப்பட்டுள்ளன.
சிறப்பம்சம்:
* விசா பெற்றவர் அதே நிறுவனத்துக்கு (Employer) மட்டுமே வேலை செய்ய முடியும்.
* நிறுவனத்தை (Employer) மாற்ற வேண்டுமென்றால் புதிய H1B transfer செய்ய வேண்டும்.
நன்மைகள்:
* அமெரிக்காவில் சட்டப்படி வேலை செய்யலாம்.
* குடும்பத்தினரை (spouse, children) H4 visa மூலம் அழைத்துச் செல்லலாம்.
* நிரந்தர குடியுரிமைக்கு (Green Card) வழிவகுக்கும்.






