என் மலர்
இந்தியா

செல்போனை தர மறுத்த கணவனை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி
- மனைவி காஜல் தேவியுடன் மகாவீர் யாதவ் வசித்து வந்தார்.
- இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
ஜார்கண்ட்டில் செல்போன் தர கணவனை மனைவி கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தில் உள்ள மிஹிஜாம் பகுதியில் மனைவி காஜல் தேவியுடன் மகாவீர் யாதவ் (40) வசித்து வந்தார். பல ஆண்டுக்கான திருமண வாழ்வில் இருவருக்கும் இடையில் அடிக்கடி சச்சரவுகள் இருந்து வந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, காஜல் தேவி தனது கணவரிடம் செல்போனும், செலவு செய்ய பணமும் கேட்டு அழுத்தம் கொடுத்துள்ளார்.
இதற்கு மகாவீர் மறுத்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த காஜல் தேவி, கத்தியால் தனது கணவரை குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மகாவீர் யாதவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
குற்றவாளியான காஜல் தேவி கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியும் கைப்பற்றப்பட்டுள்ளது.






