என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • பலத்த மழை மற்றும் நிலச்சரிவு ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • சீனாவின் குவாங்டாங் மாகாணத்தை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டு உள்ளது.

    பிலிப்பைன்சின் வடக்கு பகுதியில் ககாயன் மாகாணம் அருகே "ரகசா" என்ற புதிய புயல் உருவாகி உள்ளது.

    இந்த புயல் அங்குள்ள லூசோன் நகரில் இன்று மதியம் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. மணிக்கு 215 கி.மீ. வேகத்தில் காற்று வீசி மழை பெய்வதால் முன்னெச்சரிக்கையாக 10,000க்கும் மேற்பட்ட மக்கள் பள்ளிகள் மற்றும் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    பலத்த மழை மற்றும் நிலச்சரிவு ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    புயல் காரணமாக, மணிலா மற்றும் 29 மாகாணங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. புயல் எச்சரிக்கைகள் காரணமாக, உள்நாட்டு விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

    இதனை தொடர்ந்து புயல் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அங்கு 4,00,000 மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. 

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு 500-க்கும் மேற்பட்ட விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளன.

    புயல் செல்லும் வழியில் உள்ள தைவான் நாட்டிலும் அதிகாரிகள் உஷார் நிலையில் உள்ளனர். 

    • மனைவி காஜல் தேவியுடன் மகாவீர் யாதவ் வசித்து வந்தார்.
    • இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

    ஜார்கண்ட்டில் செல்போன் தர கணவனை மனைவி கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

    ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தில் உள்ள மிஹிஜாம் பகுதியில் மனைவி காஜல் தேவியுடன் மகாவீர் யாதவ் (40) வசித்து வந்தார். பல ஆண்டுக்கான திருமண வாழ்வில் இருவருக்கும் இடையில் அடிக்கடி சச்சரவுகள் இருந்து வந்துள்ளது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, காஜல் தேவி தனது கணவரிடம் செல்போனும், செலவு செய்ய பணமும் கேட்டு அழுத்தம் கொடுத்துள்ளார்.

    இதற்கு மகாவீர் மறுத்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த காஜல் தேவி, கத்தியால் தனது கணவரை குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மகாவீர் யாதவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குற்றவாளியான காஜல் தேவி கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

    • இருவரும் தெலங்கானாவின் கரீம்நகரைச் சேர்ந்தவர்கள்.
    • பஸ்தர் பகுதியில் பல வன்முறைச் சம்பவங்களுக்கு இவர்கள் மூளையாக இருந்துள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரு முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் குறித்த தகவலின் பேரில், அபூஜ்மாட் வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்றபோது அவர்கள் கொல்லப்பட்டனர்.

    அவர்களின் உடல்களும், ஏகே-47 துப்பாக்கி, இன்சாஸ் துப்பாக்கி, வெடிபொருட்கள் மற்றும் பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

    கொல்லப்பட்டவர்கள், மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களான ராஜு தாடா என்கிற கட்டா ராமச்சந்திர ரெட்டி மற்றும் கோசா தாடா என்கிற காதரி சத்யநாராயணா ரெட்டி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் தெலங்கானாவின் கரீம்நகரைச் சேர்ந்தவர்கள்.

    சத்தீஷ்கரின் பஸ்தர் பகுதியில் பல வன்முறைச் சம்பவங்களுக்கு இவர்கள் மூளையாக இருந்துள்ளனர்.

    இவர்கள் இருவர் மீதும் தலா ரூ.40 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புப் படையினரின் இந்த நடவடிக்கைக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

    சத்தீஸ்கரின் மாவோயிஸ்ட் எதிர்ப்புப் போரில் இது ஒரு முக்கிய வெற்றி என்று முதல்வர் விஷ்ணு தேவ் சாய் தெரிவித்தார். 

    • போட்டியின் முதல் பாதியிலேயே உ.பி. யோதாஸ் 15-10 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
    • நான்கு தொடர் தோல்விகளுக்குப் பிறகு உ.பி. யோதாஸ் பெற்ற இந்த வெற்றி அணிக்கு வலு சேர்த்துள்ளது.

    ஜெய்ப்பூரில் நடைபெற்ற புரோ கபடி லீக் போட்டியில், உ.பி. யோதாஸ் அணி தமிழ் தலைவாஸ் அணியை 39-22 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

    போட்டியின் முதல் பாதியிலேயே உ.பி. யோதாஸ் 15-10 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் தமிழ் தலைவாஸ் அணியை ஆல் அவுட் செய்து வெற்றி பெற்றது.

    உ.பி. யோதாஸ் அணியின் சுமித் சங்வான் 5 புள்ளிகள், மகேந்தர் சிங் மற்றும் அஷு சிங் ஆகியோர் தலா நான்கு புள்ளிகள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினர்.

    தமிழ் தலைவாஸ் அணியில், நிதேஷ் குமார் அதிகபட்சமாக ஏழு புள்ளிகள், அர்ஜுன் தேஷ்வால் குறைந்தபட்சமாக இரண்டு புள்ளிகள் எடுத்தனர் .

    நான்கு தொடர் தோல்விகளுக்குப் பிறகு உ.பி. யோதாஸ் பெற்ற இந்த வெற்றி அணிக்கு வலு சேர்த்துள்ளது.  முன்னதாக கடைசி ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியிடம் தமிழ் தலைவாஸ் தோல்வி கண்டது குறிபிடத்தக்கது.

    • அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்துள்ளார்.
    • ஸுபீனின் உடலுக்கு 4 கிலோ மீட்டர் தூரம் வரை வரிசையில் நின்று மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    பிரபல அசாமிய பாடகர் ஜூபின் கார்க் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி சிங்கப்பூரில் கடலில் ஸ்கூபா டைவிங் செய்தபோது விபத்து ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்து அசாம் மக்களின் அன்பை சம்பாதித்தவர் இவர்.

    அவரது உடல் சொந்த மாநிலமான அசாமுக்கு கொண்டுவரப்பட்டு தலைநகர் கவுகாத்தியில் இன்று இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    அவருக்கு இறுதி மரியாதை செலுத்த ஏராளமான மக்கள் அங்கு திரண்டு வருகின்றனர். ஸுபீனின் உடலுக்கு 4 கிலோ மீட்டர் தூரம் வரை வரிசையில் நின்று மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    மறுபுறம் கார்க்கின் மரணம் குறித்த சந்தேகங்களும் எழுந்து வருகின்றன. இதனால் ஜூபின் கார்க்கின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று தெரிவித்தார்.

    மேலும் அவரது உடலுக்கு 2 வது முறையாக பிரேத பரிசோதனை நடத்தவும் அவர் உத்தரவிட்டார்.

    சிங்கப்பூரில் நடந்த முதல் பிரேதப் பரிசோதனையில், அவர் நீரில் மூழ்கி இறந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

    இருப்பினும், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, இரண்டாவது பிரேதப் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    எய்ம்ஸ் மருத்துவர்களால் இந்த பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என ஹிமாந்தா தெரிவித்தார்.

    கார்க்கின் உடல், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 முதல் 10 மணிக்குள் சருசஜாய் மைதானத்தில் இருந்து இறுதிப் பயணத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

    மத்திய அரசு சார்பில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு இறுதிச் சடங்கில் பங்கேற்பார்.

    சிஐடி போலீசார் கார்க்கின் மரணம் குறித்து விசாரிக்கும். இச்சம்பவம் தொடர்பாக, நிகழ்ச்சியின் முக்கிய ஏற்பாட்டாளர் ஷியாம்கானு மஹந்தா மற்றும் கார்க்கின் மேலாளர் சித்தார்த் சர்மா ஆகியோர் மீது ஏற்கனவே எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • வாரணாசியில் தரையிறங்கியதும், அந்தப் பயணி மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினரிடம் (CISF) ஒப்படைக்கப்பட்டார்.
    • அவரிடமும், அவருடன் பயணம் செய்த மற்ற ஏழு பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    இன்று, பெங்களூருவிலிருந்து வாரணாசிக்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது.

    நடுவானில் ஒரு பயணி விமானியின் அறையான காக்பிட் கதவைத் திறக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    அந்தப் பயணி முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்தவர் என்றும், கழிவறைக்குச் செல்ல முயன்றபோது தவறுதலாக காக்பிட் கதவை திறக்க முயன்றதாகவும் ஏர்லைன்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்த சம்பவம் விமானத்தின் பாதுகாப்பு மீறல் இல்லை என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

    காக்பிட் கதவுகள் ரகசியக் குறியீட்டு எண் மூலம் பூட்டப்பட்டிருக்கும். எனவே, அந்தப் பயணியால் கதவை திறக்க முடியவில்லை. விமானம் வாரணாசியில் தரையிறங்கியதும், அந்தப் பயணி மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினரிடம் (CISF) ஒப்படைக்கப்பட்டார்.

    அவரிடமும், அவருடன் பயணம் செய்த மற்ற ஏழு பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களின் உடமைகளும் மீண்டும் சோதிக்கப்பட்டன.

    விமானக் கடத்தல் முயற்சி என்ற சந்தேகம் எழுந்த நிலையில், அந்தப் பயணிக்கு எந்தவொரு தீய நோக்கமும் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

    • 10 முறை தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்காவை வீழ்த்தியது.
    • 4x400மீ தொடர் ஒட்டத்தில் முதன்முறையாக ஆப்பிரிக்கா நாடு தங்கம் வென்றது.

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 4x400மீ தொடர் ஓட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆப்பிரிக்க நாடானா போட்ஸ்வானா தங்கப்பதக்கம் வென்றது.

    4x400மீ பந்தயத்தில் முதன்முறையாக தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது. அதுவும் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி ஆப்பிரிக்க நாடு தங்கப்பதக்கம் வெல்லுவதும் இதுவே முதன்முறை. இந்த வரலாற்று வெற்றியை கொண்டா அந்நாட்டு அதபர் டுமா போகா செப்டம்பர் 29ஆம் தேதி பொதுவிடுமுறை என அறிவித்துள்ளார்.

    நேற்று போட்ஸ்வானாவின் லீக் பெகெம்பிலோ எப்பி, லெட்சில் டெபோகோ, பயபோ என்டோரி, புசாங் கொலன் கெபிநாட்ஷிபி ஆகியோர் சாதனைப் படைத்தார். கடந்த 10 முறை சாம்பியன்ஷின் வென்ற அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளியது. தென்ஆப்பிரிக்கா அணி 3ஆவது இடம் பிடித்தது.

    • கவனமான திட்டமிடல், விவேகமான நிதி மேலாண்மை மற்றும் 5T ஆளுகை மூலம் உபரி வருவாய் ஈட்டலை விரிவுபடுத்தியுள்ளது.
    • வருவாய் தொடர்ந்து அதிகரிப்பது, மத்திய மானியங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க உதவியது.

    ஒடிசா மாநிலம் 2022-23 நிதியாண்டில் உபரி வருவாய் ஈட்டியதில் இந்தியாவின் 3ஆவது பெரிய மாநிலம் என சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 19,456 கோடி ரூபாய் உபரி வருவாய் ஈட்டியது பெருமிதம் என பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

    2000ஆம் ஆண்டில் இருந்து 24 வருடம் நவீன் பட்நாயக் ஒடிசா மாநில முதல்வராக இருந்துள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

    "விவேகமான நிதி மேலாண்மையுடன், 2022-23 ஆம் ஆண்டில் வருவாய் உபரியைக் கொண்ட முன்னணி மாநிலங்களில் ஒடிசாவும் ஒன்று என்பதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    அத்துடன் "கவனமான திட்டமிடல், விவேகமான நிதி மேலாண்மை மற்றும் 5T ஆளுகை மூலம் ஒடிசா அதன் சொந்த வளங்களில் இருந்து வருவாய் ஈட்டலை விரிவுபடுத்தியுள்ளது. வருவாய் தொடர்ந்து அதிகரிப்பது, மத்திய மானியங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், ஏராளமான நலத்திட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லவும் மாநிலத்திற்கு உதவியுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

    OG திரைப்படம் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியாகிறது.

    பவன் கல்யாண் ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தை தொடர்ந்து ஓஜி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சுஜித் இயக்கியுள்ளார். சுஜி இதற்கு முன் சாகோ மற்றும் ரன் ராஜா ரன் இயக்கியது குறிப்பிடத்தக்கது.

    பவன் கல்யாணுடன் பிரியங்கா அருள் மோகன் மற்றும் எம்ரான் ஹம்ஷி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படம் ஒரு கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. ஒரு மிகப்பெரிய கேங்ஸ்டர் ஒரு முக்கியமான மிஷனுக்காக மும்பை வருகிறார்.

    அதன் பிறகு சம்பவத்தை மையமாக வைத்து திரைப்படம் உருவாகியுள்ளது. படத்தின் இசையை தமன் மேற்கொள்கிறார். ஒளிப்பதிவை ரவி கே சந்திரன் மற்றும் மனோஜ் பரமஹம்சா இணைந்து செய்துள்ளனர்.

    திரைப்படம் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தணிக்கை குழு சான்றிதழ் வழங்கியுள்ளது.

    அதன்படி, OG திரைப்படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

    • கொஞ்சம் நேரம் உங்களால் உட்கார்ந்து இருக்க முடியாதா?
    • நான் ஒரு தடவை சொன்னா உங்களுக்கு புரியலயா?

    மைசூரு தசரா திருவிழா உலக புகழ் பெற்றது. இந்த தசரா விழா மைசூருவில் இன்று தொடங்கியது. தொடக்க விழாவில் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா கலந்து கொண்டு பேசினார்.

    அவர் பேசும்போது சிலர் இருக்கையில் இருந்து எழுந்து கூச்சலிட்டு ஏதோ கூறிக்கொண்டே இருந்தனர். இதனால் சித்தராமையாக நிதானத்தை இழந்தார்.

    நிதானத்தை இழந்து அவர் ஆவேசமாக பேசியதாவது:-

    கொஞ்சம் நேரம் உங்களால் உட்கார்ந்து இருக்க முடியாதா? உட்காருங்கள். அது யாரு? நான் ஒரு தடவை சொன்னா உங்களுக்கு புரியலயா? நீங்கள் ஏன் இங்க வந்தீர்கள்? நீ வீட்டிலேயே இருந்திருக்கனும்" என்றார்.

    காவல் அதிகாரிகளிடம் அவர்களை வெளியேற விட்டு விடாதீர்கள். அரைமணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் உட்கார முடியாதா? அப்படி என்றால், ஏன் இந்த விழாவில் பங்கேற்க வந்தீர்கள்.

    இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.

    மைசூரி தசாரா விழாவை தொடங்கி வைக்க Booker Prize வின்னர் பானு முஷ்தாக்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், நீதிமன்றம் அழைப்பு விடுத்ததை தடைசெய்ய மறுப்பு தெரிவித்துவிட்டது.

    • நயினார் நாகேந்திரன் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
    • சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்தித்தார்.

    தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

    டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகிய முக்கிய தலைவர்களை நயினார் நாகேந்திரன் சந்திக்க உள்ளதாக கூறப்பட்டது.

    சேலத்தில் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நயினார் நாகேந்திரன் சந்தித்த நிலையில் இன்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

    மேலும், தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள தனது தேர்தல் சுற்றுப்பயணம் தொடர்பாகவும், கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியானது.

    இந்நிலையில், டெல்லியில் சென்ற நயினார் நாகேந்திரன் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் சந்தித்துள்ளார்.

    அப்போது, தமிழகத்தில் சுற்றுப்பயணம், கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இரு மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
    • போலியாக புலம்பும் சிலர் இனியாவது உண்மையை உணர்ந்து திருந்த வேண்டும்.

    தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த 2 கப்பல் கட்டும் தளங்கள் அமைக்க ரூ.30,000 கோடி முதலீடு மகிழ்ச்சி அளிக்கிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெிரவித்துள்ளார்.

    இதுகுறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தொடர்ந்து தமிழகத்தில் முதலீடு செய்யும் பிரதமர் மோடி அரசு!

    தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த இரு கப்பல் கட்டும் தளங்கள் அமைப்பதற்காக 30,000 கோடி ரூபாயை CSL Cochin

    மற்றும் Mazagaon Dock ஆகிய இரு மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

    முத்துநகராம் தூத்துக்குடிக்கு வருகைபுரிந்து ₹452 கோடி செலவில் தூத்துக்குடி விமான நிலையத்தைப் புதுப்பித்து ₹4,800 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடித்தளமிட்டு இருமாதங்களுக்குள்ளேயே ₹30,000 கோடி மதிப்பில் மேலும் முதலீடு செய்ய முன்வந்துள்ள நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவுமே செய்வதில்லை என்று பொழுது புலர்ந்ததும் போலியாக புலம்பும் சிலர் இனியாவது உண்மையை உணர்ந்து திருந்த வேண்டும்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×